Monday, April 22, 2013
"தமிழ் பேச வெட்கப்படும்,தமிழ் தமிழ் என்று கூறிக்கொண்டு தமிழனை ஏமாற்றிப் பிழைக்கும் பேர்வழிகள் வெட்கபட வேண்டிய விடயம்"
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது .
நன்றி -ஜெய்வந்த் செலவகுமார்
via - தமிழச்சி (Thamizhachi)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment