Friday, April 19, 2013

பெரிய கோயிலில் ராஜ ராஜ சோழன் காலம் முதல் மராட்டிய மன்னன் சரபோஜி மன்னன் காலம் வரையான கல்வெட்டுகள் உள்ளன...இவற்றில் கிடைத்த தகவல்கள் சுவையானதாகும்..

தஞ்சை பெரிய கோயிலில் ராஜ ராஜ சோழன் காலம் முதல் மராட்டிய மன்னன் சரபோஜி மன்னன் காலம் வரையான கல்வெட்டுகள் உள்ளன...இவற்றில் கிடைத்த தகவல்கள் சுவையானதாகும்.. 1.கல்வெட்டுகள் அனைத்தும் திருமகள் போல செந்திரு மடந்தை என்று மஹா லட்சுமியை குறிப்பிட்டே தொடங்குகின்றன. 2.ராஜ ராஜ சோழன்,அவனுடைய சகோதரி,பட்டத்து அரசிகள் ,சோழ நாட்டு மக்கள் ஆகியோர் அளித்த பொன்னும்,பொருளும் முழுமையாக பட்டியல் படுத்தப்பட்டு உள்ளது. 3.பெரிய கோவில் நிர்வாக அலுவலராக விளங்கியவர் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன்மூவேந்தன் வேளான் 4. அரண்மனை ராஜகுருவாக இருந்தவர் ஈசான சிவபண்டிதர் 5. கோயில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் பவண பிடாரன் 6. கல்வெட்டில் இடம்பெறும் செய்திகளுக்கு மெய் கீர்த்தி என்று பெயர்...இதனை செதுக்கியவர் பாளூர் கிழவன் 7. கோயிலை கட்டிய தலமை சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சன் 8. கோயிலில் தேவாரம் பாட 50 ஓதுவார்களும் ஆடல் மகளிராக 400 பேரும் நியமிக்கபட்டனர்.அவர்களுக்கு வீடுகளும் ,பொன்னும்,பொருளும் நெல்லும் அளிக்கபட்டன 9. கோயிலில் பணிபுரிந்த பணியாளர்களின் எண்ணிக்கை 1500 10. அனைத்து செப்பு திருமேனிகளையும் இராஜராஜ சோழன்,அவரது மனைவி,சகோதரிகள்,அரண்மனை நிர்வாக அதிகாரிகள் என்பவர்கள் தனித்தனியே செய்து தந்துள்ளனர். 11. இரண்டு நிதிநிலை கருவூலங்கள்(வங்) இங்கு இயங்கி வந்தன.. 12. கோயிலுக்கு அளிக்கபட்ட பொன்,பொருள் ரெத்தின நகைகள்,தங்கங்கள் என்பவற்றின் மதிப்பு துல்லியமாக கணிக்கபட்டு குறிக்கப்பட்டு உள்ளது 13. அந்த எடைபோடும் தராசை கூட "ஆடவல்லான் நிறை" என்று சிவன் பெயரிலேயே அழைத்தனர் 14. சுவாமிக்கு அணிவிக்கும் ஒரு முத்துமாலையை கூட "நூல் நீக்கி முத்துமாலையின் எடை" என்று துல்லியமாக குறிபிட்டு இருப்பது மன்னனின் நேர்மையை காட்டுகிறது 15. தமிழகம் மட்டுமல்லாது கேரளம்,கர்நாடகம்,ஆந்திரம் ஆகிய இடங்களிலும் கோயிலுக்கு நிலங்கள் இருந்தன 16. கோயிலில் நெய் தீபம் ஏற்ற பசுமாடுகள்,ஆடுகள் தஞ்சாவூரை சுற்றியுள்ள பல இடங்களில் வளர்க்கபட்டு வந்தன...அங்கிருந்து பெறபட்ட நெய்யில் இருந்து கோயில் விளக்குகள் எரிக்கபட்டன 17. கோவில் இசை,நடன ,நாடக கலையரங்காக இருந்தது...மன்னனால் கலைஞர்கள் பெரிதும் ஊக்கிவிக்கபட்டனர் 18. சோழர்களின் போரின் போது பெறப்பட்ட முழு செல்வங்களும் கோயிலுக்கு அளிக்கபட்டது. 19. முடி திருத்துபவன் "ராஜ ராஜ நாவிதன்" என்று பட்டம் கொடுக்கபட்டு கெளரவிக்கபட்டனர்.. 20. கல்வெட்டில் அப்போதைய மரங்கள் ,பெரிய அங்காடிகள் பற்றிய குறிப்பும் உள்ளது 21. ராஜ ராஜேஸ்வர நாடகம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டது 22. இது தவிர விஜயநகர் மன்னர்கள்,மராட்டிய மன்னர்கள் ஆகியோரின் கொடை விபரங்களும் குறிப்பிடபட்டு உள்ளது 23. இதுவரை படியெடுக்கபட்ட 100 கல்வெட்டுகளில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது தஞ்சை பெரிய கோவிலுள்ள விநாயகர் சன்னதியின் தென்புற வெளிச்சுவரில் :போனஸ்லே வம்ச சரித்திரம்" என்ற தஞ்சை மராட்டிய மன்னன் 2ம் சரபோஜி மராட்டிய மொழியில் கல்வெட்டாக வெட்டசெய்து உள்ளான். இந்த கோவில் கி.பி 1006ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கபட்டு கி.பி 1010 ம் ஆண்டு கட்டி முடிக்கபட்டது. 1987 இல் இக்கோவில் யுனெஸ்கோவில் தேசிய மரபுரிமை சின்னமாக அறிவிக்கப்பட்டது

No comments:

Post a Comment