Monday, April 29, 2013
புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு பவர் ஸ்டார் மாற்றம்: புலம்பும் தயாரிப்பாளர்கள்
மோசடி வழக்கில் கைதான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு கடந்த 26ம் திகதி நள்ளிரவு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது வேலூர் மத்திய சிறையில் எச்.எஸ்-1 என்ற அறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற கைதிகள் அவரை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு முதல் வகுப்பு வசதிகள் கொடுக்கப்படவில்லை. சாதாரண வகுப்புக்கான அறையிலே அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பவர் ஸ்டார் கைதாகி சிறையில் இருப்பதால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரை பதிவு செய்துள்ள தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.
பவர் ஸ்டார் சீனிவாசன் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ரங்கநாதனிடம், 50 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே புழல் சிறையிலிருந்து தற்போது பவர் ஸ்டார் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment