
பாலிவுட் முன்னணி நாயகியான தீபிகா படுகோன், நடிகர் ரன்வீர் சிங்குடன் நெருக்கமான நடப்பில் இருந்தார்.
காதலித்த இருவரும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளுக்கு ஜோடியாக வந்தனர். சமீபத்தில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.
தீபிகாவை உசுப்பேற்றும் வகையில் கேத்ரினா கைப்புடன் நெருக்கமாக பழகி வருகிறார் ரன்வீர் சிங்.
இதனால் வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவதை தீபிகா தவிர்த்து வந்தார்.
தற்போது ‘ராம் லீலா‘ என்ற படத்தில் தீபிகா நடித்து வருகிறார். நாயகனாக சுசாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல மூன்றரை மணி நேரம் ஆகும். இதற்காக அதிகாலை 2.30 மணிக்கே ஓட்டலிலிருந்து மேக்கப் அணிந்துகொண்டு புறப்பட வேண்டி இருக்கிறது.
தீபிகாவும், சுசாந்தும் அதிகாலையிலேயே ஒரே காரில் புறப்படுகின்றனர். அப்போது இருவரும் மனம் விட்டு பேசும் தருணம் கிடைக்கிறது. இதில் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டிருக்கின்றனர்.
இவர்களின் நட்பு தற்போது காதலாக மலர்ந்திருக்கிறது என்று பட யூனிட்டில் பேசப்படுகிறது.
ஒரு கட்டத்தில் தீபிகாவை மணந்துகொள்வதற்கான தனது விருப்பத்தையும் சுசாந்த் தெரிவித்தாராம்.
ஆனால் அது பற்றி யோசிக்க அவகாசம் வேண்டும் என்று தீபிகா கூறிவிட்டாராம். பாலிவுட்டில் இவர்களின் காதல் கிசுகிசு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
No comments:
Post a Comment