Friday, May 3, 2013
இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!
ஒருசிலர் என்றைக்கும் இளமையாக அழகாக இருப்பார்கள். வயதானலும் அழகு குறையவே குறையாது. ஒரு சிலர் சிறிய வயதிலேயே முதுமையாய் தெரிவார்கள். இதற்கான ரகசியம் மனித மூளையில் இருப்பதாக கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
மனிதனின் மூளையில்தான் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஆயுளை நீட்டிக்கும் ரகசிய பகுதி இருப்பதாகவும் அதனை தாங்கள் கண்டு பிடித்துவிட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பின் படி இனி மனிதர்கள் தங்களின் ஆயுட்காலத்தை நீட்டித்து ஆரோக்கியமாக வாழலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைப்போதாலமஸ் கவனம்
மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர்.வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது.ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் பெருமளவு சம்பந்தப்பட்டிருகிறது என்று இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது
.
பரிசோதனை எலிகள் எலிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ரசாயன மாற்றம்
எலிகளின் மூளையின் இந்தப் பகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகளின் குழு ஆராய்ந்தது.அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரசாயனத்தை தடுத்தால் அந்த எலி நீண்ட நாட்களுக்கு வாழ்வது தெரியவந்தது.
ஆரோக்கியமான எலிகள்
ஆரோக்கியமான ஒரு எலி 600 முதல் 1000 நாட்கள் வரை உயிர் வாழும்.ஆனால், இந்த மாற்றம் செய்யப்பட்ட எலி அதனைவிட ஐந்தில் ஒரு மடங்கு அதிகமான காலத்துக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தது. அதற்கு வயதான காலத்தில் வரும் தசைகள் சுருங்குதல், ஞாபக மறதி போன்ற எந்தப் பிரச்சினையும் வரவில்லை
அதிக ரசாயனம்
அதே நேரத்தில் ஹைபோதலமஸ் பகுதியில் அந்த இரசானத்தை விஞ்ஞானிகள் அதிகரித்தபோது, அந்த எலிகளின் வாழ்வுக் காலம் குறைந்துபோயிற்று.அந்த நடைமுறையின் பின்னணியில் உள்ள விசயங்களை புரிந்து கொள்வதற்கு தற்போது விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
வாழ்வை அதிகரிக்கலாம்
இந்த ஆய்வுகள் முதுமையுடன் தொடர்புடைய பல நோய்கள் குறித்த புதிய தகவல்களை அறிய உதவும். அத்துடன் எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்வுக் காலத்தை அதிகரிப்பதற்கான மருந்துகளை தயாரிக்கவும் இது உதவலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ."நேச்சர்" என்னும் பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன
Subscribe to:
Post Comments (Atom)
pease refer the website SSDSFOUNDATION ,.ORG
ReplyDelete