Monday, April 29, 2013

புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு பவர் ஸ்டார் மாற்றம்: புலம்பும் தயாரிப்பாளர்கள்

மோசடி வழக்கில் கைதான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு கடந்த 26ம் திகதி நள்ளிரவு மாற்றப்பட்டுள்ளார். தற்போது வேலூர் மத்திய சிறையில் எச்.எஸ்-1 என்ற அறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற கைதிகள் அவரை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முதல் வகுப்பு வசதிகள் கொடுக்கப்படவில்லை. சாதாரண வகுப்புக்கான அறையிலே அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பவர் ஸ்டார் கைதாகி சிறையில் இருப்பதால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரை பதிவு செய்துள்ள தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர். பவர் ஸ்டார் சீனிவாசன் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரங்கநாதனிடம், 50 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையிலேயே புழல் சிறையிலிருந்து தற்போது பவர் ஸ்டார் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை நீக்க

இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென கணக்கு (அக்கவுண்ட்) ஒன்றை அமைப்பது மிக மிக எளிது. ஆனால், அந்த கணக்கினை முடித்துக் கொள்வது அவ்வளவு எளிதான வழியாகக் காட்டப்படவில்லை. அவ்வாறு பதிவை ரத்து செய்து முடித்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டாலும், நாம் ஏற்கனவே அவற்றில் அமைத்த பதிவுகளையும், நம் தொடர்புகளையும் பதிந்து எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். நாம் மேற்கொண்ட தொடர்புகள் நமக்கு எந்த நாளும் நினைவில் இருப்பது உற்சாகம் தரும் என்பதற்காக, இந்த ஆவல் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே, நீங்கள் முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள தொடர்பு தகவல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து, கணக்கை நீக்கும் வழியை பார்க்கலாம். 1.பேஸ்புக்: இன்றைய நிலையில், மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக இணைய தளம் இதுவாகத்தான் இருக்கும். இதில் உள்ள பதிவினை முடிவிற்குக் கொண்டு வர எண்ணினால், உங்களுக்கு இரண்டு வழிகள் தரப்படுகின்றன. இந்த சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதால், நீங்கள் எவற்றை எல்லாம் இழக்கிறீர்கள் என்று தெரியாமல் இருந்தால், தற்போதைக்கு இதனை மூடிவிட்டு, பின் ஒரு நாளில், மீண்டும் இதனைப் புதுப்பிக்க நீங்கள் எண்ணலாம். அதற்கான வழி தரப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ள முதலில் deactivation பக்கத்திற்குச் செல்லவும். சென்றவுடன், நீங்கள் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இனித் தொடர்பு கொள்ள முடியாது, இது உங்களுக்கு இசைவா? என்று ஒரு செய்தி தரப்படும். அதே நேரத்தில், நீங்கள் ஏன் பேஸ்புக் தளத்தினை விட்டு விலகுகிறீர்கள் எனக் கட்டாயமாகக் காரணத்தைப் பதிய வேண்டியதிருக்கும். இதனை முடித்த பின்னர், Confirm என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பதிவு மறைந்துவிடும். இனி, மீண்டும் நீங்கள் பதிவினைப் புதுப்பித்தால் மட்டுமே, நண்பர்களுடன் நீங்களும், நீங்கள் உங்கள் நண்பர்களுடனும் பேஸ்புக் வழியாகத் தொடர்பு கொள்ள முடியும். புதுப்பிக்க வழக்கம் போல அக்கவுண்ட் லாக் இன் செய்தாலே போதும். இப்படி இல்லாமல், நமக்கு இந்த பேஸ்புக் தொடர்பே வேண்டாம் என்று முடிவு செய்தால், நீங்கள் account removal பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு Delete My Account என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். கிளிக் செய்தவுடன், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்டு உறுதி செய்யப்படும். பின்னர், அங்கு கிடைக்கும் கேப்சா சோதனையை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பின்னரும், உங்கள் அக்கவுண்ட் இரு வாரங்களுக்கு இருக்கும். இந்தக் காலத்தில், அந்த அக்கவுண்ட்டைப் புதுப்பிக்க நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உங்கள் அக்கவுண்ட் காலாவதியாகி, நீக்கப்படும். 2. ட்விட்டர்: அடுத்ததாக, பிரபலமாக இயங்கும் சமூக இணைய தளம் ட்விட்டர். இதிலிருந்து விலகும் முடிவினை எடுத்து விட்டீர்களா? ட்விட்டர் இணைய தளத்திற்கு வழக்கம் போலச் செல்லுங்கள். உங்கள் அக்கவுண்ட் பதிவில் நுழையுங்கள். இணைய தளப் பக்கத்தில், வலது மேல் மூலையில் காணப்படும் சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடுங்கள். தற்போது கிடைக்கும் பக்கத்தில் கீழாகக் காட்டப்படும் ‘Deactivate my account’ என்ற தொடர்பில் கிளிக் செய்திடுங்கள். இதில் உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும். தற்போது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை கிடைக்கும். தற்காலிகமாக உங்கள் அக்கவுண்ட் பதிவு நீக்கப்படுவதாகவும், தொடர்ந்து 30 நாட்கள் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்றால், உங்கள் பதிவு நீக்கப்படும் என்று ஒரு செய்தி காட்டப்படும். இந்த 30 நாட்களில், மீண்டும் ட்விட்டர் இணையதளத் தொடர்பு தேவை என நீங்கள் எண்ணினால், வழக்கம் போல லாக் இன் செய்து தொடரலாம். 3. கூகுள் ப்ளஸ்: கூகுள் இணைய தளத்தின் ஒரு பிரிவான, கூகுள் ப்ளஸ் பிரிவில் உள்ள உங்கள் அக்கவுண்ட்டினை, முழுவதுமாகவே நீங்கள் நீக்கிவிடலாம். இதற்கு முதலில் கூகுள் இணையதளம் (www.google.com) செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள உங்கள் அக்கவுண்ட் லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். மேலாகப் பார்க்கையில் இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிந்தாலும், மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நீங்கள் கூகுள் ப்ளஸ் தொடர்பிலிருந்து விலக விரும்பினால், ‘Delete profile and remove related Google+ features’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். தற்போது இதனைத் தேர்ந்தெடுப்பதால், ஏற்படும் விளைவுகள் பட்டியலிடப்படும். கூகுள் தளத்தில் பல இடங்களில் உங்களால் தொடர்பு கொள்ள முடியாது என எச்சரிக்கை கிடைக்கும். இவற்றில் எந்த சேவை எல்லாம் தேவை இல்லையோ, அவற்றை டிக் செய்திடவும். பின்னர் ‘Remove selected services’ என்பதில் கிளிக் செய்திடவும். இதற்குப் பதிலாக ‘Delete your entire Google profile’ என்பதில் கிளிக் செய்தால், யூட்யூப் மற்றும் கூகுள் ப்ளஸ் முதற்கொண்டு பல சேவைகளை நீங்கள் இழக்க வேண்டியதிருக்கும். உங்கள் அக்கவுண்ட்டினை முழுமையாக நீக்க எண்ணினால், உங்கள் அக்கவுண்ட் பிரிவில் Account Management என்பதில் உள்ள ‘Close account and delete all services and information associated with it’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். பல நிலைகளில் உள்ள தகவல்களை இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கையில் நீக்க வேண்டியதிருப்பதால், மீண்டும் உங்களிடம் உறுதி செய்திடும் ஆப்ஷன் கேட்கப்படும். எனவே கூகுள் தரும் பல சேவைகளில் (AdSense முதல் YouTube வரை) எவை எல்லாம் வேண்டாமோ, அவற்றில் கிளிக் செய்து, உறுதி செய்திடவும். உறுதி செய்திடுகையில், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டு உறுதி செய்யப்படும். மீண்டும் ஒருமுறை ‘Yes, I want to delete my account’ என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். மேலே காட்டியுள்ள இணைய தளங்களுடன், Instagram மற்றும் Flickr போன்ற சமூக தளங்களும், இன்னும் சிலவும் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இருந்து நம் பதிவுகளை நீக்குவது எளிதான வழியாகத் தரப்பட்டுள்ளது. எப்போது தேவை இல்லை என்று உணர்கிறோமோ, அப்போதே, நம்மால் ஏற்படுத்தியுள்ள தகவல்களைக் காப்பி எடுத்துப் பின்னர், பதிவை நீக்கிவிடலாம். இதன் தொடர்பில் இன்னொரு தகவலையும் இங்கு காணலாம். இது போன்ற அக்கவுண்ட்களை நீக்குவதற்கென accountkiller என்ற ஒரு புரோகிராம் உள்ளது. இதனை கீழே உள்ள முகவரியின் இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் இணையதளங்களில் உள்ள அக்கவுண்ட்களை நீக்குவதில் உள்ள சிக்கல்களின் அடிப்படையில், அனைத்து தளங்களும் ஒயிட்லிஸ்ட், கிரே லிஸ்ட் மற்றும் பிளாக் லிஸ்ட் என மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒயிட் லிஸ்ட் மிக எளிதான வழிகளைக் கொண்டுள்ள தளங்களையும், பிளாக் லிஸ்ட் சுற்றி வளைத்துச் செயல்பட்டு நீக்கும் தளங்களையும் கொண்டுள்ளன. இடையே உள்ள கிரே லிஸ்ட், சிக்கல்கள் சுமாராக உள்ளனவற்றைக் கொண்டுள்ளன. இணையமுகவரி

இப்படி குட்டை பாவாடை போட்டால் யானைக்கு மூட் கிளம்பாதா என்ன ?

அட இந்த முதலாவது படத்தை பார்த்து அதிர்ச்சியடையவேண்டாம் ! இந்தியாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு வெளியே தான் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யானை தனது தும்பிக்கையை வளைத்து இப் பெண்ணின் தலையைச் சுற்றி பின்னர் உதட்டைல் கிஸ் அடிக்கிறது. இதனால் இவர் திணறிப்போனார்.... ஆனால் அதற்கும் காரணம் உண்டு என்கிறார்கள் சிலர் ! என்ன வென்றால் இப்படி குட்டையான பாவாடையைப் போட்டுக்கொண்டு திரியும் பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்கிரார்கள் சிலர் ! குட்டைப் பாவாடை போட்டால் யானை கூட சும்மா இருக்காது , அதற்கும் மூட் டை அல்லாவா கிளப்புகிறார்கள். பாவம் அது சும்மா இருக்குமா ?

Sunday, April 28, 2013

ஏன் காந்தி மட்டும் தான் சுதந்திரத்திற்கு போராடியவரா, மற்ற தலைவர்கள் மறக்கடிக்க படுவது ஏன்

ஏன் காந்தி மட்டும் தான் சுதந்திரத்திற்கு போராடியவரா, மற்ற தலைவர்கள் மறக்கடிக்க படுவது ஏன்... ஏனைய விடுதலை வீரர்களுக்கும் நாம் மரியாதையை செலுத்த வேண்டும். இந்த கருத்தை ஏற்போர் இதை பகிரவும்.

Tuesday, April 23, 2013

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை இலங்கை தடுக்கவேண்டும்!- மனித உரிமை கண்காணிப்பகம்

பர்மா - அரகான் மாநிலத்தில் இடம்பெறுகின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை வலியுறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் முஸ்லிம்களை பர்மாவின் அதிகாரிகளும், அரகானிஸ் என்ற அடிப்படை வாத அமைப்பின் உறுப்பினர்களும் சேர்ந்து பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆட்படுத்துகின்றனர். அண்மையில் முஸ்லிம் குழு ஒன்றை படகில் இருந்து கடலில் தள்ளிவிட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு இலங்கையின் அதிகாரிகள் சாட்சியாளர்களாக உள்ளனர். எனவே பர்மாவில் இடம்பெறுகின்ற வன்முறைகளைத் உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் சென்னையில் சுட அனுமதி மறுப்பு !

விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர், இலங்கை தேசிய விளையாட்டு அணியில், குறி பார்த்து சுடும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விரைவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் கலந்து கொள்ள இவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இலங்கையின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, இந்த தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலை புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில 12,000 பேர் இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களில் 11,500 பேர் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 180 பேரின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சுகததாச விளையாட்டரங்கில் பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகளில், தேசிய மட்ட குறி பார்த்து சுடும் போட்டியில் 3 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்” என்றார். இலங்கை தேசிய விளையாட்டு அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 முன்னாள் விடுதலைப் புலிகளின் பெயர்கள், கனகசுந்தரம் ராஜீவன், தயாபரன் தவேந்திரன், செல்லமுத்து சுரேஷ்குமார். இலங்கை தேசிய விளையாட்டு அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 முன்னாள் விடுதலைப் புலிகளும், சென்னையில் வரும் ஜூலை மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த 20த் ஆசிஅன் ஆத்லெடிc Cகம்பிஒன்ஷிப் போட்டிகளில் துப்பாக்கி குறி பார்த்து சுடும் போட்டிகளில் கலந்து கொள்ளவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஒருபுறம் இருக்க, தமிழக அரசின் அறிவிப்பு குண்டு தூக்கிப் போட்டுள்ளது. இந்தப் போட்டியை சென்னையில் நடந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதி மறுத்துள்ளார். காரணம் போட்டிகளில் இலங்கை அணியினர் கலந்து கொள்கிறார்கள் என்பதால் தான் ! ஆனால் புலிகளும் இதனால் சென்னையில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ளாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.

Monday, April 22, 2013

தன்னைப் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியவர்களில் ஒருவர் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்: விக்ரோரியா

தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய – தனது நண்பரை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரின் குடும்பம் மகிந்தவுக்கு மிகவும் நெருக்கமானது என்பதால், குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படப் போவதில்லை என்று ரஸ்யப் பெண்ணான விக்ரோரியா கச்சேவா தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கையின் ஆளும்கட்சி உள்ளூர் தலைவர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விக்ரோரியா கச்சேவா இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் முதல் முறையாக – சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்கு செவ்வி அளித்துள்ளார். 24 வயதான விக்ரோரியா கச்சேவா ரஸ்ய மொழி பட்டதாரி. அவருடன் இலங்கையில் விடுமுறையைக் கழிக்க வந்த ஆண் நண்பரான பிரித்தானியாவைச் சேர்ந்த 32 வயதான செஞ்சிலுவைப் பணியாளரான குரம் சேய்க் என்பவரே கொலை செய்யப்பட்டார். தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய – குரம் சேய்க்கை கொலை செய்த குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படப் போவதில்லை என்று அச்சம் கொள்வதாக கச்சேவா கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், மகிந்தவுக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். “அங்கு நியாயமான விசாரணைக்கு வாய்ப்பே இல்லை, ஆனாலும் நீதி நிலைநாட்டப்படும் வரை தாம் ஓயப்போவதில்லை” என்கிறார் கச்சேவா. ‘எனக்குத் தெரியும், எனது இடத்தில் குரம் இருந்திருந்தால், இறுதிவரை செல்வார், அது என்னவோ அதையே நானும் செய்ய வேண்டும்” சிறார்களுக்கும், பெரியவர்களுக்கும் செயற்கைக் கால்களைப் பொருத்தும் செஞ்சிவைக் குழுவின் வல்லுனரான குரம், வடகொரியாவில் பணியாற்றிய போது, 2009இல் கச்சேவாவை சந்தித்தார். அப்போது தலைநகர் பியொங்யங்கில் கொரிய மொழி கற்றுக்கொண்டிருந்தார் கச்சேவா. குரம் காசாவுக்கு இடமாற்றம் செய்யப்படும் வரை அவர்களின் நட்புறவு தொடர்ந்தது. இலங்கையில் விடுமுறையை கழிக்க வந்திருந்த அவர்கள், தங்காலையில் தங்கியிருந்த போது, விடுதிக்கு வந்த குழுவொன்றுடன், நத்தார் இரவு விருந்தின் போது சேய்க்குக்கு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சற்றுத் தொலைவில் கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்த கச்சேவா பிரச்சினையை தீர்க்க அவர்களை அணுகிய போது, ஒருவர் தவறான நோக்கத்துடன் துரத்தத் தொடங்கினார். விடுதியை நோக்கித் திரும்பி ஓட முனைந்த போது அந்தக் குழுவினர் அவரை சூழ்ந்து கொண்டனர். எத்தனை பேர் என்று அவருக்குத் தெரியவில்லை. “நான் அவர்களை பார்க்கக் கூட முடியவில்லை. அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினர். நான் நிலத்தில் விழுந்தேன். எனது கைகளால் தலையைப் பொத்திக் கொண்டேன். அதனால் எவரையும் பார்க்கமுடியவில்லை.” என்றார் அவர். “நீச்சல் குளத்தை அடுத்து அது நடந்தது, .திடீரென அவர்கள் உதைத்தனர். குத்தினர்.” அவரைத் தாக்கியவர்கள் நீச்சல் குளத்தினுள் தூக்கி வீசினர். “குளத்தில் இருந்து தப்பிக்க நான் முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை விடவில்லை.” இறுதியில் ஒருவாறு வெளியேற கச்சேவாவின் தலை உடைந்திருந்தது. “நான் குளத்தின் இன்னொரு பக்கம் வழியாக வெளியேறினேன். சில அடிகளை எடுத்து வைத்தபோது, குரம் தரையில் கிடந்ததை பார்த்தேன். அவரை நோக்கி ஓடினேன். அவரது பெயரைச் சொல்லி அழைத்தேன். ஆனால் பதில் இல்லை. அவருக்கு நினைவு கொண்டு வரமுயன்றேன். அவருக்கு நினைவு கொண்டுவர எதுவுமே இருக்கவில்லை.“ சேய்க்கின் முகத்தில் வெட்டப்பட்டிருந்ததை கச்சேவா கண்டார். அவரைக் கொன்றது குத்துக் காயமா குண்டுக்காயமா என்பதைக் கவனிக்கவில்லை. “எதும் செய்யமுடியாத – உதவியற்ற நிலையில் இருந்த நான் சத்தமாக கத்தினேன். அதன் பின்னர் நான் நினைவிழந்து விட்டேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அதற்கு பின்னர் எதும் ஞாபகத்தில் இல்லை.“ அந்தக் கட்டத்தில் தான், அவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பார் என்று தோன்றுகிறது. ரி சேட் அணிந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து எழுந்திருந்த போது தான் அவரது அடுத்த நினைவுகள் தெரிகின்றன. அந்த ரீசேட் அவருடையது அல்ல. அவருடைய ஆடைகள் இரத்தம் தோய்ந்த நிலையில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உள்ளாடை காணாமல் போயிருந்தது. அவரது முகம் வீங்கியிருந்தது. உடலில் காயங்கள் காணப்பட்டன. நத்தார் நாளன்று காலையில் விடுதியின் அறையொன்றில் கச்சேவா நிர்வாணமாக – மயக்கத்தில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சாட்சிகள் கூறினர். அவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு அல்லது பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதற்கான காயங்கள் காணப்பட்டதாக காவல்துறை அறிக்கை கூறுகிறது. கச்சேவாவுக்கு தான் எங்கே – எப்போது கண்டுபிடிக்கப்பட்டார் என்று நினைவில் இல்லை. “என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் சிந்திக்க முயற்சிக்க வேண்டாம். ஆனால் இது அவமானகரமானது. ஏனென்றால், அவர்கள் குரம்மை கொன்றுள்ளனர். என்னை பாலியல் ரீதயாக தாக்கியுள்ளனர்“ என்கிறார். அவரது உள்ளாடை கண்டுபிடிக்கப்படவில்லை. உடைகள் எங்கோ வீசப்பட்டன. இவை இரண்டுமே காவல்துறைக்கு மரபணுச் சான்றுக்கு உதவக் கூடியவை என்கிறார் கசேவா. குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி எல்லா சந்தேகநபர்களுமே கடந்த நொவம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். “அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, நான் அழிக்கப்பட்டு விட்டேன்“ என்கிறார் கச்சேவா. இந்தச் சம்பவத்துடன் தொடர்டையவர்களை கண்டுபிடிக்க, மரபணு சான்று அறிக்கைக்காக காத்திருப்பதாக கடந்த மாதம் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் பேச வெட்கப்படும்,தமிழ் தமிழ் என்று கூறிக்கொண்டு தமிழனை ஏமாற்றிப் பிழைக்கும் பேர்வழிகள் வெட்கபட வேண்டிய விடயம்"

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது . நன்றி -ஜெய்வந்த் செலவகுமார் via - தமிழச்சி (Thamizhachi)

Friday, April 19, 2013

கார் மீது விழுந்த நாசாவின் செயற்கைக்கோள்… குழப்பத்தில் ஆழ்ந்த மக்கள்

கார் மீது விழுந்த நாசாவின் செயற்கைக்கோள்… குழப்பத்தில் ஆழ்ந்த மக்கள்

செங்கலடி தம்பதிகள் படுகொலை! மாணவர்கள் ஒழுக்கக்கேடுகள் தொடர்பாக கல்விப்பணிப்பாளர் கருத்து!

செங்கலடி மத்திய கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கக்கேடுகள் தொடர்பாக ஏற்கனவே தமது கவனத்திற்கு பல புகார்கள் கிடைத்துள்ளதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார். செங்கலடி நகர வர்ததகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும் ஏறாவூர் பொலிஸாரால் சந்தேகத்தின பேரில் கைதாகி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். குறித்த மாணவிக்கும் மாணவனொருவனுக்கும் இடையிலான காதல் தொடர்புகளின் பின்னணியிலேயே இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர்கள் ஒழுக்கக்கேடு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த மாதம் இந்த ஒழுக்கக்கேடுகள தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்கள் ஒழுக்கம் தொடர்பாக பாடசாலை நிருவாகத்தினருக்கு பல்வேறு உத்தவுகளைப் பிறப்பித்திருந்தேன். மாணவர்கள் விடும் ஒழுக்கக் கேடுகள் பற்றி சுடடிக்காட்டினாலும் பாடசாலை நிருவாகம் அதனை மூடி மறைப்பதற்கே முற்படுகிறது. இதன் விளைவாகவே குறித்த கொலைச் சம்பவம் பலரும் கூறுவதை மறுக்க முடியாத நிலையே உள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் சந்தேக நபர்களாக காணப்படுவது தொடர்பான நிருவாக ரீதியான விசாரணைகள் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆசியர்கள் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பாடசாலை சமூகத்துடன் இதுபற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும். இந்த பாடசாலையைப் பொறுத்தவரை புதிய மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கமைய 7 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய அதிபர் உட்பட சகல ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்குவது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளரின் கவனத்திறகு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது என பதிலளித்தார்.

புதிய காதலனை தெரிவு செய்தார் தீபிகா படுகோன்?

பாலிவுட் முன்னணி நாயகியான தீபிகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங்குடன் நெருக்கமான நடப்பில் இருந்தார். காதலித்த இருவரும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளுக்கு ஜோடியாக வந்தனர். சமீபத்தில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். தீபிகாவை உசுப்பேற்றும் வகையில் கேத்ரினா கைப்புடன் நெருக்கமாக பழகி வருகிறார் ரன்வீர் சிங். இதனால் வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவதை தீபிகா தவிர்த்து வந்தார். தற்போது ‘ராம் லீலா‘ என்ற படத்தில் தீபிகா நடித்து வருகிறார். நாயகனாக சுசாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல மூன்றரை மணி நேரம் ஆகும். இதற்காக அதிகாலை 2.30 மணிக்கே ஓட்டலிலிருந்து மேக்கப் அணிந்துகொண்டு புறப்பட வேண்டி இருக்கிறது. தீபிகாவும், சுசாந்தும் அதிகாலையிலேயே ஒரே காரில் புறப்படுகின்றனர். அப்போது இருவரும் மனம் விட்டு பேசும் தருணம் கிடைக்கிறது. இதில் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டிருக்கின்றனர். இவர்களின் நட்பு தற்போது காதலாக மலர்ந்திருக்கிறது என்று பட யூனிட்டில் பேசப்படுகிறது. ஒரு கட்டத்தில் தீபிகாவை மணந்துகொள்வதற்கான தனது விருப்பத்தையும் சுசாந்த் தெரிவித்தாராம். ஆனால் அது பற்றி யோசிக்க அவகாசம் வேண்டும் என்று தீபிகா கூறிவிட்டாராம். பாலிவுட்டில் இவர்களின் காதல் கிசுகிசு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெரிய கோயிலில் ராஜ ராஜ சோழன் காலம் முதல் மராட்டிய மன்னன் சரபோஜி மன்னன் காலம் வரையான கல்வெட்டுகள் உள்ளன...இவற்றில் கிடைத்த தகவல்கள் சுவையானதாகும்..

தஞ்சை பெரிய கோயிலில் ராஜ ராஜ சோழன் காலம் முதல் மராட்டிய மன்னன் சரபோஜி மன்னன் காலம் வரையான கல்வெட்டுகள் உள்ளன...இவற்றில் கிடைத்த தகவல்கள் சுவையானதாகும்.. 1.கல்வெட்டுகள் அனைத்தும் திருமகள் போல செந்திரு மடந்தை என்று மஹா லட்சுமியை குறிப்பிட்டே தொடங்குகின்றன. 2.ராஜ ராஜ சோழன்,அவனுடைய சகோதரி,பட்டத்து அரசிகள் ,சோழ நாட்டு மக்கள் ஆகியோர் அளித்த பொன்னும்,பொருளும் முழுமையாக பட்டியல் படுத்தப்பட்டு உள்ளது. 3.பெரிய கோவில் நிர்வாக அலுவலராக விளங்கியவர் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன்மூவேந்தன் வேளான் 4. அரண்மனை ராஜகுருவாக இருந்தவர் ஈசான சிவபண்டிதர் 5. கோயில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் பவண பிடாரன் 6. கல்வெட்டில் இடம்பெறும் செய்திகளுக்கு மெய் கீர்த்தி என்று பெயர்...இதனை செதுக்கியவர் பாளூர் கிழவன் 7. கோயிலை கட்டிய தலமை சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சன் 8. கோயிலில் தேவாரம் பாட 50 ஓதுவார்களும் ஆடல் மகளிராக 400 பேரும் நியமிக்கபட்டனர்.அவர்களுக்கு வீடுகளும் ,பொன்னும்,பொருளும் நெல்லும் அளிக்கபட்டன 9. கோயிலில் பணிபுரிந்த பணியாளர்களின் எண்ணிக்கை 1500 10. அனைத்து செப்பு திருமேனிகளையும் இராஜராஜ சோழன்,அவரது மனைவி,சகோதரிகள்,அரண்மனை நிர்வாக அதிகாரிகள் என்பவர்கள் தனித்தனியே செய்து தந்துள்ளனர். 11. இரண்டு நிதிநிலை கருவூலங்கள்(வங்) இங்கு இயங்கி வந்தன.. 12. கோயிலுக்கு அளிக்கபட்ட பொன்,பொருள் ரெத்தின நகைகள்,தங்கங்கள் என்பவற்றின் மதிப்பு துல்லியமாக கணிக்கபட்டு குறிக்கப்பட்டு உள்ளது 13. அந்த எடைபோடும் தராசை கூட "ஆடவல்லான் நிறை" என்று சிவன் பெயரிலேயே அழைத்தனர் 14. சுவாமிக்கு அணிவிக்கும் ஒரு முத்துமாலையை கூட "நூல் நீக்கி முத்துமாலையின் எடை" என்று துல்லியமாக குறிபிட்டு இருப்பது மன்னனின் நேர்மையை காட்டுகிறது 15. தமிழகம் மட்டுமல்லாது கேரளம்,கர்நாடகம்,ஆந்திரம் ஆகிய இடங்களிலும் கோயிலுக்கு நிலங்கள் இருந்தன 16. கோயிலில் நெய் தீபம் ஏற்ற பசுமாடுகள்,ஆடுகள் தஞ்சாவூரை சுற்றியுள்ள பல இடங்களில் வளர்க்கபட்டு வந்தன...அங்கிருந்து பெறபட்ட நெய்யில் இருந்து கோயில் விளக்குகள் எரிக்கபட்டன 17. கோவில் இசை,நடன ,நாடக கலையரங்காக இருந்தது...மன்னனால் கலைஞர்கள் பெரிதும் ஊக்கிவிக்கபட்டனர் 18. சோழர்களின் போரின் போது பெறப்பட்ட முழு செல்வங்களும் கோயிலுக்கு அளிக்கபட்டது. 19. முடி திருத்துபவன் "ராஜ ராஜ நாவிதன்" என்று பட்டம் கொடுக்கபட்டு கெளரவிக்கபட்டனர்.. 20. கல்வெட்டில் அப்போதைய மரங்கள் ,பெரிய அங்காடிகள் பற்றிய குறிப்பும் உள்ளது 21. ராஜ ராஜேஸ்வர நாடகம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டது 22. இது தவிர விஜயநகர் மன்னர்கள்,மராட்டிய மன்னர்கள் ஆகியோரின் கொடை விபரங்களும் குறிப்பிடபட்டு உள்ளது 23. இதுவரை படியெடுக்கபட்ட 100 கல்வெட்டுகளில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது தஞ்சை பெரிய கோவிலுள்ள விநாயகர் சன்னதியின் தென்புற வெளிச்சுவரில் :போனஸ்லே வம்ச சரித்திரம்" என்ற தஞ்சை மராட்டிய மன்னன் 2ம் சரபோஜி மராட்டிய மொழியில் கல்வெட்டாக வெட்டசெய்து உள்ளான். இந்த கோவில் கி.பி 1006ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கபட்டு கி.பி 1010 ம் ஆண்டு கட்டி முடிக்கபட்டது. 1987 இல் இக்கோவில் யுனெஸ்கோவில் தேசிய மரபுரிமை சின்னமாக அறிவிக்கப்பட்டது

Thursday, April 18, 2013

இன்று திருநங்கையர் தினம்

இன்று திருநங்கையர் தினம் இந்தியாவிலே முதன் முதலாக தமிழ்நாட்டில்தான் அவர்களுக்கு என தனித் தினம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கிறதோ, அதைப் போலவே திருநங்கைகளையும் இயற்கைதான் படைத்திருக்கிறது. திருநங்கைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து , வேலையும் கொடுத்து அவர்கள் வாழ்கையில் விளக்கேத்தி வையுங்கள்.அவர்களையும் கவுரவமான வேலை செய்ய உங்களால் ஆன முயற்சி செய்யுங்கள். திருநங்கைகளும் மனிதர்களே நாம் இன்று பயன்படுத்தும் காகிதத்தை கண்டுபிடித்தவர் ஒரு திருநங்கை. அவர் பெயர் சாய் லூன். வாழ்த்துக்கள் உறவுகளே.. திருநங்கை தினம் திருநங்கைகளின் சமூக பாதுகாப்பை கருதி அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 15ம் நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாட தமிழக அரசு மார்ச் 1, 2011 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இத்தினத்தை அறிவித்துள்ளது. திருநங்கை (Transwoman) எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். திருநங்கைகள் தங்களின் உரிமைகளை பெற தற்போது பெரிதளவில் முயன்று வருகின்றனர். இதுவே இவர்கள் சமூக நிலையாக இருக்கிறது. ஆயிஷா பாரூக் அவர்களின் வரிகளில் திருநங்கை என்பவள்.. "மங்கையானவள் திருநங்கையானவள் நிழலின் இருளில் சிரிப்பவள் அன்பின் ஊற்றாய் பிறந்தவள் வலியின் வலியை தாங்கியவள் திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள் ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்" . திருநங்கை ரேவதியின் பேட்டி http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Np460L96qrA திருநங்கை ரோஸ் வெங்கடேசனின் பேட்டி http://www.youtube.com/watch?v=ssEZRVi4LI4 திருநங்கை சரணின் பேட்டி http://www.youtube.com/watch?v=CBes3X4rgzI மற்றும் சில காணொளிகள் http://www.youtube.com/watch?v=eEpRehJmPLw Transgender Talk Show (Thirunangai) http://www.youtube.com/watch?v=mu7I-Ni6v-I http://www.youtube.com/watch?v=J9eQcdxn0OQ http://www.youtube.com/watch?v=fS1u71UGl5Q

Wednesday, April 17, 2013

FACEBOOK உருவான கதை...

அன்பு நண்பர்களே இவை என் பதிப்பு இல்லையென்றாலும் உங்களுக்கு உதவும் என்பதே என் மகிழ்ச்சி .. கிழே இருப்பவர் FACEBOOK OWNER - facebook owner mark zuckerberg. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பி னராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும். 2005 காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன் பிருந்தே இவ்வளவு போட்டி! ‘மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?’ ஃபேஸ்புக் போன்ற சோஷி யல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள். இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்

சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள் : இனத் துரோகத்தின் உச்சகட்டம் !

சரவணா ஸ்டோர்ஸ் முழுக்க சிங்களவ மொழி அறிவிப்புகள் : இனத் துரோகத்தின் உச்சகட்டம் ! இனத் துரோகத்தின் உச்சகட்டம் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் தான் என்று சொல்ல வேண்டும். தமிழ் நாடே சிங்களவர்களுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கிறது . ஆனால் சரவணா அங்காடியோ சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது . இந்தக் கடையில் பலவகையான சிங்கள பொருட்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது சரவணா நிர்வாகம். இந்த கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருட்களை வாங்க வருகிறார்கள் . அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்கள் வசதிக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது . தமிழில் கொடுத்தது போய் இப்போது சிங்களத்தில் கொடுப்பது தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது . கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் எந்த தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களை சிங்கள மொழியிலேயே அச்சடித்து சிங்கள மக்களை கவர்ந்து வருகிறது சரவணா நிர்வாகம் . இதை பார்த்த ஒரு உணர்வாளர் , கடை நிர்வாகத்திடம் இது பற்றி கேட்டுள்ளார் . கடை நிர்வாகம், ஆமாம் ! சிங்களவர்கள் வசதிக்காக நாங்கள் இதை செய்துள்ளோம் . அவர்கள் நிறைய பேர் இங்கு வந்து போகிறார்கள் . வாடிக்கையாளர் சேவை தான் எங்களுக்கு முக்கியம் என்று வெட்கம் இல்லாமல் கூறியுள்ளனர் . தமிழர் கடையாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை பொறுத்த மட்டில் பணம் ஒன்று தான் அவர்கள் குறிக்கோள் என்பது இப்போது தெளிவாகி உள்ளது . வடநாட்டு ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டின் நிறுவனமான சரவணா கடையை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும் . 1. சரவணா நிறுவனம் சிங்கள உற்பத்தி பொருட்களை விற்பதை தடை செய்ய வேண்டும் .2. சிங்களவர்களிடம் சந்தை விரிப்பதை நிறுத்த வேண்டும் . இதை சரவணா ஸ்டோர்ஸ் செய்ய மறுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான பரப்புரையில் நாம் ஈடு பட வேண்டும் . தேவைப்பட்டால் , அவர்கள் கடையை முற்றுகையிட வேண்டும் . அதற்கும் அவர்கள் செவி சாய்க்க வில்லை என்றால் அவர்கள் கடையை புறக்கணிப்போம் , தமிழன் திருந்தாமல் நாம் வேறு யாரையும் திருத்த முடியாது . உடனே சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை கண்டிப்போம் . சிங்கள பொருட்களை அவர்கள் கடையில் இருந்து அப்புறப் படுத்துவோம். சிங்கள நுகர்வோரை இங்கு வந்து பொருட்களை வாங்குவதை தடுப்போம் . தமிழர் கடையை சிங்கள மயமாவதை நிறுத்துவோம் ! இந்த செய்தியை அத்தனை தமிழ் அமைப்புகள் , கட்சிகளுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம் சரவணா அங்காடி புரசைவாக்கம் 044 26603777 044 26613777 இத்தகைய உணர்வுப்பூர்வாமான தகவலை தமிழ் தமிழர்கள் பக்கத்திற்கு அளித்த ( SPM கிங் ) என்கிற தமிழருக்கு தமிழர்கள் சார்பாக் நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்

Tuesday, April 16, 2013

தோப்புக்கரணத்தின் சிறப்பை அமெரிக்கர்கள் தட்டிச்சென்றுவிட்டார்கள்

இதனையே ஒரு தமிழன் கண்டு பிடித்து இந்த உண்மையை சொல்லி இருந்தால் எத்தனை தமிழர்கள் அவனை பைத்தியம்/ஏமாற்றுக்காரன் .....என கிண்டலடித்து இருப்பார்கள்!!!! இப்பொழுது தோப்புக்கரணத்தின் சிறப்பை அமெரிக்கர்கள் தட்டிச்சென்றுவிட்டார்கள்! நாம் எதற்கெடுத்தாலும் மேற்குலகத்தை வாய்பிளந்து பார்க்கிறோம். ஆனால் அவர்களோ நம்மிடம் உள்ள நல்ல விடயங்களை திரித்து பெயர் பெற்றுவிடுகிறார்கள். இனியாவது சிந்தியுங்கள்!

எலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து!

எலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து! எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு. முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் உடலுக்கு ஒத்துகொள்ளும் தன்மை உடையாது அதனால்தான் வெளிநாடுகளில் இதை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மேலை நாட்டில் இருந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது. பச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்ட எலுமிச்சம் பழ ரசம் சிறப்பாகப் பயன்படுகிறது. சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது. நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். எலுமிச்சம் பழச்சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும். எலுமிச்சைச் சாற்றைத் தனியாக அருந்தினால் பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும். எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும். எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம். அத்தோடு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிப்பது நலம். பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம். சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும். எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும். எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும். எலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும். எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது. உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது. மற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது

வன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்

இந்தப் பதிவானது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்து தற்போது அந்த இயக்கத்தின் போராளிகளின் அர்ப்பணிப்பை பொய்யென உரைக்க முயலும் தளமொன்றிற்காக அதன் உண்மை ஆதாரத்தை வழங்குவதற்காக எழுதப்படுகிறது. இந்த படங்களை பெறுவதற்காக எனது நண்பர் ஜீவன் அவர்கள் தனது உந்துருளியையே தந்திருந்தார். நேற்று முழுதும் சாவகச்சேரிப் பகுதியில் அலைந்து பெற முடியாமல் போனதை இன்று பருத்தித்துறை பகுதியில் பாடசாலையில் சமையல் வேலை செய்பவர் ஒருவரின் வீட்டில் இருந்து பெறமுடிந்தது.அவர்கள் வழங்கிய செய்தியென்னவென்றால் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட செறிவூட்டப்பட்ட விட்டமின்களை புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற தொனிப்பொருளில் அவர்கள் இணையத்தளத்துக்கு கிடைத்த செய்தியாகப் பகிர்ந்திருந்தார்கள். அப்படியானால் நான் கேட்கிறேன் என்னிடமும் அந்த கலன்கள் இருக்கிறது. அப்படியானால் எனக்கும் அமெரிக்காவிற்கும் தொடர்பிருக்கிறதா? புலிகள் பயன்படுத்தினார்கள் என்றால் அது பற்றி சிந்திப்பதே இல்லையா? இது பற்றி வைத்தியசாலை ஒன்றினுள் வேலை செய்தவரிடம் கேட்டிருந்தாலே முழுத்தகவலும் கிடைத்திருக்குமே. 5 நாளுக்கு மேல் சாப்பிடாமல் களத்திலிருந்து காயப்பட்டவளும் இருக்கிறார்கள். ஒரு நாள் வயிற்றோட்டத்திற்கே 3 சேலைன் ஏற்றியவர்கள் இருக்கையில் எத்தனையோ நாள் ஒழுங்கான நீர் இன்றி இறந்தவர்கள் இருக்கிறார்கள். காயத்தால் குருதி வெளியேறியிருக்கும் அதை ஈடு செய்வதற்கு முன்னர் அவர்களது உடல் நிலையை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே உயிர் பிரிந்து விடும். இவை ஒரு சிலது மட்டுமே இப்படி பல நூறு கதைகள் இருக்கையில். ஒரு அர்ப்பணிப்பாளர்களைப் பற்றி எதுவும் சிந்திக்காமல் எழுதுவது என்பது மிகவும் அபத்தமானது.இந்த படங்களை பாருங்கள் புரியும். அப்படத்தில் உள்ளது USA aid என்ற திட்டத்தின் மூலம் ஐநாவானால் பாடசாலை மாணவருக்கான உணவுத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட தேங்காய் எண்ணெய்க் கலன்களாகும். இது வன்னியில் மட்டுமல்ல யாழின் பட்டி தொட்டியெங்கும் இருந்த ஒன்று. ஆனால் இரும்பு வியாபாரிகளின் வருகையால் அருகி விட்ட நிலையில் தான் அதன் படம் எடுப்பதற்காக நேற்றும் இன்றும் நான் அலைய வேண்டிய தேவை வந்து விட்டது. செய்திக் கணக்குக்காக இணையத் தளங்களால் வெளியிடப்படும் செய்திகளால் காலப் போக்கில் வரலாறுகள் மாற்றப்படலாம். இதே செய்தி இன்னும் சில நாளில் அமெரிக்க வழங்கிய செறிவூட்டிய விட்டமின்களில் நஞ்சு கலந்திருந்தார்கள் எனவும் செய்தி வரலாம். இதை அத்தளத்துக்கு எடுத்துரைக்க பல முறை மினு்னஞ்சலில் தொடர்பு கொண்டும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை அதனால் தயவு செய்து இந்தச் செய்தி எத்தனை பேரிடம் போய்ச் சேர்ந்து தவறான எடுகோள் எடுக்கப்பட்டதோ தெரியவில்லை அதனால் இந்தச் செய்தி தவறானது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். யார் வேண்டுமானாலும் இந்தத் பதிவையோ அல்லது இதில் கூறப்பட்டுள்ள செய்தியையோ எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் ம.தி.சுதா நன்றி http://www.mathisutha.com/2012/05/blog-post_19.html

Monday, April 15, 2013

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம்போற்றுதலுக்குரியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.. உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன். இராவணன் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன இராமாயணத்தில் இராவணன் இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும். இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்? இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா. அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம் குடும்பம் இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர் வேத வித்தகன் இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.) கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டார் ஏது இங்கே பிரச்சினைகள்? இராவணன் நீர்வீழ்ச்சி இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை - வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அறிப்பு துரிதமாக நடைபெறுகின்றது. மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும். இராவணன் காலத்து ஆலயங்கள் திருக்கேதீசுவரம் 1930களில் இந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக்கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன். "வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். " இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது. சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம். இதைவிட.....இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது. இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம். திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது. திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம். இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும். இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன். இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்.... தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம். திருக்கேதீசுவரம் இன்று இராவணன் வெட்டு படத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது. சிகிரியாக் குன்றம் சிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்.... இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை. இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன. இராவணன் ஆட்சி மகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்... அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம். புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது. குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:- - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது. - ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றொயிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள். அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம் பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள். சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள். இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்... திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம். இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள் - சயம்பன் - சயம்பனின் மருமகன் யாளிமுகன் - ஏதி - ஏதியின் மகன் வித்துகேசன் - வித்துகேசனின் மகன் சுகேசன் - சுகேசனின் மகன் மாலியவான் - மாலியவான் தம்பி சுமாலி - குபேரன் இராவணன் ஆட்சி அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள் திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை சிங்களவர் ஆரியர்களின் வழித்தோன்றல்கள் இல்லையாம்; அமைச்சர் சம்பிக்க கண்டுபிடிப்பு சிங்களவர் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையென மின்வலு மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வரலாற்று ஆசிரியரான அரிசன் ஹாபோதுவின் 'இர ஹந்த நெகி ரட்ட' எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அதில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், விஜயன் குவேனி காலத்திற்கு முன்பே இந் நாட்டில் மக்கள் வாழ்ந்து வந்தமை அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வில்பத்து போன்ற பிரதேசங்களில் இதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சிங்களவர்களின் மூதாதையர்கள் ஆரியர்கள் இல்லை. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் விரைவில் நிரூபிப்பார்கள். ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே இலங்கையில் விமானம் போன்ற போக்குவரத்துச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இராமயணத்தில் புஷ்பக விமானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எமது வரலாற்று சின்னங்களை சிங்களவர்கள் தமதுயையது என்று உரிமை கொண்டாடுவதை பலவழிகளில் பார்த்து இருக்கின்றோம் ராவணன் சிங்கள இனத்தவன் என்று வந்தேறிகளான சிங்களவர் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக சொல்ல வெளிக்கிட்டு விட்டார்கள் தமிழ் இனமே விழித்துக்கொள் சிங்களவர்கள் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதுபோல் மகாவம்சம் பல பொய்கள் நிறைந்த வரலாற்று மதிவு என்பதை மைச்சர் சம்பிக்க ஏற்றுக்கொள்வார முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரியா நாடு இங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் மக்களின் மூதாதையினரான இயற்கரும் நாகரும் ஆவார் ஆரிய மொழி இலங்கையில் அறியப்படுயதட்கு முன்பு தமிழ் மொழியைத்தான் பேசிவந்துள்ளனர் தமிழர்கள்தான் இலங்கையின் பூர்விக குடிமக்கள் சிங்களவர்களின் மொழி ஆரிய தமிழ் கலப்பு மொழி சிங்களவர்கள் வந்தேறிகள் என்பதற்கு பல பொய்கள் நிறைந்த மகாவம்சம் சாட்சியாக இருக்கின்றது இலங்கை வரலாறு பற்றிப் பேசும் நூல்களில் மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த நூல் முதன்மையானது. இது பௌத்தத் துறவிகளால் எழுதப்பெற்றது.இந்நூல் மூலமாக இலங்கையில் மிகப்பழைய காலத்திலேயே சைவசமயம் முக்கியமாக இருந்திருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது. இலங்கையில் பொ.மு 3ம் நூற்றாண்டில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பது. அவனது முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிறத ு. இம்மொழி சமஸ்கிருதம், தமிழ், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகும் விஜயன் இலங்கைக்கு வர முன்னரே இலங்கையில் தமிழ் மக்களின் மூதாதையினர் நாகரியம் அடைந்த ஒரு இனமாக சிவா வழிபாடு செய்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர் பின் விஜயனோடு வந்த பிராமணர்கள் இலங்கையில் ஐந்து திசைக்கு சென்று அங்கிருந்த சிவா ஆலயங்களுக்கு பூசைகள் செய்ததாக அறியமுடிகிறது. நன்றி விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி!! 'படித்ததில் பிடித்தது '

உலகின் முதல் மொழி தமிழ்

எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி'யின் அற்புதங்கள். உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், "தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது" - சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன். "நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்" - நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல். "பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிறகுரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்" - கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து. "தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்" - டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா. "இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்" - டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி. இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த" மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்... தமிழே உலகமொழிகளின் தாய்மொழி என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார். களி (மண்) - Clay. பிறப்பு - Birth. பொறு - Bear. நாடுதல் - நாடு (ஜெர்மன்). கண் - கண் (சீனா). உப்பர் - ஊப்பர் (இந்தி). தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள் "நாமம் - நாம் (இந்தி). தாழ்வு - தாவு (தெலுங்கு). தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள் இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse. தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன. பதின் - Ten. உருண்டை - Round. உருளை - Roll. அம்மா - மா (இந்தி). நிறங்கள் - றங் (இந்தி). உராய் - Rub. அரிசி - Rice காரணப் பெயராகிய புதிய சொற்கள் தேங்குதல் - Tank. ஈனுதல் - Earn என்றும் திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார். * சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது. * உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள். * பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. * பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது. * தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் "ஹொங்கரோ ஹொங்கர்" என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள். * கண்-கண் காண் - காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது. * சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது. ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது. * மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன. S பேச்சு - Speech. S மெது - Smooth. S உடன் - Sudden. S நாகம் - Snake * தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள் எட்டு - ஆட் (இந்தி) பத்து - ஹத்து (கன்னடம்) கடை - கெடா (மலாய்) பூங்கொத்து - கொத் (ஜெர்மன்) * இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது. கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம் (கல்அறை) கல்லறா - கேரளம் கல்லூர் - ஆந்திரம் கல்முனை - இலங்கை கல்லினா பாட் - ரஷ்யா * மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை - ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும் * மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி ய ர ல ள ழ போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது. * மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன. ஹிப்ரு மொழி மனுஏல் - மனுவேல் தமிழ்ப் பெயர் கருமன் / கருத்திருமன் தருமன் / திருமன் வட இந்தியப் பெயர் பீமன் இராமன் இவ்வாறு "உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன. உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன. இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார். "கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன்" ஆகும். அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது. கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் இலத்தீன் கிரீட் தொடர் பற்றாக இருந்தது. எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது. "ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது? (1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேறினர். எனவேதான், திருவிடமொழி உலகமெங்கும் உள்ளது. அப்போதைய திருவிடமொழி பழந்தமிழே! (2) மங்கோலியர், சீனர், மத்திய கிழக்கு மக்களான ஹிப்ருக்கள், அரபிய மற்றும் சிலாவியர், ரோமானியர், ஜெர்மானியர், மலேசிய பாலினேசியர், இந்தோ ஆரியர், தென் அமெரிக்கர், ஆப்பிரிக்க மக்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் - இங்ஙனம் உலக மக்கள் பிரிவினர் யாவருமே திருவிடரே! கடல் கோளால் வந்தோரும் நில அதிர்வாலும் வந்தோருமாக உலகின் பல பாகங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முறைகளில் குடியேறியவர் திருவிடரே! (3) திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர். அதன் மேலும் மேற்கே குடியேறத் தொடங்கி பாபிலோனியா மொசபப்டடோமியா வழியே ஈரான் ஈராக் ஆகிய பல பகுதிகளிலும் குடியேறினர். ஆக திருவிடர் தென்னிந்தியாவில் இருந்தே வடஇந்தியா போய் அங்கிருந்து உலக நாடுகள் யாவற்றிற்கும் சென்றிருக்க முடியும். எனவே திருவிட மொழியாம் தமிழ் உலகெங்கும் அடித்தளமாக அமைப்பு முறையாக இலக்கு கருவியாக இயக்கும் ஆற்றலாக விளங்குகின்றது என்று உலகளாவிய தமிழ் என்று, தான் எழுதியிருக்கும் நூலின் மூலமாகவும் விளக்கத்தை தந்திருக்கும் தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் சாட்சிக் களத்திற்காக விதைத்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறார். தமிழ் எழுத்துக்கள் எப்படி எப்படி மாறும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதற்கு உட்பட்டே மாறுகிறது. ஆகவே என்னோடு இந்த ஆய்வுகள் நின்றுவிடாமல் தொடர வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் இந்தத் தமிழ்மொழியை இளைஞர்கள் குழு மூலம் மக்களை ஒன்று திரட்டி பெரும் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் ஆசையை பழுத்த ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியதைக் கண்டு தமிழே நெகிழ்ந்ததைப் போல அவ்வப்போது தெரிவித்து வருகிறார்". இப்பேற்பட்டவர் ஒரு தமிழாசிரியிராக இருப்பாரா? பேராசிரியராக இருக்கலாம்? இல்லை தமிழ்த்துறை தலைவராகத்தான் இருக்க வேண்டும்? இத்தனை தமிழ் சார்ந்த் தகவல்களை சொன்னவர் ஏன் ஒரு பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கக்கூடாது? என்று நினைப்போர்க்கு... இவர் அப்படி எந்த பதவியிலும் இல்லை ஆனால் அத்தனை தகுதிகளையும் கொண்ட இன்னொரு தமிழ்தாத்தா என்று சொல்லும் அளவிற்கு தமிழ் மொழிப்புலமை சாத்தூர் சேகரன் அய்யாவிடம் புதைந்து கிடக்கிறது. சரி இவர் என்ன படித்திருக்கக் கூடும்? எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) இது முழுக்க முழுக்க அவர் படித்து முடித்துவிட்ட பட்டங்கள். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்... "இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்". "உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது. தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் மதுரைக்கு வரும்போதெல்லாம் இவரது குரல் அகிலமொழி பயலிரங்கத்தில் ஒலிக்கிறது. தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது. தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி... தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார். தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார். "தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அவரோடு தமிழ்மொழியும் அச்சாரமிட்டுக் கொண்டிருக்கிறது". அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ - மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் அகிலமொழி எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற கோ மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் 'அகிலமொழி' யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும். தொடர்பு கொள்ள : சாத்தூர் சேகரன் 94429 56769, 92943 60806 3 A, R C South Street Sathur - 626203 Virudhu Nagar

Sunday, April 14, 2013

தமிழரின் பெருமையை தமிழரே அறியாத நிலை தொடரவேண்டுமா?

சூரியன், சந்திரன் முதலாம் கோள்களும் நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்ற நம்பிக்கை எத்தனையோ நூற்றாண்டுகளாக மக்களை ஆட்டிப்படைத்துவந்தது! சூரியன் புவியைச் சுற்றி வரவில்லை; புவியே சூரியனைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தவர் யார்??? நிக்கலசு கொப்பணிக்கசு?? சத்தியமாக இல்லை… பெயர் தெரியாவிட்டாலும் அடித்துச் சொல்லலாம்… தமிழன் தானென்று!!! எப்படி? கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 2ஆம் நூற்றாண்டுக்குமிடையில் பாடப்பட்டவையான சங்க இலக்கியங்களில் ஒன்று “பட்டினப்பாலை”. “கடியலூர் உருத்திரங்கண்ணனார்” என்ற புலவரால் பாடப்பட்டது. இதில் வரும் 67 – 72 வரையான வரிகள் தான் மேற்கூறிய நம் ஊகத்துக்கு சான்றளிக்கின்றன: “நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு நாண்மீன் விராய கோண்மீன் போல, மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக், கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப், பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ, திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்” இதன் பொருள் இதுதான்… “சூரியனை சுற்றி வரும் கோள்களைப் போல இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான்” இலக்கியத்தைப் பொறுத்தவரை, உவமைக்கு பயன்படும் பொருள் ஏற்கனவே மக்களால் அறியப்பட்டதாகத் தான் இருக்கும். உதாரணமாக, “மதி போன்ற முகம்” என்ற உவமையைக் கவனித்தவுடன் நாம் முதலில் சந்திரனையே எண்ணுகிறோம்; பின்பு அதை குறிப்பிட்ட முகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். எப்போதும் உவமை என்பது, ஏற்கனவே அறிந்த ஒன்றுடன், தெரியாததை ஒப்பிட வைத்து குறிப்பிட்ட விடயத்தை எமக்கு இலகுவாகப் புரியவைக்கிறது. இங்கோ, எதிரிகள் சூழ்ந்த மாவீரன் என்பதே, கோள்கள் சூழ்ந்த சூரியன் என்று தான் உவமிக்கப்படுகின்றது என்பது அக்காலத் தமிழர், ஞாயிறையே ஏனைய கோள்கள் சுற்றிவருகின்றன என்ற உண்மையை அறிந்திருந்தார்கள் என்பதற்கு சான்றாக இல்லையா??? எவ்வளவு பெரிய அறிவியல் உண்மையை, இந்தப் பழந்தமிழ் இலக்கியம், சர்வசாதாரணமாக, அதேவேளை மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறது?? தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!!

பழங்களின் தூய/தனித்தமிழ்ச்சொற்கள்

தொல் பழங்காலத்தில் தாய்மொழியாகிய நம் தமிழ் மொழி ஊமையாய்த் திரிந்து, சைகையாய் மாறி, ஒலியாய் ஒலித்து, வரியாய் வடிவெடுத்து, பல இன்னல்களையும் இடையூறகளையும், பிற மொழித் தாக்குதல்களையும், சமாளித்து குணம் மாறாமல், நயம் குறையாமல், ஒளிமங்காது பேரொலி கொடுத்து, உயரிடம் தேடிய உத்தம மொழியே நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபிய மொழி மலாய் (மலேசியா) எபிரேயம் (ஹீப்ரு) பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது. இதிலிருந்து காப்பது ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழனினதும் கடமையாகும். நம் தமிழ் மொழியில் மாற்று மொழிகளின் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. தவிர்க்க முடியாத ஒன்று தான். ஆனால் ஒரு லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீரைக் கலந்தாலும் பால் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 900 மில்லி தண்ணீரும் 100 மில்லி பாலுமானால் இதற்கு பெயர் என்ன? பாலா? இல்லை தண்ணீரா? பாலில் தண்ணீர் கலவையா? இல்லை தண்ணீரில் பால் கலவையா? இப்படிப் பல கேள்விகளும், பயமும் உருவாகிறது. தமிழ் மொழியில் பிறமொழிக் கலவை இருக்கலாம். ஆனால் மித மிஞ்சினால் தமிழ் மொழி மறைந்து விடுமே! நம் மொழி அழிவது சரியா

சசேகுவேராவின் இறனந்த உடலை இழிவு செய்கிறார்கள்[படம் இணைப்பு]

நான் உயிருடன் இருக்கும் போது எனக்கு மரணம் வர போவதில்லை. எனக்கு மரணம் வரும்போது நான் உயிருடன் இருக்க போவதில்லை. அதனால் என்னுடைய உயிரை பற்றி எனக்கு கவலை இல்லை. உங்களால் என்னுடய சாதாரண உடலை மட்டும்தான் கொல்ல முடியுமே தவிர (செகுவேரவை) ஒருநாளும் கொல்ல முடியாது. சேகுவேரா என்பவன் தனி மனிதன் அல்ல ஒரு எழுச்சியின் அடையாளம், நான் இறந்த பின் என் துப்பாக்கியை எனக்கு பின்னால் வரும் தோழர்கள் எடுத்து கொள்வார்கள். என் துப்பாக்கியின் தோட்டாக்கள் தொடர்ந்து சீரீ கொண்டேன் இருக்கும். இலக்கு அடையும்வரை, (சேகுவேரா)

Saturday, April 13, 2013

கைத்தொலைபேசியில் தமிழ் ஒருங்குறியிலமைந்த இணையப் பக்கங்களை பார்வையிட முடியவில்லையா?

1) ஒபேராவில் தமிழ் எழுத்துக்களைப் பார்க்கமுடியவில்லையாயின் பின்வரும் மாற்றங்களைச் செய்க‌ * ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser from www.opera.com/mobile )பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள். * ஒபேரா உலாவியின் (settings)அமைப்புகள் பகுதிக்கு சென்று ("Font Size")எழுத்துரு அளவை பெரியது(Large) ஆகவும், (Mobile view) ஐ "ON" ம் செய்து சேமித்துக் கொள்ளுங்கள் * (address Bar") முகவரிப்பட்டையில் about:config அல்லது config: அல்லது opera:config என தட்டச்சு செய்து config page அல்லது Power User Settings பக்கத்திற்கு சென்று அப்பக்கத்தின் இறுதியில்/அடியில் உள்ள "Use bitmap fonts for complex scripts" ஐ "YES" ஆம் என தெரிவு செய்த பின் சேமித்துக்கொள்ளுங்கள். *) இறுதியாக ஒபேரா உலாவியை மீள தொடக்குங்கள் (Restart) இப்பொழுது உங்களால் நிச்சயமாக தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும். OR Read This > use this https://www.facebook.com/photo.php?fbid=10150119660762473 -------------------------------------------------------------------------------------------------------- போல்ட் உலாவியில் செய்ய வேண்டிய மாற்றங்களை இப்போது பார்ப்போம் 1) போல்ட் உலாவியை (Bolt Browser from www.boltbrowser.com/in/index.html அல்லது http://boltbrowser.com/dnld.html )பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள். * இந்திய மொழிகளுகளுக்கான எழுத்துருக்களை (indic Fonts) நிறுவுவதற்கான படிகள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது: `````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````` *தெரிவு 1 - முதல்முறையாக திறக்கும் பொழுது, தேவைப்படும் இந்திய மொழிகளுகளுக்கான எழுத்துருக்களை தன்னியக்கமாக‌ நிறுவுமாறு பயனரை இது தூண்டுகிறது. 1) ```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````` *தெரிவு 2 - மொழியை பயனர் மாற்றும் போது, அது தன்னிச்சையாக சம்பந்தப்பட்ட இந்திய மொழிகளுகளுக்கான எழுத்துருக்களை நிறுவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டார மொழியின் பயனர் இடைமுகத்தைத் திரையிடுகிறது. `````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````` *தெரிவு 3 - நீங்களாகவே எழுத்துருவை நிறுவிக்கொள்ளல் * --------------------------------------------------------------------------------------------------------- அடுத்து தமிழில் எப்படி எழுதுவது என்பதைப் பார்ப்போம் எழுதும் பொழுது இண்டிக் எழுத்துருக்களை பயன்படுத்த, விசைப்பலகை மாற்ற "#" விசையை அழுத்தவும். # விசையை அழுத்துவது மூலம் நீங்கள் நிறுவியுள்ள பல்வேறு மொழிகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்கும். நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு நீங்கள் அதைப் பயன்படுத்தலாம், எழுத்துக்களை எழுத உங்கள் விசைப்பலகை உள்ள விசைகளை அழுத்தவும். போல்ட் இண்டிக், உங்களிடம் QWERTY விசைப்பலகை உள்ளதா அல்லது Generic விசைப்பலகை உள்ளதா என அறிந்து கொள்கிறது மற்றும் எழுதும் பொழுது அதிகபட்ச சௌகரியத்திற்காக எழுத்து பரிந்துரைப் பட்டியலை அதற்கேற்றால் போல் திரையிடுகிறது. விசைப்பலகைளில் உள்ள விசை-களை அழுத்தும் பொழுது, எழுத்து தேர்வு பட்டியலைத் திரையிடுகிறது. நீங்கள் (->) ஏரோ விசைகளை அழுத்துவது மூலம் அல்லது எழுத்து விசையை அதிக முறை அழுத்துவது மூலம் நீங்கள் பட்டியலை முழுமையாக காணலாம். =============================================================================== ஏனைய அப்பிள் நிறுவனத்தின் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்கள் செல்லினம் எனும் மென்பொருளை பயன்படுத்த்லாம் Enjoy Sellinam 3.0. Download for FREE from the App Store: http://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8 ======================================================================= For more info > HELP2 கைபேசியில் தமிழ் செல்பேசியில் தமிழ் ‍ கையடக்கத்தொலைபேசியில் தமிழ் அலைபேசியில் தமிழ்

60,000 வருட பழமையான மனிதன் தமிழகத்தில் !

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். திரு. ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மதுரையில் இருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள "ஜோதிமாணிக்கம்" என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!. இப்போதைக்கு இந்தியாவில் இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உலகிற்கே தெரிந்த இந்த தமிழனைப்பற்றிய செய்தி, எத்தனை தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறியானது? !. இதன் காணொளியை கீழே இணைத்துள்ளேன், தவறாமல் காணுங்கள். மேலும் அறிய...

Friday, April 12, 2013

கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்,12,000 ஆண்டுகளுக்கு முன் கடலால் அழிக்கப்பட்ட நகரம்

கிருஷ்ணன் உத்தவரிடம் தெரிவித்தார் ---உத்தவரே யாதவகுலம் சீக்கிரமே அழியப்போவது நிச்சயம்.அது மட்டுமின்றி,இன்றையிலிருந்து ஏழாம்நாள் துவாரகையை கடல் பொங்கி மூழ்கடிக்கப்போகிறது. எனவே நீங்கள் இங்கிருந்து தீர்த்தயாத்திரைக்கு புறப்பட்டு சென்றுவிடுங்கள். கிருஷ்ணன் இறக்கபோவதை நினைத்து உத்தவர் மனம்வருந்தினார். அவரது வருத்தத்தை கண்ட கிருஷணன் அவருக்கு உபதேசித்த உபதேசங்கள் உத்தவகீதை என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்-

கவிதைகள் facebook ல் பகிருங்கள்