Wednesday, December 26, 2012

ஒடும் காரில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம்: டெல்லியில் மேலும் ஒரு சம்பவம்

டெல்லியில் ஓடும் காரில் தலித் சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை அவரது வீட்டில் இருந்து 4 பேர் கடந்த 15ம் திகதி டெல்லிக்கு கடத்தி வந்து காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவரை மீண்டும் பைசாபாத் கொண்டு சென்று பேருந்து நிறுத்தத்தில் விட்டுச் சென்றுள்ளனர். இதுபற்றி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் ஜம்முவின் புறநகரான அம்குரோடாவில் கடந்த சனிக்கிழமை இரவு 18 வயது பெண்ணை ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் இருவரும் வனப்பகுதிக்கு கடத்திச் சென்று கற்பழித்துள்ளனர். குற்றவாளிகள் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இதுபோன்று நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் பாலியல் பலாத்காரப் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொலிஸ் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஏற்கனவே ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பாரத ரத்னா விருது வழங்குமாறு சுப்பிரமணிய சுவாமி பிரதமரிடம் கோரிக்கை!

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய உயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று தமிழ்நாடு, கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறான கோரிக்கையை அவர் முன்வைத்தார். உலக பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக இந்த விருதை வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை படைவீரருக்கு இந்தியாவில் வைத்து பயிற்சி வழங்கப்படுவதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைதி திரும்பியுள்ள இலங்கையில் இந்திய மாணவர்கள் சென்று கல்விகற்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தீபம் ஏற்றத் தடையில்லை! ஒரு மாதத்தின் பின் வாய் திறந்தார் அமைச்சர் டக்ளஸ்!

இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இறந்த உறவுகளுக்காக தமது வீடுகளில், வியாபார நிலையங்களில் தீபம் ஏற்றலாம் அதனை யாரும் தடுக்க முடியாது அவ்வாறு தடுத்தால் தன்னிடம் கூறுமாறு கோரிக்கை விடுத்ததுடன். நாட்டில் யுத்தம் நிறைவடைந்து நிரந்தர சமாதானம் நிலவுகின்றது. இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர். தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவும் போது சிலர் திட்டமிட்ட செயற்கை யுத்தம் ஒன்றை ஏற்ப்படுத்த முனைகின்றனர். இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. ஆட்சியிலுள்ள அரசாங்கத்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வினை நிச்சயமாக வழங்க முடியும். ஆனால் இந்த அரசாங்கம் தவிர்ந்த வேறு ஒரு அரசாங்கத்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை வழங்க முடியாது என அவர் தெரிவித்தார். கடந்த மாதம் இதே நாளில் இறந்த உறவுகளை நினைத்து தீபமேற்றியவர்களை இராணுவம் எவ்வளவு துன்புறுத்தியது என்பதை தெரிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு மாதத்தின் பின் தீபம் ஏற்றத் தடையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளமை ஆச்சரியமாகவுள்ளது என பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

Thursday, May 24, 2012

புலிகள் தயாரித்த நீர்மூழ்கி ஏவுகணை: தென்னாசியாவே நடுங்கியது !

ரோப்பிடோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் தாமே வடிவமைத்து இயக்கி வந்ததாக இந்தோனேசிய ஆங்கில ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. ஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளே கடலுக்கு அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ரோப்பிடோக்களைத் தயாரிப்பதில் வல்லவர்கள். தொழில் நுற்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந் நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் உள்ளூர் பொருட்களைப் பாவித்து இவ்வகையான நீர்மூழ்கி ஏவுகணைகளைத் தயாரித்துள்ளனர் என அது மேலும் கருத்துத் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ் என்று சொல்லப்படும், படு பயங்கரமான வெடி மருந்துகளை இவர்கள் இந்த ஏவுகணைகளில் பொருத்தியுள்ளனர். குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவுகணையின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் தற்கொலைப் படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர். 2002ம் ஆண்டுக்குப் பின்னரே இவர்கள் நீர்மூழ்கி ஏவுகணகளைச் செய்ய கற்றுகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகள் உற்பத்திசெய்யும் நீர்மூழ்கி ஏவுகணைகள், தமது இலக்கை அறிந்து, அதனை துரத்திச் சென்று தாக்க வல்லது. அதுபோல இல்லை என்றாலும், எதிரியின் கப்பலை நோக்கி ஏவுகணையை தரையில் இருந்தே கட்டுப்படுத்தக்கூடிய தொழில் நுற்பத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர் எனவும் அறியப்படுகிறது. தமது வசதிகளுக்கு ஏற்ப, ரிமோட் கன்றோலர் மூலம் இயக்கக்கூடிய நீர்மூழ்கி ஏவுகணைகளை புலிகள் துல்லியமாக தயாரித்துவைத்திருந்துள்ளனர். இலங்கை இராணும் புலிகளின் கடற்படை முகாம் ஒன்றை 2009ம் ஆண்டு அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம் திடீரெனக் கைப்பற்றியது. அங்கே காணப்பட்ட, நீர்மூழ்கி ஏவுகணைப் பார்த்து இராணுவம் அதிர்ந்துபோயுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசியாவில் இவ்வகையான பாரிய சக்திகொண்ட நீர்மூழ்கி ஏவுகணைகளைக் கொண்ட ஒரே இயக்கம், புலிகளாகத்தான் இருக்கவேண்டும் என இந்தோனேசிய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை அரசானது, தனக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளைக்கூட பிற நாடுகளிடம் இருந்தே தருவித்துவரும் நிலையில், விடுதலைப் புலிகள் இதுபோன்ற கனரக ஆயுதங்களை மிக இலகுவாக உற்பத்திசெய்யக் கற்றுக்கொண்டனர் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும்.

தமிழ்குயில்: மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை நான் பார்த்தேன் !

தமிழ்குயில்: மே மாதம் 16ம் திகதி பொட்டம்மானை நான் பார்த்தேன் !: தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு, நீண்ட நாட்களாகப் பாதுகாப்பு வழங்கிவரும் படையணியாக இம்ரான் பாண்டியன் படையணி இருந்தது யாவரு...

தமிழ்குயில்: யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழ...

தமிழ்குயில்: யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழ...: யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில் அவ்வாறு கா...

தமிழ்குயில்: யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழ...

தமிழ்குயில்: யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழ...: யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களில் காணாமல் போகும் சிறார்களது நிலை தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லாதிருந்து வரும் நிலையினில் அவ்வாறு கா...

Friday, May 18, 2012

தமிழ்குயில்: பரந்தன்-முல்லைத்தீவு வீதி காட்டுப்பகுதியில் குண்டு...

தமிழ்குயில்: பரந்தன்-முல்லைத்தீவு வீதி காட்டுப்பகுதியில் குண்டு...: இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண...

தமிழ்குயில்: இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் ...

தமிழ்குயில்: இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் ...: ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3Mம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்...

தமிழ்குயில்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்...

தமிழ்குயில்: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்...: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில்...

தமிழ்குயில்: [Photo] Photo [Video] Video யாழ்.பல்கலை துணைவேந்தர...

தமிழ்குயில்: [Photo] Photo [Video] Video யாழ்.பல்கலை துணைவேந்தர...: யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரது அலுவலகம் மாணவர்களால் தாக்கப்பட்டதோட...

தமிழ்குயில்: இன்று முள்ளிவாய்க்கால் எப்படி உள்ளது ? புகைப்படங்க...

தமிழ்குயில்: இன்று முள்ளிவாய்க்கால் எப்படி உள்ளது ? புகைப்படங்க...: 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிவரை, தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்களும் முள்ளிவாய்க்காலில் இறுதியாக நின்ற தருணம் அது ! தமது ஆயுதங்களை மெள...

தமிழ்குயில்: யோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் தாம்பத்தியத்தில் என...

தமிழ்குயில்: யோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் தாம்பத்தியத்தில் என...: திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (க...

தமிழ்குயில்: ✿ தாயகத்தில் மலர்ந்த மலர்கள் இரத்தவெள்ளத்தில் கண்ண...

தமிழ்குயில்: ✿ தாயகத்தில் மலர்ந்த மலர்கள் இரத்தவெள்ளத்தில் கண்ண...: எம் இனத்தினை கூண்டோடு மண்ணில் புதைத்தவர்களின் தலையை கொய்ய எமக்கு ஒரு காலம் வராதோ!!????' சுத்தமான காற்றைச் சுவாசித்த எம் மக்களையும் ப...

தமிழ்குயில்: எதுவரை சென்றோம்..... எங்கு நிற்கின்றோம்.....

தமிழ்குயில்: எதுவரை சென்றோம்..... எங்கு நிற்கின்றோம்.....: இன்று: முள்ளிவாய்க்காலின் மூன்றாம்ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்...

தமிழ்குயில்: பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

தமிழ்குயில்: பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?: ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்...

தமிழ்குயில்: முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு

தமிழ்குயில்: முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு: வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதா...

தமிழ்குயில்: இந்தியர்களின் மானத்தை வாங்கும் ஐஸ்வர்யா ராய் !

தமிழ்குயில்: இந்தியர்களின் மானத்தை வாங்கும் ஐஸ்வர்யா ராய் !: இந்தியப் பெண்களின் மானத்தை ஐஸ்வர்யா ராய் வாங்குவதாக பிரித்தானியப் பத்திரிகையான டெய்லி மெயில் முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது. க...

தமிழ்குயில்: புதுமணத் தம்பதிகளுக்கு பரிசளித்த சூப்பர் ஸ்டார்

தமிழ்குயில்: புதுமணத் தம்பதிகளுக்கு பரிசளித்த சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுமணத் தம்பதிகள் சினேகா-பிரசன்னாவை தன் வீட்டுக்கு வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார். கடந்த மே 11ம் திகதி நட...

தமிழ்குயில்: புதுமணத் தம்பதிகளுக்கு பரிசளித்த சூப்பர் ஸ்டார்

தமிழ்குயில்: புதுமணத் தம்பதிகளுக்கு பரிசளித்த சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புதுமணத் தம்பதிகள் சினேகா-பிரசன்னாவை தன் வீட்டுக்கு வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார். கடந்த மே 11ம் திகதி நட...

Tuesday, April 10, 2012

ரோஸ் லிப்ஸ் வேணுமா? இதப்படிங்க !

தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கிறது. மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில்கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல உதடுகளும் உண்டு. கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், "வாசலின்' தடவிக் கொள்ளலாம். வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் கூட வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், "இ' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை' தடவி வரலாம். உதடுகளில் வெடிப்பு அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும். பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். உதடுகள் மென்மையாக வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து உதடுகளில் ஒத்தடம் தரவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் ஒத்தடம் தரலாம். வாரம் மூன்றுநாட்களுக்கு இவ்வாறு செய்து வர உதடுகள் ரோஜா பூ நிறத்திற்கு மாறுவதோடு மென்மையாகும். வறுத்து அரைத்த உளுத்தம் மாவு 1 சிட்டிகையுடன் 1 சொட்டு தேன் கலந்து பேஸ்ட்டாக்குங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டில் தடவி 5 நிமிடம் கழித்து மிதமான வெந்நீரில் கழுவுங்கள். நாளடைவில் உதடுகள் ரோஜா நிறமாவதுடன்,மென்மையாகவும் ஆகும். தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாகும். மென்மையான உதடுகள் வீட்டில் உள்ள பொருட்களே உதடுகளை அழகாக்க பயன்படுகின்றன. வெண்ணெய் அல்லது நெய்யை தினசரி உதடுகளில் தடவி வர உதடுகளில் உள்ள வெடிப்புகள் நீங்கும். முட்டையின் வெள்ளைக்கருவோடு சிறிதளவு பாதம் பவுடர், சிறிதளவு பாலடை கலந்து உதடுகளில் தடவி வர உதடுகள் வறட்சி நீங்கி மென்மையாகும். பாதம் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து உதடுகளில் ஐந்து நிமிடம் தேய்க்கவும். தினசரி இதனை தேய்க்க உதடுகள் மென்மையாகும்.

இளம் பெண்களை விலை மாதுத்தொழில் ஈடுபடுத்திய பிரபல நடிகை கைது

சினிமாவில் நடிக்க ஆசை காட்டி இளம் பெண்களை விலை மாதுத்தொழிலில் ஈடுபடுத்தியதாக தெலுங்கு நடிகை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரபல தெலுங்கு நடிகை தாரா சவுத்ரி அத்ருஸ்யம், ரக்ஷாகுடு, லவ்டிக்கெட், பிரியசகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை விலை மாதுத்தொழிலில் தள்ளியதாக பொலிஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து பஞ்சாரா ஹில்ஸ் பொலிஸில் ஒரு பெண் தாரா சவுத்ரி மீது பரபரப்பான புகார் அளித்தார். அவர் கூறியதாவது, எனக்கு நடிகை தாரா சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை காட்டினார். அதை நம்பி சென்ற என்னை வலுக்கட்டாயமாக விலை மாதுத்தொழில் ஈடுபடுத்தினார். அவரிடம் இருந்து தப்பி வந்து இந்த புகாரை அளிக்கிறேன் என்று அப்பெண் தெரிவித்தார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடமிருந்து மடிக்கணிணிகள், ரகசிய கமெரா, டைரி, பெட்டி நிறைய ஆணுறைகள், 8 செல்போன்கள், முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ். ராஜ சேகரரெட்டியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், 21 சிம்கார்டுகள் போன்றவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அவரது டைரியில் அரசியல் பிரபலங்களின் போன் நம்பர்கள் இருந்தன. மேலும் ஒரு ஓடியோ கேசட்டில் தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் கேட்டு பேரம் பேசியது பதிவாகி இருந்தது. தாரா சவுத்ரியிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது ஆந்திரா, கர்நாடகாவில் ஏராளமான பெண்களை விபசாரத்தில் தள்ளியிருப்பது தெரிய வந்துள்ளது. சினிமா ஆசையில் வரும் பெண்களை மயக்கி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு இளம்பெண்களை விலை மாதுக்களாக ஈடுபடுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. தனது கைது குறித்து தாரா சவுத்ரி ஊடகங்களிடம் கூறியதாவது, தனக்கு சதி செய்து சிக்க வைத்து விட்டதாகவும் நிறைய நபர்களின் ஜாதகம் தன் கைவசம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது சிறையில் இருக்கும் அவர், வெளியே வந்ததும் பல ரகசியங்களை வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.

பிரேம்குமாரை யார் கடத்தினார்கள் என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்: வீரவன்ச கோரிக்கை

மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான பிரேம்குமார் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரை யார் கடத்தினார்கள் என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பிரேம்குமார் குணரட்னம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்கள் கடத்தப்பட்டிருந்தால் அதனை யார் செய்தார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். வழமை போன்று இந்தக் கடத்தல் சம்பவத்திற்கும் பாதுகாப்பு தரப்பை குற்றம் சுமத்துவது இலகுவானது. எனினும், இவ்வாறு குற்றம் சுமத்துவதன் மூலம் வேறும் தரப்பினர் இந்தச் சம்பவத்தில் தொடர்பு பட்டிருந்தால் அவர்கள் தப்பிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இலங்கைக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகள் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் தருணத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் சிலர் செயற்படுகின்றனர். அண்மையில் மட்டக்களப்பு நகரில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியிலும் இந்தக் கும்பல் இயங்கியுள்ளது. எனவே பிரேம்குமார் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தல் சம்பவம் தொடர்பில் உண்மையான தகவல்களை அரசாங்கம் துரித கதியில் வெளியிட வேண்டுமென விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

அணு உலையை எதிர்ப்பதா? இலங்கைக்கு கருணாநிதி கண்டனம்

கூடங்குளம் உள்ளிட்ட தென்னிந்திய அணு மின் நிலையங்கள் குறித்து புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ள இலங்கைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்," அணுமின் திட்டம் நேற்று ஆரம்பிக்கவில்லை. அந்த திட்டம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தற்போது கூடங்குளம் பற்றி இலங்கை பிரச்னை எழுப்பியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் கூற மாட்டேன். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார். முன்னதாக தென்னிந்தியாவில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் குறித்து கவலை தெரிவித்த இலங்கை மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை அமைச்சர் சம்பிகா ராணாவாகா, இவற்றில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக பாதிக்கப்படும் என்றும், எனவே சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் அமைந்துள்ள அணுமின் நிலையங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள இலங்கை, இவற்றில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக பாதிக்கப்படும் என்று சர்வதேச அணுசக்தி ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளது. இது குறித்து இலங்கை மின்சாரம் மற்றும் ஆற்றல் துறை அமைச்சர் சம்பிகா ராணாவாகா கூறுகையில், "அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும் நாடுகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என சர்வதேச அணுசக்தி ஆணையம் கூறியுள்ளது. எனவே, இது குறித்து இந்திய அரசுக்கு இலங்கை கடிதம் எழுதியது.இந்த கடிதத்திற்கு இந்தியாவும் பதிலளித்துள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து வருகிற செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச அணுசக்தி ஆணையம் கூட்டத்தில் இலங்கை பிரச்னை எழுப்பும். மேலும், அணுமின் நிலையங்களில் பிரச்னை ஏற்பட்டால் இலங்கை நேரிடையாக பாதிக்கப்படும். இதனால், தென்னிந்தியாவில் அணு உலை உள்ள பகுதிகளில் கதிர்வீச்சு பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதன் மூலம் இந்திய அணுமின் நிலையங்களில் ஏற்படும் கதிர்வீச்சு அதிகம் ஏற்பட்டால் எங்களுக்கு தெரியவரும்" என்றார். தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் மற்றும் கர்நாடக மாநிலம் கைகா அணுமின் நிலையம் ஆகியவை பற்றியே இலங்கை அரசு தற்போது பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கையில் அணுமின் நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, April 9, 2012

தமிழ்நட்பு: சினிமாவை பாடல்கலை மிஞ்சும் திருமண வீடியோ பாடல்

தமிழ்நட்பு: சினிமாவை பாடல்கலை மிஞ்சும் திருமண வீடியோ பாடல்: youtube விடியோவில் என் கண்ணுக்கு தென்பட்ட இலங்கையில் புத்தளத்தில் எடுக்கப்பட்ட திருமண வீடியோ மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது.fac...

விடுக்கக் கோருகிறது அவுஸ்திரேலியா! கண்டுபிடிக்கக் காரணத்தைக் கேட்கிறது இலங்கை!!

நன்கு திட்டமிட்டுக் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மக்கள் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணத்தை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவுஸ்திரேலிய வெளியுறசு அமைச்சர் பொப் கார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தம் நாட்டுப் பிரஜையான குணரட்ணத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கருதும் நிலையில் அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இந்த விவகாரத்தை நேரடியாக இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனால்தான் அவுஸ்திரேலிய செனட் சபையின் உறுப்பினர் என்ற வகையில் எமது வெளியுறவு அமைச்சரிடமும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவரிடமும் நான் இதனை எடுத்துச் சென்றிருக்கிறேன்” என்று லீ ரெய்னன் கூறியுள்ளார். கடத்தப்பட்ட பிரேமகுமாரின் மனைவியான டாக்டர் சம்பா சோமரட்ணவை தான் தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியதாகக் கூறியுள்ள செனட்டர் லீ, இந்த விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை பிரேமகுமாரை கைது செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவே உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியிருப்பது குறித்து தான் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் லீ அவர்கள் கூறியுள்ளார். இதற்கிடையே பிரேம்குமார் குணரட்ணத்தை தாம் தேடிக் கண்டுபிடிப்பதாயின் அவர் எப்போது இலங்கை வந்தார் என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோத்தபாய ராஜபக்ச அவர்கள் கூறியதாக இலங்கை செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியான பெயருடன் எவரும் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்ததாக அந்தச் செய்தி கூறியுள்ளது. இது குறித்து அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரெய்னன் அவர்களிடம் கேட்டபோது, ”இலங்கை அரசாங்கம் இப்படிக் கூறுவது குறித்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் பிரேம்குமார் குணரட்ணத்தின் மனைவியுடன் இன்று பேசினேன். அவர் இந்தச் சம்பவம் குறித்து மிகுந்த கவலையில் இருக்கிறார். அத்துடன்,தனது கணவர் இலங்கையில்தான் இருக்கிறார் என்பதிலும், ஏப்ரல் 6 ஆம் திகதி கடத்தப்பட்டார் என்பதிலும் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அதனால், இந்த விடயத்தை மிகவும் உயர் மட்டத்துக்கு எடுத்துச் செல்லுமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துவேன்” என்று செனட்டர் லீ ரெய்னன் கூறினார். அதேவேளை முன்னதாக பிரேம்குமார் குணரட்ணத்தின் மனைவியான டாக்டர் சம்பா சோமரட்ண அவர்கள், இது குறித்து ஐநாவின் மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தனது கணவரான பிரேம்குமார் குணரட்ணம் என்று அழைக்கப்படும் ரட்ணாயக்க முதியன்சலாகே தயாலால் கடத்தப்பட்டதாக தெளிவாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிதத்தில் தனது கணவரின் கடத்தல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் மீதே குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையே, இலங்கையில் மாற்று கருத்துக்கொண்டவர்கள் கடத்தப்படும் சூழ்நிலை தொடர்வதால், அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்று கோரி அவுஸ்திரேலியாவில் ஒரு ஆர்ப்பாட்டம் இன்று நடந்துள்ளது. இதுவரை கடந்த இரு மாதங்களில் இலங்கையில் 29 பேர்வரை கடத்தப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள செனட்டர் லீ ரெய்னன், தமது சொந்த அரசியல் கருத்துக்களுக்காக ஒரு அவுஸ்திரேலியப் பிரஜை இலங்கையில் ஆபத்துக்குள்ளாவது இது முதல் தடவை அல்ல என்றும் கூறியுள்ளார்.

தேசிய தலைவர் நாமம் 3,000 ஆண்டுகள் நிலைக்கும்: சிங்களவர் கூற்று !

தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார்.பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது இவ்வாறு தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளைகல்சிசை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன. உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளி வாய்க்கால்வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது. பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார். அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க மாட்டோம். அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட. தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப்பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும். பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் மஹிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இடுப்புக்கு மேல அம்புட்டும் பளிச்சுன்னு தெரியற மாதிரி தமன்னா!

மாவீரன்ல பட்டைய கிளப்புனாருல்ல ராம்சரண்.. ஆமா.. சிரஞ்சீவியோட புள்ள.. அவரு நடிச்சு சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிச்சிருக்கிற படம் ரகளை.. அப்படின்னா ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்..நாமும் எதிர்பார்ப்போடுதான் ரகளைய பார்க்கப் போனோம்.. தூங்கி எந்திரிச்சவுடனயே ஒரு ஃப்ரஷ்னஸ் இருக்கும்ல.. அப்படி ஒரு ஃப்ரஷ்னஸ் எப்பவும் இருக்கு ராம்சரண் முகத்துல.. ஆனா.. வீரதீர காட்சிகளிலும் கூட சோகம் அப்பியிருக்கிற மாதிரியே முகபாவனை காட்டுறாரு.. சுறுசுறுப்புலயோ ஆட்டபாட்டத்துலயோ அவரு குறை வைக்கல. யூத்துகளுக்கு பிடிக்கிற மாதிரி ரொம்பவும் ஸ்டைலிஷாகத்தான் படம் முழுக்க வர்றாரு.. சண்டைக் காட்சிகள்லயும் தூள் கிளப்புறாரு. தமன்னாவோட இயல்பான அழகை ஒரே ஒரு அருவிக் குளியல் காட்சியில மட்டும்தான் பார்க்க முடியுது.. மத்தபடி படம் முழுக்க ஒப்பனை முகம்தான். ஒரு பாடல் காட்சியில இடுப்புக்கு மேல அம்புட்டும் பளிச்சுன்னு தெரியற மாதிரி வர்றாரு.. இடுப்பை மட்டுமல்ல உடம்பயும் வில்லா வளைச்சு அந்த ஆட்டம் போடறாரு. நம்ம பார்த்திபன், நாசர், அஜ்மல்ன்னு இவங்களும் வந்து போறாங்க. வில்லன் கோட்டா சீனிவாசராவின் பாத்திரமும் கூட பேசும் அளவுக்கு இல்லை. இதுக்கு மேல பாலிவுட் வில்லன்கள் அஞ்சு பேரு வேற எப்பப் பார்த்தாலும் உறுமிக்கிட்டே இருக்காங்க. மணிசர்மா மியூசிக் போட்ருக்காரு.. ஒண்ணு ரெண்டு பாடல் ஓ.கே.. மத்தபடி பெரிசா சொல்லிக்கிர்ற மாதிரி இல்ல.. சமீரோட கேமராவுக்கு நல்ல தீனி.. இங்கே பொள்ளாச்சி, ஹைதராபாத், கோவான்னு ஆரம்பிச்சு.. பாங்காக், சுவிட்சர்லாந்து, மலேசியா, சீனாவுல உள்ள மூங்கில்காடு வரைக்கும் காட்சிகளை அள்ளிக் கொண்டு வந்து திரையில கொட்டியிருக்கு.
பத்து நிமிஷத்துக்கு ஒரு பாட்டு வந்தே ஆகணும். அதுவும் ஸ்பீட் டான்ஸா இருந்தாகணும்கிறதுல இருந்து இந்தத் தெலுங்கு சினிமாக்காரங்க மாறவே மாட்டாங்க போல. ரகளையும் அந்த ரகம்தான். தெலுங்குலயும், தமிழ்லயும் எடுத்தாலும் தெலுங்கு நெடியே தூக்கலா இருக்கு. மாவீரன் பாப்புலாரிட்டிய வச்சே படத்த ஓட்டிடலாம்கிற நம்பிக்கையில 40 கோடிய இரைச்சிருக்காராம் சவுத்ரி. இந்தியாவுல எந்தப் படத்துக்கும் இந்த அளவுக்கு வால் போஸ்டர் அடிச்சதில்லையாம்.. முதல் கட்டவால் போஸ்டர் செலவு மட்டுமே 70 லட்ச ரூபாயாம். காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் காட்டினா போதுமா? மனசுல ஒட்டணுமே..? எப்படி எடுத்தாலும் மசாலா படம் ஓடும்கிற நம்பிக்கை ரொம்பவே இருக்கும் போல இந்த ரகளை யூனிட்டுக்கு.
சின்ன வயசுல பிரிஞ்சு வளர்ந்த பிறகு ஒண்ணு சேர்ற கதாபாத்திரங்கள்.. உச் கொட்ட வைக்கணும்னு வலிய திணிக்கிற ஃப்ளாஷ் பேக்.. தெலுங்கு சினிமாக்களில் இடம் பெறும் காளி கோயில்ன்னு வழக்கமான எல்லா சங்கதிகளும் இதிலும் உண்டு. ஆமா.. கதை.. திரைக்கதை..? எந்தப் பக்கமும் இழுக்க முடிகிற ஒரு ரப்பர் கதையை வைத்துக் கொண்டு மனம் போன போக்கில் இழுத்திருக்கிறார்கள். இயக்குனர் சம்பத்தாம்.. டைரக்டர் சார்.. அடுத்தாச்சும் உருப்படியா யோசிச்சு ஒரு நல்ல படம் பண்ணுங்க.. படம் முடிஞ்சு வெளிய வர்றப்ப, இதே மாதிரி மசாலா படங்கள எத்தனையோ தடவ பார்த்தாச்சேங்கிற சலிப்பும் சேர்ந்து வருது. ரணவேதனை என்று ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது என்றாலும்.. ரகளை ஏனோ களை கட்டவில்லை.!

எப்படி இருந்த மனிஷா கொய்ரால இப்புடி ஆயுட்டுதே..கண்ணை கட்டும் புகைப்படம்

சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான நாயகி மனிஷா கொய்ரால திருமண வாழ்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளினால் காணமல் போயிருந்தார்..மிக அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறது..முன்னால் கனவுக்கன்னி இந்தநாள் ????

அடுத்து பஞ்ச பாண்டவர்களின் மனைவியாக நயன்தாரா

ராமனின் மனைவி சீதையாக நடித்த நயன்தாரா, தற்போது பஞ்ப பாண்டவர்களின் மனைவி திரவுபதி வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார் நயன்தாரா. அவர் இந்த வேடத்தில் நடிக்க வரும்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பெண்ணிடமிருந்து அவரது கணவரைக் கவர துடிக்கும் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதா என்பதே பலரின் எதிர்ப்புக்கு காரணம். இருந்தாலும் தெலுங்குப் பட நாயகன் என்.டி.ஆர் பாலகிருஷ்ணா அதைப் பொருட்படுத்தாமல் நயன்தாராவை சீதையாக நடிக்க வைத்தார். படமும் வெளியாகி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சீதைக்குத் தான் செம வரவேற்பு. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போன பாலகிருஷ்ணா மறுபடியும் நயன்தாராவை வைத்து இன்னொரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த முறை நயன்தாராவை திரவுபதியாக்கப் போகிறாராம் பாலு. பல வருடங்களுக்கு முன்பு திரவுபதி கதையை படமாக்க முடிவு செய்திருந்தார் இவர். அந்த வேடத்தில் மறைந்த நடிகை செளந்தர்யாவை நடிக்க முடிவு செய்து படமும் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக செளந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் படத்தை கைவிட்டார் பாலகிருஷ்ணா. தற்போது நயன்தாராவின் அபாரமான நடிப்பால் அசந்து போய் விட்ட பாலகிருஷ்ணா, அவரையே திரவுபதி வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இதுதொடர்பாக நயன்தாராவிடம் பேசியுள்ளாராம். அவரும் சம்மதிப்பார் என்று தெரிகிறது. படத்திற்கு நர்த்தன சாலா என்று பெயரிட்டுள்ளார் பாலகிருஷ்ணா. நயன்தாரா சரி என்று சொன்னதும், படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் பாலகிருஷ்ணா.

தமிழ்நாட்டில் புலிகளுக்குச் சிறப்புப் பயிற்சி! மறுக்கிறது இந்தியத் தூதரகம்!!

பயங்கரவாதிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதாகத் தெரிவிக்கப்படுவதை இந்தியத் தூதரகம் முற்றுமுழுதாக மறுத்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டில் சிறப்புப் பயிற்சி பெற்ற விடுதலைப்புலிகள் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன. இந் நிலையிலேயே மேற்படி தூதரம் மறுப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. விடுதலைப்புலிகள் இலங்கையின் உறுதித்தன்மையை பலமிழக்கச் செய்வதற்காக இந்தியாவிலிருந்து திரும்புகிறார்கள் என்றும் இத்தகைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாக நேற்றைய தினம் ஆங்கில ஊடகமான தி ஐலன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தியத் தூதரகம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. இது குறித்து இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இன்றைய தி ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்த புலிகள் இலங்கையின் உறுதித் தன்மையைப் பலமிழக்கச் செய்வதற்காக இந்தியாவிலிருந்து திரும்புகிறார்கள் இலங்கைப் புலனாய்வு அறிக்கை மூவர் கைது ஏனையோர் தலைமறைவு எனத் தலைப்பிடப்பட்ட செய்தி எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் செய்தியிற் குறிப்பிடப்பட்ட இந்தியாவில் தமிழ் நாட்டின் இரகசிய முகாம்களில் பயங்கரவாதிகள் பயற்சியளிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய கருத்து முற்று முழுதாகத் தவறானதும் அடிப்படையற்றதுமாகும். இது சம்பந்தமாக இரு நாட்டினது பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயலாற்றுவதுடன் இத்தகையவொரு தகவல் அவர்களால் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திருகோணமலையில் கடந்த வாரம் ஈ.பி.டி.பி. உறுப்பினரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபரொருவர் இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் இலங்கை வந்திருப்பதாக கூறியதாகவும் இதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருகோணமலை அன்புவழிபுரம், அநுராதபுரம் ந்தி ஆகிய பகுதிகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையினை நேற்றும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெருக்குகிறது ஐ.நா.! மூச்சுத் திணறுகிறது இலங்கை!!

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐ.நாவின் பங்கு பணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத் தகவலை ஜெனிவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம் வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் தொலைபேசி வழியாக அளித்துள்ள செவ்வி ஒன்றில், நம்பகமான வட்டாரங்கள் மூலம் தமக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்த மீளாய்வை மேற்கொள்வதற்காக தொராயா ஒபெய்ட் என்ற ஐ.நாவின் மூத்த அதிகாரி ஒருவரை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் ஏற்கனவே நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள, நாடுகளின் மனிதஉரிமைகள் நிலவரம் தொடர்பாக ஆராயும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சிறிலங்கா தொடர்பாக 3 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் தாமரா குணநாயகம் கூறியுள்ளார். அத்துடன், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்தமாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில், ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஐ.நா அதிகாரிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, தொடர்பாக இந்த அறிக்கையில் சிறிலங்கா மீது குறை கூறப்படும் சாத்தியம் உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Friday, April 6, 2012

சன் சீ கப்பலில் அகதிகளை சட்டவிரோதமாக அனுப்பியவரை கனடா உறுதி செய்தது

‘சன் சீ‘ கப்பலில் 492 தமிழர்களை அகதிகளாக கனடாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்தாக, பிரான்சில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவரே குற்றவாளி என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தயாகரன் மார்க்கண்டு என்பவரே கனடாவில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இவர் அண்மையில் பிரான்சில் நடத்தப்தப்பட்ட தேடுதல் ஒன்றின் போது கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக கனேடிய சமஸ்டி காவல்துறை, கடந்தமாதம் அனைத்துலக பிடியாணையை பிறப்பித்துள்ளது. தயாகரன் மார்க்கண்டு தற்போது பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், அவரை கனடாவிடம் ஒப்படைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைசர் விக் ரொவ்ஸ் மற்றும் குடிவரவு அமைச்சர் ஜாசென் கென்னி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா விசாரணைக்குப் பயந்து லண்டனில் இருந்து தப்பியோட்டம்

லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், விரைவில் கொழும்பு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் “தி கார்டியன்“ நாளேடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் 55ஆவது டிவிசனுக்கும், 59ஆவது டிவிசனுக்கும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, பெருமளவு பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். மருத்துவமனைகள்,. மற்றும் பாதுகாப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு தமிழ்மக்களைப் படுகொலை செய்து போர்க்குற்றம் இழைத்த இவர் மீது பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை கோரியுள்ளது. போர்க்குற்றங்களுக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, லண்டனின் குடும்பத்தினருடன் தங்கியுள்ள போதும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கு எதிராக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கிக்கு எதிராக உலகத் தமிழர் பேரவை சட்ட நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது. அத்துடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய மனு ஒன்று ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈஸ்டர் காலம் என்பதால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இரண்டு வாரங்களாகும் என்று சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், பிரித்தானியாவில் தாம் விசாரிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தினால், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் இருந்து விரைவில் வெளியேறவுள்ளார். இதுகுறித்து அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் 18 மாதகால பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் அவர் நாடு திரும்பவுள்ளதாக கூறியுள்ளார். இந்த வழக்கமான மாற்றத்துக்கும் உலகத் தமிழர் பேரவையின் சட்டநடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பழிக்கு பழி வாங்கும் இலங்கை..! எண்ணெய் நிறுவன (IOC) ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏற்பாடு!

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (IOC) செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பழிதீர்க்கும் நோக்கில் இந்தியாவிற்கிடையிலான வர்த்தக உறவுகளில் இடைவெளியை அதிகரித்துக் கொள்வதற்கு மகிந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கமையேவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக மோட்டார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரித்துள்ளது. சிறிய ரக வாகனங்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட போதிலும், இந்தியாவைத் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படவில்லை. இவ்வாறு வரி அதிகரிக்கப்பட்டதன்மூலம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ”மாருதி” வாகனம், ”டாட்டா நெனோ” மோட்டார் வாகனம் ஆகியவற்றின் விலை 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளது. இந்த வாகனங்கள் தற்போது 16 முதல் 17 லட்சம் ரூபா வரையில் விற்பனையாகிறது. இதனைத்தவிர முச்சக்கர வண்டியொன்றின் விலை ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரையில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விலை 80 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விசேட அம்சம் என்னவெனில், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு வாகனத்திற்கும் வரி அதிகரிக்கப்படவில்லை. இதில் மற்றுமொரு கட்டமாக இந்திய ஒயில் நிறுவனத்திற்கு (IOC) குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள திருகோணமலை துறைமுக எண்ணெய்க் குதங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கோரப்பட்டுள்ளன. எண்ணெய்வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதுகுறித்து கருத்துதெரிவிக்கும்போது, இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதற்கான அதிகாரம் இலங்கை எண்ணெய்வளத்துறை நிறுவனத்திற்கு இல்லை எனவும் இதற்கான அதிகாரம் திறைசேரியிடமே இருப்பதாகவும் கூறியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில், ஏப்ரல் 08ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை புதுடில்லியில் ‘South Asian Political Research Institute – SAPRI’ என்ற மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு முடிவடைந்த பின்னர் மகிந்த அரசாங்கத்தின் இந்தியா மீதான பழிதீர்க்கும் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன், குறித்த இந்திய மாநாட்டில் கலந்துகொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, மங்கள சமரவீர, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் செயற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையொன்றைத் தாக்கல் செய்யுமாறும் மகிந்த ராஜபக்‌ஷ அரச புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Saturday, March 31, 2012

கணவனை வைத்து தமிழில் - A - படம் எடுத்த ஒரே மனைவி ஐஸ்வர்யா தான் !

தனுஷ் நடித்த 3 படத்திற்கு "A" சான்றிதழ் கிடைத்துள்ளது, இதில் காணப்படும் அதிகபட்ச ரொமான்ஸ் காட்சிகளால் இந்த படம் வயது வந்தவர்களுக்கான படமாக சென்ஸார் அதிகாரிகளால் வரையறுக்கப்பட்டுள்ளது, எனினும் இதில் உள்ள ரொமான்ஸ் காட்சிகளை அகற்றினால் "U" சான்றிதழுடன் படம் வெளியிடப்படும், புருசன வைச்சு பிட்டு படம் எடுத்த முதல் மனைவி ஐஸ்வர்யா தான் , வாழ்க உன் புகழ் கொலவெறி உள்ள வரை!

3 (மூன்று)

கொலவெறிப் பாடல் ரிலீஸான சமயத்திலேயே இந்த 3 படத்தை பத்திரிகையாளர்களுக்கான காட்சியில் போய் பார்க்கக் கூடாதென்று முடிவெடுத்துவிட்டேன்.தியேட்டரில் நல்ல கூட்டத்துடன் கியூவில் நின்று படம் பார்க்கும் அனுபவமே தனி. இன்று காலை ஒரு பி செண்டர் தியேட்டரில் நண்பகல் 12 மணி காட்சிக்காக 11 மணிக்கே போய் நின்றேன். பெரிய கூட்டம் இல்லையென்றாலும் நேரம் ஆக ஆக ஹவுஸ்ஃபுல் ஆகும் அறிகுறி தெரிந்தது. எல்லாம் +2, கல்லூரி மாணவ,மாணவிகள். 25 ரூபாய் டிக்கட்டை கவுண்டரிலேயே 100 ரூபாய்க்கு விற்கிறார்கள். அந்தக்கொள்ளை போதாதென்று டூ வீலர் பார்க்கிங் 20 ரூபாய். இப்படிப்பட்ட எரிச்சலான மனநிலையில் உள்ளே போவதால்தான் சுமாரான படங்களைக் கூட மக்கள் மொக்கைப்படம்டா போயிடாத என்று மெஸேஜ் அனுப்புகிறார்கள். குப்புற விழுந்துகிடக்கும் தமிழ்சினிமாவை தூக்கி நிறுத்த விரும்பும் புண்ணியவான்கள் தங்கள் பணியை இந்த மாதிரியான தியேட்டர்களிலிருந்து தொடங்கவேண்டும் என்பது அடியேனின் ஆசை. ***************** இருவீட்டாரும் திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், காதலர்கள் எங்கே போய் தாலி கட்டிக்கொள்ளலாம் ? 3 பட டிஸ்கசனில், அறிமுக இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கேள்வி. ரிஜிஸ்தர் ஆபீஸ் மேடம் இது ரொம்ப பழைய ஸ்டைல்பா... குலதெய்வம் கோயில்ல மேடம்.. அப்பிடி பல தெய்வத்தைப் படங்கள்ல பாத்தாச்சி. வேற ஏதாவது இண்ட்ரஸ்டிங்கா... கல்ச்சர் ஷாக் குடுக்குற மாதிரி ? அப்ப நாம குடிகாரங்க கூத்தடிக்கிற டிஸ்கொத்தே பார்ல தான் மேடம் வைக்கணும் சூப்பர் .. நாம நம்ம கதையில தனுஷுக்கும்,ஸ்ருதிக்கும் நடக்கிற கல்யாணத்தை பார்ல தான் வக்கிறோம். தமிழனுக்கு கல்ச்சர் ஷாக் குடுக்கிறோம். இதற்கு முன்பு செல்வராகவன் வகையறாக்கள் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்டிலேயே தமிழர்கள் தவித்து தண்ணி குடித்தது போதாதென்று, இப்போது அந்த குடும்பத்து மருமகளான ஐஸ்வர்யா மேற்படி திருமண காட்சியை ஒரு வடம் சைஸில் தாலி செய்து, டிஸ்கொத்தே பாரில்தான் அரங்கேற்றியிருக்கிறார்.மாப்பிள்ளையும் பொண்ணும் பீர் கிளாஸை கையில் வைத்துக்கொண்டு சியர்ஸ் சொன்னபடியே தாலிகட்டிக்கொள்கிறார்கள். சரி,3 கதைக்கு வருவோம். +2 படிக்கும்போது, ஒரு மழைநாளில்,சைக்கிள் செயினை மாட்டி உதவப்போகும் வேளையில், முதல் பார்வையிலேயே ஸ்ருதி மீது காதல்கொள்கிறார் தனுஷ். சரி,நம்மள மாதிரி பெரிய இடத்துப்பிள்ளையாச்சே என்று பெரும் எதிர்ப்பு காட்டாமல் ஸ்ருதி சம்மதிக்க, கொஞ்ச காலம் காதலித்து, அப்புறம் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள். வாழ்க்கை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும்போதே, ஸ்ருதியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கிறார் தனுஷ். அப்புறம் க்ளைமேக்ஸ் நெருங்கும் வேளையில், நம்மை டைரக்டர் ஐஸ்வர்யா டார்ச்சர் பண்ணுவது போல், பச்சைக்கலரில் நாலைந்து உருவங்கள் தொடர்ந்து வந்து டார்ச்சர் கொடுக்கவே, தாங்க முடியாத வெறிகொண்டு கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொல்கிறார் தனுஷ். நடுவில் நடந்தது என்ன வெண் திரையில் பாருங்கள்.. படத்தின் முதல் காட்சியிலேயே, தனுஷின் சடலத்துக்கு எல்லோரும் மாலை போட்டுக்கொண்டு போவது போல் காட்டியதாலோ என்னவோ, படத்துக்கு பாடை கட்டும் ஒருவித ஃபீலிங் அங்கிருந்தே துவங்கி விடுகிறது. ஆனால் அதற்காக ஐஸ்வர்யாவை ஒரேயடியாக மொக்கை டைரக்டர் என்று சொல்லிவிடமுடியவில்லை. படத்தின் முதல் பாதியில் வரும் சில காதல் காட்சிகள், அக்காவின் காதலுக்கு எப்போதுமே கட்டை விரலை ரெடியாக தூக்கி காத்திருக்கும் குட்டி ஊமைத்தங்கச்சி, அதிலும் அவள் அக்காவின் காதலுக்கு ஓ.கே.சொல்லச்சொல்லி, அப்பாவிடம் முதல் முறையாக பேச ஆரம்பிக்கும் காட்சி என்று சில இடங்களில் தேர்ந்த டைரக்டருக்கான முத்திரைகள் பதித்திருக்கிறார். ஆனால் இடைவேளைக்கு அப்புறம் தனுஷுக்கு யாருக்கும் தெரியாத மூனாவது ஒன்று இருக்கிறது என்று ஆரம்பித்து தனுஷையும், நம்மையும் ஒரே சமயத்தில் அந்த ஷொபியோபொபிஅயுமேனியா நோய்க்கு உட்படுத்தி இம்சிக்க ஆரம்பித்துவிடுகிறார். நடிப்பு என்று வரும்போது தனுஷ் ஒவ்வொரு படத்திலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து போவதற்கு,பல காட்சிகள் சாட்சிகளாகின்றன.ஸ்ருதியையும் சும்மா சொல்லிவிடமுடியாது. ஆனால் அவர் பேசும் தமிழ் சதா மப்பில் இருப்பது போலவே ஒரு மனப்பிராந்தி. இவர்கள் இருவரையும் ஜோடிகளாகப் பார்க்கும்போது, அவர்கள் காட்டும் நெருக்கத்தில் கெமிஷ்ட்ரி,ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாமே நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகிறது. தனுஷின் நண்பர்களாக வரும் சிவகார்த்திகேயனும்,சுந்தரும் சரக்குக்கு ஏத்த சைடிஷ்கள். முதல் பாதியில் மட்டும் வந்து தனுஷை தொடர்ந்து லந்து தரும் சிவகார்த்திகேயன் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.தனுஷின் இம்சைக்காக டுடேரியல் காலேஜில் போய் அமர்ந்து கொண்டு,டேய் மச்சான் அவன் படிக்கிறாண்டா என்று அதிச்சி அடைவதும்,... தனுஷ்,ஸ்ருதி நேத்து எனக்கு திடீர்னு முத்தம் குடுத்துட்டு ஓடிபோயிட்டாடா என்றவுடன் எவன் கூட? என்று கவுண்டர் அடிப்பதும் சிவகார்த்திகேய ஸ்பெஷல்கள். தனுசுக்காக படம் முழுக்க விவஸ்தையற்ற பல அவஸ்தைகளை சந்திக்கும் சுந்தர், போதையிலும் சரி, சும்மா இருக்கும்போதும் சரி, தனுஷைப்பார்த்து சுமார் 100 முறையாவது மச்சான் பேசாம ஆஸ்பத்திரில சேர்ந்துரலாம் மச்சான் என்கிறார். ஆனால் அதை ஏன் தனுஷ் அலட்சியம் செய்கிறார் ? ஒருவேளை அப்படி தனுஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்துவிட்டால், கதைக்கு எங்கே போவது என்று கன்ஃபியூஸ் ஆகிவிட்டாரோ டைரக்டர் . வொய் திஸ் கொலவெறி தவிர்த்த படத்தின் மற்ற பாடல்களும், பின்னணி இசையும்,சத்தியமா நான் ஒன் சாங் ஒண்டர் தானுங்கண்ணா என்று அனிருத்தை பக்காவாக பறை சாற்றுகின்றன. ஸ்கூல் காட்சிகளில் ஒளிப்பதிவும் கூட கொஞ்சம் சின்னப்புள்ளத்தனமா இருக்கட்டும் என்று வேண்டுமென்றே செய்தாரோ என்னவோ, இடைவேளைக்குப்பிறகு படு மெச்சூரிட்டியான பதிவு வேல்ராஜுவுடையது. நாட்டில் சைக்கோக்கள் அதிகமாகிவிட்டார்கள் என்பதற்காக எதற்கெடுத்தாலும் எங்களைப்பற்றியே படமெடுப்பதை நாங்கள் விரும்புவதில்லை தனுஷ், ஐஸ்வர்யா அவர்களே! ****************************** 3 பின்குறிப்புகள் ; உங்களையும் என்னையும் விட தனுஷ் ரொம்பவே புத்திசாலி, மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தான் நடிப்பது இதுவே கடைசி என்று அவர் அறிவித்து ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2.மக்கள் படத்தை எப்படி ரசிக்கிறார்கள் என்று ரகஸியமாகப்பார்ப்பதற்காக இன்று அனிருத், ஒரு தியேட்டருக்கு தனியாகப் போனாராம். கான்வெண்ட் படிக்கிற பசங்கள்லாம் தனியா நாட் அல்லவுட் என்று தியேட்டர் நிர்வாகம் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டதாம். 1.ஆளாளுக்கு ரொம்ப கிண்டல் பண்றாங்க என்பதால்,இனி சுண்டல் விக்கிறவனாக்கூட நடிக்கத்தயார் ஆனா அடுத்து ஒரு பத்து வருஷத்துக்கு மெண்டலா மட்டும் நடிக்க யாரும் என்னைக்கூப்புடாதீங்க என்று மத்தியான வெயிலில் மரினா பீச்சிலிருந்து கத்த வேண்டும் போல இருக்கிறதாம் தனுஷுக்கு..

Sunday, March 25, 2012

நிர்வாண கோலத்தில் விளையாட்டு! (கிளு கிளுப்பு வீடியோ இணைப்பு)

இந்த உலகம் நவ நாகரீக வாழ்வை நோக்கி படு வேகமாக வளர்ச்சி அடைந்த சென்றாலும் தற்போது நாம் ஆதிகாலத்தை நோக்கி நகர்வதாற்கான சில ஏதுநிலைகள் காணப்படுகின்றதோ என்று தோண்றும் அளவுக்கு இருக்கின்றது இன்றை மனித வாழ்வு…. அப்படி என்ன தான் என்று கேட்கின்றீர்களா? அண்மையில் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற பெற்ற விருத்து உபசாரம் ஒன்றில் பங்கு பற்றியவர்கள் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் பங்கு கொண்டு அங்கு இடம்பெற்ற களியாட்டங்களில் கலந்து கொண்டதுடன் விளையாட்டுங்களிலும் கலந்து கொண்டுள்ளனர். இந் நிகழ்வில், கைதொலைபேசி, கமரா, மது என்பவற்றுக்கு தடை வித்திக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கலாச்சாரம் சீரழிந்து சென்றால் மனித வாழ்வின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

அமெரிக்க செனட் சபையில் இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கிறார் ஸ்டீபன் ராப்!!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனட் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டீபன் ராப் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் இலங்கை அரசதரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அத்துடன், முல்லைத்தீவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களையும் அவர் சேகரித்திருந்தார். இலங்கை தொடர்பாக, தூதுவர் ஸ்டீபன் ராப் அமெரிக்க செனட் சபைக்கு சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும். இந்தப் பயணத்தின் அடிப்படையிலேயே அவர் செனெட் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Monday, March 19, 2012

களத்தில் குதித்தார் ஹிலாரி!! அதிர்ச்சியில் உறைந்தது இலங்கை!!

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சூழலில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இவ் விவகாரத்தை நேரடியாகக் கையாள்வதற்காக தற்போது களத்தில் குதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற மொத்தம் 47 நாடுகளில், லிபியாவுக்கான வாக்களிக்கும் தகமை தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 46 நாடுகளே வாக்களிக்கும் தகமையைப் பெற்றுள்ளன. குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன், தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்கள், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு சினத்தை ஏற்படுத்தியிருந்ததோடு, அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு முஸ்லிம் மக்களை, இலங்கை பாவித்தமை அமெரிக்காவுக்கு கோபத்தை அதிகரித்ததாக அறியமுடிகின்றது. இந்நிலையிலேயே, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், கீழ் நிலை இராஜாங்க மட்டத்தில் இருந்த இலங்கை தொடர்பிலான பிரேரணை விவகாரத்தை, தற்போது கையில் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக இலங்கை மேற்கொண்ட சகல விடயங்களை உன்னிப்பாக கவனித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இலங்கைக்கு இவ்விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைச் சபையில் கடுமை அதிர்ச்சியைக் கொடுப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய சூழிலிலேயே, இலங்கையினுடைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இலங்கை அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமைச் சபைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே வாஷிங்டன் வருமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு, ஹிலாரி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இருப்பினும் குறித்த இந்தக் கடிதத்துக்கு ஜீ.எல்.பீரிஸ் பதிலளிக்காத நிலையில், தற்போது இலங்கை அரச தரப்பால் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், கைகூடுவதற்குரிய வாய்ப்புக்கள் குறைவென்றே தெரியவருகின்றது

இலங்கைக்கு எதிரியானது இந்தியா! பாராளுமன்றில் தெரிவித்தார் மன்மோகன்!!

ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற விடயத்தில் இந்தியா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மேற்படி தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு எங்கும் பலத்த ஆர்ப்பாட்டங்களும், கொடுப்பாவிகள் எரிப்பும் நடந்தேறிய வண்ணம் உள்ளன. இந் நிலையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் கூறுகையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடந்த மனித உரி்மைகள் மீறல், போர்க்குற்றம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது கவலைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது கவலையில் நானும் பங்கேற்கிறேன் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம். அமெரிக்கா ஆதரவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. அதை அறிந்து கொண்ட பின்னர் அதை ஆதரித்து வாக்களிப்போம். இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க இந்தியாவும் முனைப்புடன் உள்ளது என்றார். பிரதமரின் இந்த அறிவிப்பை திமுக எம்.பிக்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம், அதிமுக எம்.பி. தம்பித்துரை எழுந்து, பிரமதரின் பதில் நேரடியாக இல்லை என்று கண்டித்துப் பேசினார். இதனால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

சினிமாவை பாடல்கலை மிஞ்சும் திருமண வீடியோ பாடல்

youtube விடியோவில் என் கண்ணுக்கு தென்பட்ட இலங்கையில் புத்தளத்தில் எடுக்கப்பட்ட திருமண வீடியோ மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது.facebookலும் உலாவி வருகின்றது உங்கக்களுக்கு அது,

Friday, February 3, 2012

நான் கொண்டு வந்த 2 கிலோ தங்கமும் என்னுடையது மாத்திரமல்ல. சூசையின் மனைவி!!

புலிகளின் கடற்படைத்தளபதியாக இருந்த சூசை எனப்படுகின்ற தில்லையம்பலம் சிவநேசனின் மனைவி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது நடுக்கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது விடுவிக்கப்பட்டு கொழும்பு புறநகர்ப்பிரதேசம் ஒன்றில் வசித்துவரும் அவர் அண்மையில் நேஷன் பத்திரிகையின் ஆசிரியர் சாமர லக்ஷ்மன் குமார என்பவருக்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றில் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ தங்கம் தொடர்பாக கேட்டபோது, அது தன்னுடையது மாத்திரம் அல்ல எனவும், பிற புலித்தளபதிகளது மனைவிமாரினதும் எனத் தெரிவித்துள்ளார். பேட்டியின் முழுவிபரம். கேள்வி: உங்கள் கணவர் சூசையை எவ்வாறு நீங்கள் முதன்முதலில் சந்தித்தீர்கள் என்று எங்களுக்குச் சொல்வீhகளா? பதில்: சூசை எல்.ரீ.ரீ.ஈ யில் பணியாற்றிய எனது அண்ணனின் ஒரு நண்பராவார். அந்த நேரத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். 1982ல் எல்.ரீ.ரீ.ஈ க்காக தனது உயிரைத் தியாகம் செய்த முதல் போராளி எனது அண்ணன். எனது அண்ணனின் மறைவுக்குப் பின்னரும் கூட சூசை எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. நான் அவரை விரும்பத் தொடங்கினேன். அவர் தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவி புரிபவராகவும் மற்றும் அவசியப் படுபவர்களுக்கு உதவி புரிவதில் தயக்கம் காட்டாதவராகவும் இருந்தார். அவருடைய நல்ல பழக்கங்கள் என்னைக் கவர ஆரம்பித்தன மற்றும் நாங்கள் நெருக்கமானவர்களாக மாறினோம். நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, அவர் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து இருந்ததால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. அப்போது அவர் வடமராட்சி பகுதியின் உள்ளுர் தலைவராக இருந்தார். எனினும் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்,மற்றும் அதன் பின் விரைவிலேயே அவர் கடற்புலிகளின் தலைவராக மாற்றம் பெற்றார். கேள்வி: நீங்கள் அப்போது எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து கொண்டிருந்தீர்களா? பதில்: இல்லை கேள்வி: சூசையை மணந்த பிறகும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லையா? பதில்: அதன் பிறகும் மாறவில்லை. கேள்வி: ஏன்? பதில்: அது அவசியம் என்று நான் கருதவில்லை சூசையும் என்னை எல்.ரீ.ரீ.ஈ யில் இணையும்படி ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது. கேள்வி: சூசை, எல்.ரீ.ரீ.ஈ விடயங்களைப்பற்றி வீட்டில் விவாதிப்பாரா? பதில்: அப்படியான விடயங்களை அவர் ஒருபோதும் விவாதிப்பதில்லை. நாங்கள் வீட்டில் எங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விடயங்களைப்பற்றியே பேசுவோம். கேள்வி: அவர் வீட்டுக்கு வந்ததும் எதைப்பற்றி விவாதிப்பார்? பதில்: அவருக்கு சிறிதளவு ஓய்வே கிடைக்கும். அவர் வீட்டுக்கு வருவது பிரதானமாகவும் உறங்குவதற்கு வேண்டியே. கேள்வி: உங்கள் வீடு எங்கே உள்ளது? பதில்: ஆரம்பத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தோம்,ஆனால் இராணுவத்தினர் ‘ஒப்பறேசன் ரிவிரச’ நடவடிக்கையை ஆரம்பித்த பின்னர், நாங்கள் நகரத்தை விட்டு இடம் பெயர்ந்தோம். நாங்கள் தேவபுரம், முல்லைவெளி, வள்ளிக்குளம் மற்றும் இறுதியாக 2007ல் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் வாழ்ந்தோம். கேள்வி: சூசை ஒரு வலிமையான மனிதராக அறியப்பட்டிருந்த போதிலும்,தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்ததாக அநேகர் எழுதி அல்லது சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையா? பதில்: அவர் தனது பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக நேசித்தார். எங்கள் மகனின் முதலாவது பிறந்த நாளின்போது, எங்கள் மகனுக்கு அவர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு சொந்தமாகவிருந்த முதல் கப்பலின் வடிவத்திலிருந்த கேக் ஒன்றை கொண்டுவந்திருந்தார். அது நெல்லியடியில் இருந்த சுபாஷ் வெதுப்பகத்தில் அது தயாரிக்கப்பட்டது. அவரது கடமைகள் அவரது பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவழிக்க அவருக்கு இடமளிப்பதில்லை, ஆனால் அவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பினை அவர் என்னிடம் ஒப்படைத்திருந்தார். கேள்வி: 2004ல் சூசை சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவரின் அந்த பயணத்தைப்பற்றி சொல்வதற்கு ஏதாவது உள்ளதா? பதில்: இந்திய கடற்படை படகு ஒன்று கடற்புலிகள் மீது நடத்திய தாக்குதலில் சூசை காயங்களுக்கு இலக்கானார். எல்.ரீ.ரீ.ஈ யின் காவல்துறை தலைவர் நடேசன் மற்றும் வருவாய்த்துறை தலைவர் தமிழந்தி ஆகியோரும் அந்த சிறுபோரில் காயமடைந்தனர். தற்காலிகமாக காயங்களுக்கு சிகிச்சையளிக்கப் பட்டபோதும், சில காயங்கள் அதன்பின் மிகவும் மோசமாக மாறின, அதனால் தீவிர சிகிச்சைக்காக சூசையை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியமாகியது. கேள்வி: சிங்கப்ப+ருக்கு போகும் சந்தர்ப்பம் சூசைக்கு எப்படிக் கிடைத்தது? பதில்: அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. தான் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு போகவேண்டி இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். சூசைக்கு சிங்கப்பூருக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு எல்.ரீ.ரீ.ஈ அரசாங்கத்திற்கு அறிவித்தது அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியது. அவர் போகும்போது ஒரு மருத்துவரும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும், அவருடன் கூடச் சென்றார்கள். ஒரு எல்.ரீ.ரீ.ஈ நபர் சூசையுடன் பேசுவதற்காக ஒரு தொலைபேசியை எனக்குத் தந்தார், சிங்கப்பூரிலிருந்து இரண்டு தரம் சூசை என்னுடன் தொலைபேசியில் பேசினர்ர். கேள்வி:பிரபாகரனுக்கும் சூசைக்கும் இடையே உறவு எப்படியாக இருந்தது. பதில்: சூசை பிரபாகரன் மீது உயர்வான நம்பிக்கை வைத்திருந்தார், மற்றும் அதேபோல பிரபாகரனும் சூசைமீது உயர்வான நம்பிக்கையை வைத்திருந்தார். கேள்வி: உங்களது குடும்பம் பிரபாகரனின் குடும்பத்தினரோடு எந்த வகையான உறவினைக் கொண்டிருந்தது? பதில்: எங்களது குழந்தைகள் பிறந்த நேரத்தில் பிரபாகரனின் குடும்பத்தினர் அனைவரும் எங்களிடம் வருகை தந்தனர், அதைத்தவிர வேறு வருகைகள் எதுவும் இடம் பெறவில்லை. ஆனால் புலிகளின் விழாக்களிலோ அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளிலோ நிச்சயமாக நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வோம். அப்போது நாங்கள் எங்களுக்கு அக்கறையுள்ள பல விடயங்களையும் பற்றிப் பேசிக் கொள்வோம். பிரபாகரன் மற்றும் மதிவதனி ஆகிய இருவருமே எப்படி எங்களின் குழந்தைகளின் படிப்பு விடயங்கள் முன்னேற்றகரமாக உள்ளனவா என வழக்கமாக எங்களிடம் விசாரிப்பதுண்டு. கேள்வி: உங்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ யினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் யுத்தம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கி வந்தபோது நீங்கள் அச்சமடையத் தொடங்கினீர்களா? பதில்: ஏன் இல்லை. யார்தான் அச்சப்பட மாட்டார்கள்? கேள்வி: அப்போதுகூட எல்.ரீ.ரீ.ஈ யை விட்டு விலகுமாறு அவரிடம் கேட்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? பதில்: நான் அவரிடம் கேட்டிருந்தால்கூட அவர் ஒருபோதும் எல்.ரீ.ரீ.ஈயை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். தனது சாவு, தான் எல்.ரீ.ரீ.ஈக்காக பணியாற்றும்போது வரக்கூடுமே தவிர வேறு வழியினால் அல்ல என்று அவர் வழக்கமாகச் சொல்வதுண்டு. கேள்வி: 2007ம் ஆண்டு உங்களுக்கு ஒரு மோசமான ஆண்டாக இருந்தது அல்லவா, உங்கள் மகன் சங்கர் இறந்தது மற்றும் சூசை கூட மிகவும் மோசமான காயங்களுக்கு உள்ளானது போன்றவற்றால்? பதில்: எனக்கு அந்த திகதி நினைவில் உள்ளது. அது ஜூலை 18ந்திகதி. கிளிநொச்சியில் நடக்கும் ஒரு விழாவுக்காக நான் வாகனமொன்றில் செல்ல இருந்தேன். எங்களது இளையமகன் வாகனங்களில் பயணம் செய்வதில் அளவுகடந்த ஆசை உள்ளவனாக இருந்தான், அதேபோலவே அவன் கடலையும் விரும்பினான். ஆனால் சூசை ஒருபோதும் எங்களது மகனை கடலுக்கு கூட்டிப்போனது கிடையாது. அவர் அவரது மகனை கரையில் உள்ள படகு ஒன்றில் இருக்கும்படி சொல்லிவிட்டு அவர் ஆழ்கடலுக்குச் செல்வார். சங்கர் படகிலிருந்து மற்றவர்களுடன் விளையாடுவான். இது நடந்த தினத்திலும் கூட இதையேதான் சூசை செய்தார், ஆனால் எப்படியோ அல்லது வேறுவிதமாகவோ அவர் தனது ஆட்களிடம் எனது மகன் இருந்த படகினையும் ஆழ்கடலுக்கு கொண்டுவரும்படி சொல்லியிருக்கிறார். அந்நேரத்தில் படகுகள் சில பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. பயிற்சியில் ஈடுபட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ படகுகளில் ஒன்று ,சூசையின் படகுடனும் மற்றும் எனது மகன் இருந்த படகுடனும் மோதியது. இந்த விபத்தில் நான் எனது மகனைப் பறிகொடுத்தேன். கேள்வி: அது திட்டமிட்ட ஒரு விபத்து என்று நாங்கள் கேள்விப் பட்டோம்? பதில்: அப்படி ஒரு வதந்தி நிலவியது, ஆனால் அது ஒரு விபத்து என்றே நான் நம்புகிறேன். கேள்வி::அந்த விபத்தில் சூசைக்கு என்ன நடந்தது? பதில்: அவரது வயிற்றில் மிக நீளமாக கிழிக்கப்பட்டிருந்த காயம் இருந்தபோதிலும் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது, மற்றும் அது நடந்தபின் மூன்று வாரங்களாக அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். கேள்வி:: பொட்டு அம்மான் அந்த படகு விபத்தை ஏற்பாடு செய்ததாக வதந்தி பரவியது, அதுகுறித்து எல்.ரீ.ரீ.ஈ கடும் மௌனம் சாதித்ததால் அந்த வதந்தி உண்மையோ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது? பதில்:: ஆனால் அவர் அந்த விபத்தை ஏற்பாடு செய்திருப்பார் என நான் நினைக்கவில்லை. கேள்வி:: பொட்டு அம்மான் அந்த விபத்து நடந்ததுக்குப் பிறகு உங்களுடன் பேசினாரா? பதில்: ஆம் அவர் என்னுடன் பேசினார். பொட்டு அம்மான் மட்டுமல்ல மற்ற எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் என்னுடன் பேசினார்கள். எல்லா எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் எனது மகனின் மரணச் சடங்கில் கலந்து கொண்டார்கள். கேள்வி:: காயங்கள் சுகமடைந்த பின்பு அந்த விபத்தைப்பற்றி சூசை ஏதாவது சொன்னாரா? பதில்:எமது மகனின் மறைவினால் அவர் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்திருந்தார். அது அவருடன் நீண்டகாலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நான் அவரிடம் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகளிலிருந்து கொஞ்ச நாட்கள் ஒதுங்கி இருக்கும்படியும் ஆனால் தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் எனது அறிவுரைகளைக் கேட்கவில்லை. கேள்வி:: நீங்கள் எல்.ரீ.ரீ.ஈயினருக்கு எதுவித உதவியும் செய்வதில்லை எனச் சொல்லப்படுகிறதே. நீங்கள் வீட்டிலிருந்து என்ன செய்வீர்கள்? பதில்:நான் எனது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதுடன் வீட்டில் அவர்கள் தேவைகளையும் பார்த்துக் கொள்வேன். எங்கள் தேவைகளுக்கு வேண்டிய உணவுப் பயிர்களை நானே பயிர் செய்து கொள்வேன். எனது குழந்தைகளுடன் தொலைக்காட்சி பார்ப்பதில் இணைந்து கொள்வேன். கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவிகளை வழங்காத போதிலும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களின் குடும்பங்களுக்கு வாகனங்களையும் பாதுகாப்பினையும் வழங்கியிருந்ததே? பதில்: எங்களுக்கு ஒரு வானும் மற்றும் சாரதியுடன் கூடிய ஒரு முச்சக்கர வண்டியும் மற்றும் ஒரு பாதுகாப்பு கடமையாளரும் வழங்கப்பட்டிருந்தன. கேள்வி:: வடக்குக்கு வெளியே கொழும்பை போன்ற இடங்களில் என்ன விடயங்கள் நடைபெறுகின்றன என்கிற தகவல்களை அறியக்கூடிய வழிகள் உங்களுக்கு இருந்தனவா? பதில்: நாங்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்து அப்படியான விடயங்களை அறிந்து கொள்வோம். சிலவேளைகளில் சூசை வீட்டுக்கு வரும்போது தெற்கில் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகை ஒன்றை வழக்கமாகக் கொண்டு வருவார். கேள்வி:: யுத்தம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை எப்போது நீங்கள் அறிந்தீர்கள்? பதில்: ஆரம்பத்திலிருந்தே நாங்கள் அச்சத்துடன்தான் வாழ்ந்து வந்தோம். இறுதிக்கட்டத்தில் நாங்கள் பதுங்கு குழிகளை விட்டு வெளியேறினால் எந்த வித மாற்றமுமில்லாமல் காயமடைவோம் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். விடயம் அத்தகைய மோசமான நிலைக்கு வந்துவிட்டது. கேள்வி:: இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் கிரிக்கட் போட்டிகள் நடந்த போது யாருக்கு நீங்கள் ஆதரவு வழங்கினீர்கள்? பதில்: நாங்கள் இந்தியாவுக்கே ஆதரவு வழங்கினோம். நாங்கள் சச்சின் டெண்டுல்கரை மிகவும் விரும்பினோம். கேள்வி:: முரளீதரன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: முரளீதரனையும் நாங்கள் விரும்பினோம் ஆனால் டெண்டுல்கரை அதைவிட அதிகம் விரும்பினோம். கேள்வி:: யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது நீங்கள் புதுக்குடியிருப்பிலிருந்து வெளியேற விரும்பினீர்கள். ஏன்? பதில்: நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பியது, மே 12ல். அந்த நேரத்தில் அதிக அளவிலான மக்கள் ஒரு சிறு பகுதி நிலப்பரப்பினுள் அடைபட்டுக் கிடந்தார்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் தோல்விக்கு அது தெளிவான சான்றாக அப்போது தோன்றியது. நாங்கள் எங்கள் மகள் சிந்துமணியையும் மற்றும் மகன் கடலரசனையும் சூசையின் மூத்த சகோதரனின் மனைவி மற்றும் பிள்ளையுடன் ஒரு படகில் அந்த இடத்தைவிட்டு வெளியே அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் நான் மற்றவர்களை விட்டுச் செல்ல முடிவெடுக்கவில்லை, ஏனெனில் சூசை அப்படிச் செய்வதை விரும்பவில்லை. ஆனால் இறுதியாக நான் எனது பிள்ளைகளுடன் செல்வது என முடிவெடுத்தேன். சூசை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இறுதிவரை தான் போராடப்போவதாக தெரிவித்த சூசை பின்னர் வெளியேறுவதற்காக எங்களுக்கு ஒரு படகினை வழங்கச் சம்மதித்தார். கேள்வி:: அந்தப் படகிலேறி எங்கே செல்ல விரும்பினீர்கள்? பதில்: எங்களுக்கு இரண்டு இலக்குகள் இருந்தன. ஒன்று முடியுமானால் இந்தியாவுக்கு தப்பிச் செல்வது ஆனால் இதன்போது நாங்கள் ஆழ்கடலில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் கப்பல்களை எதிர்கொள்ள நேரிடும். கடற்படையினரிடம் பிடிபடுவதைப் பற்றி நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை, அனால் எங்கள் எண்ணமெல்லாம் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிலேயே இருந்தது. நாங்கள் மே 12ந்திகதி வெளியேற தீர்மானித்தாலும் உக்கிரமடைந்த யுத்த நிலமை எங்களை பதுங்கு குழிகளுக்குள்ளேயே தங்கியிருக்க வைத்தது. எனவே கடைசியாக நாங்கள் மே 14ந் திகதியே வெளியேறினோம். கேள்வி: மே 12ந்திகதி பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நீங்கள் புதுக்குடியிருப்பில் வைத்து காணவில்லையா? பதில்: ஆம் அவர்கள் அங்கேதான் இருந்தார்கள், நாங்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறும் வரை அவர்கள் அங்கே பத்திரமாக இருந்தார்கள். கேள்வி:: அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்களுடன் பேசினீர்களா? பதில்: நான் அவர்களுடன் பேசவில்லை, ஆனால் சிலவேளைகளில் நாங்கள் வெளியேறுவதைப்பற்றி சூசை அவர்களிடம் சொல்லியிருக்கலாம். கேள்வி:: பிரபாகரன் அடைபட்டுக் கிடந்த மக்களுடன் இருந்தாரா அல்லது அவர்களிடமிருந்து வேறுபடுத்தப்பட்டு இருந்தாரா? பதில்: அந்த இறுதிக்கட்டத்தின்போது அவர்களுக்காக எந்த ஒரு தனியான இடமும் இருந்திருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கேள்வி:: அவரை விட்டுப் பிரியும் முன்பு சூசை என்ன சொன்னார்? பதில்: நான் கடைசியாக அவரைப் பார்த்தது, மே 12ல். ஆனால் மே 14ல் நாங்கள் அந்த இடத்தை வெளியேறும்போது நான் அவரைக் காணவில்லை. நாங்கள் அன்றுதான் வெளியேறுகிறோம் என்பதை அவர் அறியவில்லை, எங்களுக்கென்று தனியான பதுங்கு குழிகள் எதுவும் இருக்கவில்லை அதனால் நாங்கள் மற்றவர்களுடன் ஒரு பதுங்கு குழியினைப் பகிர்ந்து கொண்டோம். கேள்வி: நீங்கள் வெளியேறுவதற்கு முன்னதாக சூசை எங்கேயிருக்கிறார் என்பதை அறிய நீங்கள் முயற்சி செய்யவில்லையா? பதில்: நாங்கள் முகம் கொடுத்துக் கொண்டிருந்த சூழலில் அதைச் செய்ய முடியவில்லை. யுத்தமானது அநேகமாக ஒரு கைப்பிடியினுள் அடங்கும் நிலையை எட்டியிருந்தது. நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினரிடம் ,நாங்கள் வெளியேறுவதை சூசையிடம் தெரிவிக்கும்படி சொன்னோம். இரவு 9 மணியளவில் புறப்பட்டோம். நாங்கள் 12 பேர்கள் அந்தப் படகில் இருந்தோம் ஆனால் படகு தாக்கப்படும்வரை எங்களால் சுமார் 4 நிமிடம் மட்டுமே பயணம் செய்ய முடிந்தது. கேள்வி:: பின்னர் என்ன நடந்தது? பதில்: அதை இயக்கிக் கொண்டிருந்த நபரை அவர்கள் தாக்கியபோது அவர் குண்டடிபட்டு படகினுள் விழுந்தார். படகின் பல இடங்களிலும் துவாரம் ஏற்பட்டு அதனுள்ள நீர் வர ஆரம்பித்தது. நாங்கள் நீரை வெளயேற்றிக் கொண்டிருந்தபோது சுமார் 20 நிமிடங்கள் கழித்து ஒரு சிறிய கடற்படைப்படகு எங்களை அணுகியது. சிலர் கொட்டியா கொட்டியா எனச் சத்தமிடுவதை நான் கேட்டேன் மற்றும் அவர்கள் எங்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வார்களோ என நாங்கள் அஞ்சினோம். அந்த நிமிடத்தில் ஒரு பெரிய படகு உறுதியான வெளிச்சத்தை பாய்ச்சியபடி எங்களை நோக்கி வந்தது. சூசையின் சகோதரரின் மனைவி றூபனின் கைக்குழந்தையை உயர்த்திக் காட்டினார். சிறிய படகில் இருந்த மனிதர்கள் எங்களை நெருங்கி வந்து எங்களுடன் தமிழில் பேசினார்கள். “பயப்பட வேண்டாம் நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம்;” என அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் எங்களை அவர்களது படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தார்கள். கேள்வி:: நீங்கள் சூசையின் மனைவி என்பதை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்களா? பதில்: உடனடியாக இல்லை. எனது இரண்டு பிள்ளை களையும் சூசையின் சகோதரரின் மனைவியுடையது என்று கூறினேன.; எனது சொந்த விருப்பத்தின்படி தனிமையாக்கப்பட்ட நான், றூபனின் தூரத்து உறவினர் என அவர்களிடம் கூறினேன். நாங்கள் புறப்படும் முன்பே நாங்கள் கடற்படையினரிடம் அகப்பட நேர்ந்தால் இவ்வாறு பேசவேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டிருந்தோம். எப்படியாயினும் சூசையின் சகோதரரின் மனைவி தனது காலிலுள்ள காயமொன்றுக்கு மருந்து போட என்னுடன் மருத்துவ நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் முதலாவது சோதனைச் சாவடியை நாங்கள் கடந்தபோது கடற்படையினரிடம் சரணடைந்திருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி நான் சூசையின் மனைவி என்பதை சொல்லிவிட்டார். உடனடியாகவே பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். இரண்டாவது தடவையாக நான் மற்றவர்களிடமிருந்து வேறாக்கப் பட்டேன். நான் ஏன் எல்.ரீ.ரீ.ஈ பிரதேசத்தை விட்டு வெளியேறினேன் என்றும் நான் எங்கு போக எண்ணியிருந்தேன் என்றும் என்னிடம் வினாவினார்கள். கடற்படையினர் என்னை தடுக்காவிட்டால் நான் இந்தியாவுக்குச் செல்ல எண்ணியிருந்ததாக நான் அவர்களிடம் சொன்னேன். இந்தியாவை அடைந்ததும் அங்கிருந்து லண்டனில் உள்ள எனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி ஏதாவது ஏற்பாடுகளைச் செய்திருப்பேன் என கடற்படையினரிடம் தெரிவித்தேன். கேள்வி:: கடற்படையினர் சூசையைப் பற்றி உங்களிடம் விசாரிக்கவில்லையா? பதில்: எனக்கு சூசையின் தொலைபேசி இலக்கம் தெரியுமா என அவர்கள் என்னிடம் வினவியபோது எனக்குத் தெரியாது என அவர்களிடம் நான் கூறினேன். ஆனால் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அவர்களிடம் கொடுத்தேன். கேள்வி:: சூசை ஒரு தொலைபேசியை பயன படுத்தியதில்லை என்றா சொல்ல வருகிறீர்கள். பதில்: அவர் ஒன்றைப் பயன்படுத்தி வந்தார் ஆனால் மே 12ந்திகதி கடைசியாக நான் அவரைச் சந்தித்த போது அவரிடம் தொலைபேசி எதுவும் இருக்கவில்லை. கேள்வி:: மே 12ந்திகதி எல்.ரீ.ரீ.ஈ யுத்தத்தில தோற்கடிக்கப்படும் என்பதை, சூசை அறிந்திருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? பதில்: யுத்தத்தில் நாங்கள் வெல்வோமா அல்லது தோற்போமா என்பதை அவரிடம் கேட்பதற்கு எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவ்வளவு குறுகிய நேரச் சந்திப்பு. ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் எங்களை அவரிடம் கூட்டிச் சென்றபோது நாங்கள் அங்கே நிற்கிறோம் என்பதைக் காணமட்டுமே அவரால் முடிந்தது. அந்தச்சமயத்தில் இராணுவத்தினர் வெகு சமீபத்தில் வந்து விட்டதால் வெகுநேரம் எங்களால் அங்கு நிற்க முடியவில்லை. கேள்வி:: கடற்படையினர் உங்களை அடையாளம் கண்டு கொண்டபின் என்ன நடந்தது? பதில்: எங்களை அவர்களது முகாமுக்கு கொண்டு சென்றார்கள். எங்கள் படகில் துவாரங்கள் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்பட்டதால் படகினை இலகுவானதாக்க நாங்கள் எங்கள் பொதிகள் யாவற்றையும் தூக்கி எறிந்து விட்டோம் மற்றும் நாங்கள் அப்போது உடுத்திருந்த உடைகள் ம்ட்டுமே எங்களிடம் இருந்தது. கடற்படையினர் எங்களுக்கு உடைகளை வழங்கினார்ர்கள். கேள்வி:: உங்களது தற்போதைய வாழ்க்கையைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன? பதில்: நாங்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதும், எனது பிள்ளைகளும் நானும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப் படுவோமோ என எண்ணி நான் ஆழமாக அச்சமடைந்திருந்தேன். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது நாங்கள் நலமாகவே உள்ளோம். கேள்வி:: நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று கூறுவதால் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? பதில்: அது இப்படித்தான். நாங்கள் எங்களுக்கு உரியது என் நம்புவதிலும் அதிகம் வசதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. பிள்ளைகள் பாடசாலை மற்றும் பூங்கா என்பனவற்றுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நானும் அவர்களுக்கு துணையாகச் செல்கிறேன். ஆனால் நாங்கள் எங்கள் சொந்த பந்தங்களைப் பார்ப்பதற்கும் மற்றும் வேறு இடங்களுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப் படவதில்லை என்பதை எண்ணும்போதுதான் நான் துக்கப்படுகிறேன். கேள்வி:: உங்கள் உறவினர்கள் உங்களுடன் பேசினார்களா? பதில்: என்னுடைய சகோதரரும் தந்தையும் லண்டனில் வசிக்கிறார்கள். தொலைபேசி மூலம் அவர்கள் என்னுடன் பேசுவார்கள். அவர்கள் ஒருமுறை என்னைக் காண வந்திருந்தார்கள். கேள்வி:: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? பதில்: எனது இரண்டு பிள்ளைகளுக்கும் முறையான கல்வி வழங்கப்பட்டால் அதுவே எனக்குப் போதும் மற்றும் அவர்கள் படிப்பதற்கு வேண்டிய வசதிகள் வழங்கப்பட வேண்டும். கேள்வி:: உங்கள் தினசரி வாழ்க்கைமுறை என்ன? பதில்: நான் காலை 4.30 மணிக்கு எழுந்து எனது பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அவர்களை பாடசாலைக்கு அனுப்புகிறேன் அதன் பின்னர் நான் துவைத்தல், வீட்டுச் சாமான்களை அடுக்கி வைத்தல் போன்ற வேலைகளைச் செய்வேன். வெளியே கோவில் மற்றும் பூங்கா என்பனவற்றுக்கச் செல்கிறேன் இரவில் வேலை ஏதுமின்றி இருந்தால் தொலைக்காட்சிகளை ரசிப்பேன். கேள்வி:: மிக முக்கியமான ஒன்றை உங்களிடம் கேட்க மறந்து விட்டேன். நீங்கள் கடற்படையின் படகுகளால் வழி மறிக்கப்பட்டபோது உங்களிடம் 2 கிலோகிராம் தங்கம் மற்றும் ரூபா 600,000 பணம் என்பன உங்களிடம் இருந்ததாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந்தளவுக்கு தங்கமும் பணமும் ஏன் கொண்டு சென்றீர்கள? பதில்: என்னிடம் அவ்வளவு பணம் இருக்கவில்லை, ஆனால் என்னுடையது 200,000ரூபா. மற்றும் றூபுனின் மனைவியுடையது 200,000ரூபா. எங்களோடிருந்த மற்றொருவருடைய பணம் 175,000ரூபா என்பனவே மொத்தப்பணமும். எல்லா தங்க நகைகளும் என்னுடையதல்ல, ஆனால் எங்கள் மூவருக்கும் சொந்தமானது. என்னுடைய தங்க நகைகள் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பலராலும் பரிசுகளாக வழங்கப்பட்டவைகளாகும். கேள்வி:: உங்களைச் சுற்றி யுத்த அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் இவ்வளவு தங்கத்தையும் எப்படி உங்களால் வைத்துச் சமாளிக்க முடிந்தது மற்றும் தப்பி ஓடும்போது ஏன் அவற்றைக் கொண்டு சென்றீர்கள்? பதில் : நான் தங்கங்கள் யாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு நாங்கள் போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல்வேன், எனதுபிள்ளைகளுடையதும் மற்றும் என்னுடையதும் எதிர்காலத்துக்கு பயன்படும் என்கிற எண்ணத்தில்தான்.

ஹிலாரியால் கலங்கிய இலங்கை! ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதா இல்லையா என்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என்று கூறியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டிலேயே சிறிலங்காவின் பதில் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா சர்ச்சைக்குரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஏற்கனவே வெளியாகி விட்டது அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை உலகமே அறியும். இந்தநிலையில் இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமா என்பது குறித்து அரசாங்கம் ஆராயும்.“ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்தவாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரத்தைக் கையாளும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர், ஆணைக்குழுவின் அறிக்கை ஜெனிவாவில் ஒருபோதும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தனர். அதற்கு முரணான வகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அறிவித்திருப்பது சிறிலங்காவைப் பெரிதும் கலக்கத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து அமெரிக்கா நீண்டகாலமாக கோரி வரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கும் நிலை உருவாகி வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

சிம்புவை மட்டும் கிட்ட சேர்த்துராதீங்க. அப்புறம் உங்க எதிர்காலமே கோவிந்தாதான்!!

டங்க் ஸ்லிப்பாகுற நேரத்தில் கூட சிம்புவை பற்றி நல்ல வார்த்தை நாலு வராது என்கிறளவுக்கு எஸ்டிஆரின் கேரக்டரை குதறி வைக்கிறது கோடம்பாக்கம். அதுவும் அவருடன் நடிக்க யார் ஒப்பந்தம் ஆனாலும், அந்த தம்பி கூடவாம்மா நடிக்கிறே? பண்டம் பாத்திரமெல்லாம் பத்திரம் என்கிற அளவுக்கு மிரட்டி வைக்கிறார்கள். விக்ரமுடன் ராஜபாட்டையில் ஜோடி சேர்ந்த தீக்ஷா சேத்துக்கும் அப்படி ஒரு அனுபவம் கிட்டியது. நடிக்க வந்த நாலே நாளில் இவரை சந்தித்த ஒரு மேனேஜர், யாருக்கு வேணும்னாலும் கால்ஷீட் கொடுங்க. ஆனால் அந்த சிம்புவை மட்டும் கிட்ட சேர்த்துராதீங்க. அப்புறம் உங்க எதிர்காலமே கோவிந்தாதான் என்று போட்டுக் கொடுக்க, அட போப்பா. நான் அவரோட ரசிகை தெரியுமா என்றாராம் தீக்ஷா சேத். யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். சிம்பு என்னிடம் கால்ஷீட் கேட்டால் அடுத்த வினாடியே கொடுப்பேன் என்று அவர் உற்சாகமாக சொன்ன செய்தி காற்று வாக்கில் சிம்புவின் காதுகளுக்கும் போனது. விளைவு? தன்னுடைய வேட்டை மன்னன் படத்தில் தீக்ஷாதான் வேண்டும் என்று அடம் பிடித்து கமிட் பண்ணினாராம். சந்திக்கிறதுக்கு முன்னாடியே டமாரத்தை ஒலிக்க விடுறாங்களே.

இந்திய சினிமாவிலேயே அதிகபட்சம் திருட்டு டிவிடியில் பார்க்கப்பட்ட ஹாட் படம் !!

இந்தியில் தயாரான சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படம், திருட்டு டிவிடி விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது என்றார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். தமிழ் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தி யில் தயாரான படம் ‘தி டர்ட்டி பிக்சர். இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். ஏற்கனவே சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் முன்னணி இடத்தை பிடிக்கவில்லை. இப்படத்துக்கு பிறகு பாலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். படம் வெளியான 2 மாதத்தில் இதன் ஒரிஜினல் டிவிடி மும்பையில் வெளியிடப்பட்டது. இது பற்றி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறும்போது, ‘‘இந்திய சினிமாவிலேயே அதிகபட்சம் திருட்டு டிவிடியில் பார்க்கப்பட்ட படம் Ôடர்ட்டி பிக்சர்Õதான். இவ்வளவு விரைவாக படத்தின் ஒரிஜினல் டிவிடி வெளியிட்டது பற்றி கேட்கிறார்கள்.அப்படி செய்யாவிட்டால் இதன் திருட்டு டிவிடி விற்பனை, பட ரிலீஸில் கிடைத்த வசூலையே தாண்டிவிடும். எனவேதான் உடனடியாக டிவிடி வெளியிடப்படுகிறது’ என்றார். இதுபற்றி வித்யாபாலன் கூறும்போது, ‘நல்ல படங்களை கொடுக்கும் எண்ணத்துடன்தான் நடிக்கிறேன். நிறைய படங்கள் ஓடவில்லை. எதுவும் நம் கையில் இல்லை என்பதை தி டர்ட்டி பிக்சர்Õ வெற்றி எடுத்துக்காட்டி இருக்கிறது. இப்படம் 2 மாதத்தில் ரீ ரிலீஸ் செய்தபோது மறுபடியும் ஒரு வசூல் சாதனை நிகழ்த்தியது. டிவிடியும் சாதனை புரியும். சில்க் வேடத்தில் நடித்ததற்காக எனக்கு அதிகபட்சமாக விருதுகள் கிடைத்தது என்றார்.

இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல !!

சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. நண்பன்தானே..? என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு நன்றி. யெஸ்... அதேதான். இந்த படத்தை சுமார் ஏழு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் அந்த பிரபல சேனல். (சன் அல்ல) அவ்வளவு பணத்தை கொட்டி வாங்கிவிட்டு பிரமோஷன் விஷயத்தில் சுணக்கம் காட்ட முடியுமா? கோடம்பாக்கத்தின் முக்கிய இயக்குனர்களை அழைத்து அவரவர் நண்பர்களை பற்றி அலச சொன்னது. நிகழ்ச்சிக்கு விஜய்யும் வந்திருந்தார். இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர் ஒருவர் இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல. பறந்து வர்றது. நூறு பேரை அடிக்கறதெல்லாம் எப்படி நடிப்பாகும்? இந்த படத்தில்தான் அவரது நடிப்பு திறமையே வெளிப்படுது என்றாராம். நிகழ்ச்சி தொகுப்பாளராவது நிலைமையை புரிந்து கொண்டு பேலன்ஸ் பண்ணியிருக்கலாம். அவர் சட்டென்று மைக்கை விஜய் முன்பு நீட்டி, இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க கடும் கோபத்திற்குள்ளானாராம் விஜய். சட்டென்று தன் முன் நீட்டிய மைக்கை பிடுங்கி எறிந்துவிட்டு விறுவிறுவென அரங்கத்தை விட்டு நடையை கட்டிவிட்டாராம். டைரக்டர் கேட்டதிலும் தப்பில்லை, விஜய் கோபப்பட்டதிலும் தப்பில்லை. அப்ப எதுதான் தப்பு? அதுதான்ங்க புரிய மாட்டேங்குது!

பிரபாகரனை சுபாஸ் சந்திரபோஸுடன் ஒப்பீடு செய்து இருக்கும் பழ. நெடுமாறன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவின் விடுதலைப் போராளிகளில் ஒருவரான சுபாஸ் சந்திர போஸ் நேதாஜியுடன் ஒப்பீடு செய்து இருக்கின்றார் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரும் தமிழ்நாடு அரசியல்வாதியுமான பழ. நெடுமாறன். பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் என்று இவர் நூல் ஒன்று எழுதி இருக்கின்றார். இந்நூல் 1000 பக்கங்கள் வரை கொண்டது. நூல் வெளியீட்டு விழா வரும் மாதங்களில் இடம்பெற உள்ளது. இந்நூலிலேயே பிரபாகரனையும், சந்திர போஸையும் ஒரு கட்டத்தில் ஒப்பீடு செய்து இருக்கின்றார் நெடுமாறன். -இந்தியாவின் மாபெரும் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியேறினார். அந்த நிலையிலேயே அவர் உலகமறிந்த தலைவர். ஜெர்மனியும், ஜப்பானும் அவருக்கு உதவி செய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. இந்திய மக்களின் மாபெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்கு உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் என்னென்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்து கொடுத்தன. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜப்பானியர்களால் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய போர் வீரர்களை மீட்டு அவர்களைக் கொண்டு இந்தியத் தேசிய இராணுவத்தினை நேதாஜி சிங்கப்பூரில் உருவாக்கினார். இந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள். மற்ற உதவிகள் ஆகியவற்றை ஜப்பான் கொடுத்தது. நேதாஜியின் சுதந்திர அரசை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நட்பு நாடுகள் அங்கீகரித்தன.நேதாஜியை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற அருமைத் தம்பி பிரபாகரனை நேதாஜியுடன் ஒப்பிட முடியாது. வயதிலும் சிறியவர், அனுபவத்திலும் சிறியவர். நேதாஜியைப் போன்ற பெரிய தலைவராக உருவாகி அதற்குப் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை. இளைஞராயிருந்தபோது தன்னுடைய பதினாறாவது வயதில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.நேதாஜிக்கு உலக வல்லரசுகள் துணைபுரிந்தன. அருமைத் தம்பி பிரபாகரனுக்கு திக்கற்ற தமிழ் இளைஞர்கள் மட்டுமே துணை நின்றனர். வேறு எந்த நாடும், எந்த வல்லரசும் அவருக்கு உதவி புரிய முன்வரவில்லை. ஆனால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அள்ளி அள்ளித் தரும் நவீன ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டியடிக்கிற விடுதலைப் படையை பிரபாகரன் உருவாக்கிய விதம் கற்பனைக்கு எட்டாதது. அதைப் போலவே வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து அவர் நடத்திய வீரப் போராட்டமும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. இதை எப்படி அவர் சாதித்தார்? இன்னமும் புரியாத புதிர்தான்.-

Wednesday, February 1, 2012

எனக்கு ஜோடி சந்தானம்னும் எழுதிக்கோங்க!!

கண்ணா லட்டு திங்க ஆசையா என்று சிறுத்தையில் சிரிக்க வைத்த கார்த்தி, தனது பேவரைட் காமெடியன் சந்தானத்தையும் சேர்த்துக் கொண்டு சிரிக்க வைக்கப் போகும் படம்தான் சகுனி. இந்த படத்தில் எனக்கு ஜோடி ப்ரணிதான்னுதானே எழுதுவீங்க. அப்படியே எனக்கு ஜோடி சந்தானம்னும் எழுதிக்கோங்க என்கிறார் கார்த்தி. ஏனென்றால் படம் முழுக்க கார்த்தியும் சந்தானமும் லூட்டி அடித்திருக்கிறார்களாம். அரசியல் காமெடி வித் சட்டையர் பிலிம் என்றால் சட்டென்று மனதிற்கு வருகிற படம் அமைதிப்படைதான். இத்தனை காலம் கழித்து அத்தனை பரிபூரணமாக வரப்போகிற இன்னொரு படம் இந்த சகுனி என்கிற கார்த்தி, தமிழ்சினிமாவில் தமிழ் பேசும் ஹீரோயின்களுக்கு ரொம்பவே பஞ்சம். டப்பிங் மட்டும் இல்லாமல் அவர்களையே பேச விட்டு அந்த படங்களை பார்க்கிற பாக்கியத்தை ரசிகர்களுக்கு அளித்தால், காமெடி சேனல்கள் அத்தனையம் ஒரே நாளில் அழியக்கூடிய ஆபத்து ஏற்படும். நேற்று வரை அப்படிதான் இருந்தது கார்த்தியுடன் நடித்த கதாநாயகிகளின் அருமையும் பெருமையும். நல்லவேளையாக இப்படத்தில் நடிக்கும் ப்ரணிதா தமிழில் தாரை தப்பட்டையே வாசிக்கிறாராம். சொல்றதை தமிழ்லேயே புரிஞ்சுகிட்டு நடிக்கிறார். அதுவே பெரிய சந்தோஷம்தானே என்கிறார் கார்த்தி.

நண்பன் போன்ற ரீமேக் படங்களை இனி இயக்க மாட்டேன்!!

''ரீமேக் படத்தை இயக்கியது புது அனுபவமாக இருந்தாலும் இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன்'' இயக்குநர் ஷங்கர் கூ‌றியு‌ள்ளா‌ர். என்னுடைய தயாரிப்பில் வெளிவந்த பல படங்கள் நன்றாக ஓடவில்லை எ‌ன்று ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ள ஷ‌ங்க‌ர், இதனால் பெரும் நஷ்டமடைந்தேன் எ‌ன்றா‌ர். படம் தயாரித்து நானே என்னுடைய கையை சுட்டுக் கொண்டேன் எ‌ன்று‌ம் அதில் இருந்து சிறிதுசிறிதாக மீண்டு வருகிறேன் எ‌ன்று‌ம் ஷ‌ங்க‌ர் கூ‌றினா‌ர். தற்போது நான் இயக்கிய நண்பன் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது எ‌ன்று‌ம் இது இந்திப் படமான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர். ந‌ண்ப‌ன் பட‌த்‌தி‌ல் விஜய் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான நடிப்பைக் கொடுத்தார் எ‌ன்று கூ‌றிய ஷ‌ங்க‌ர், ரீமேக் படத்தை இயக்கியது புது அனுபவமாக இருந்தாலும் இனி ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என்றார். மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து சிறிய தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். நண்பன் படத்துக்கு முன் ஆக்ஷன் + த்ரில்லர் கலந்த கதை ஒன்றை இயக்க இருந்ததாக கூறிய ஷங்கர், அந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என வெளிவந்த செய்திகள் பொய்யானது என்று கூறினார்-. மேலும், படத்திற்கு அஜீத் (அ) விக்ரம் ஹீரோவாக நடித்தால் நல்லாயிருக்கும் என்று ஷங்கர் கூறினார். இதனையடுத்து படத்தின் அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும்.

Tuesday, January 31, 2012

நீச்சல் உடை அணிந்த தீபிகாவுடன் சைப் நடித்ததில் கோபமில்லை!! - கரீனா

நீச்சல் உடையில் தீபிகாவுடன் வெற்றுடம்புடன் சைப் நடித்ததில் கோபமில்லை என்றார் கரீனா. பாலிவுட் ஸ்டார் சைப் அலிகான், கரீனா கபூர் இணை பிரியாத காதலர்கள். விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரேஸ் 2 என்ற படத்தில் ஹீரோயின் தீபிகா படுகோன் நீச்சல் உடையில் நடிக்க அவரை வெற்றுடம்புடன் கட்டிப்பிடித்து சயீப் அலிகான் நடித்துள்ளார். இந்த காட்சி கரீனாவுக்கு கோபத்தை உண்டாக்கி இருக்கிறது என்று பாலிவுட்டில் கிசுகிசு பரவியது. இதுகுறித்து கரீனா கூறும்போது, சைப், தீபிகா காட்சியை விரும்பி பார்த்தேன். சூப்பராக இருந்தது. சைப் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார். அவர் வெற்றுடம்பில் எப்படி இருப்பார் என்பது ஏற்கனவே எனக்கு தெரியும். எங்கள் காதல் உறவு மிகவும் பாதுகாப்பாக உள்ளது. இப்போது இதற்குமேல் எதையும் கூற விரும்பவில்லை என்றார். சமீபத்தில் சைப் அளித்த ஒரு பேட்டியில், கரீனா என்னுடன் ஜோடியாக நடிக்கும்போதுதான் பொருத்தமாக இருக்கிறார். மற்ற கான் நடிகர்களுடன் அவர் பொருத்தமாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அணு குண்டு தயாரிப்பில் புலிகள்: அமெரிக்காவுக்கு பூச்சாண்டி காட்டிய இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அணு குண்டுகள் தயாரிக்கின்றார்கள் என்று அஞ்சி இருக்கின்றது இலங்கை அரசு. சிவப்பு பாதரசம் என்கிற இரசாயனப் பொருள் மூலமாக அணு குண்டுகள் உட்பட பேரழிவை ஏற்படுத்தக் கூடிய நாசகார ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்று விக்கி பீடியா கூறுகின்றது. இந்நிலையில் சிவப்பு பாதரசம் என்கிற இரசாயனப் பொருளை சேகரிக்கின்ற நடவடிக்கையில் புலிகள் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்றும் சிவப்பு பாதரசம் குறித்து கொழும்பு, கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களிடம் புலிகள் 2002 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் விசாரணை நடத்தி இருக்கின்றனர் என்றும் இலங்கை அரசுக்கு இரகசிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்து இருந்தன. அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களிடம் இருந்து பாதுகாப்புக் கொடுக்கின்ற கவச ஆடைகள் சம்பந்தப்பட்ட சர்வதேச மாநாடுகளில் புலிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றி இருக்கின்றனர் என்றும் குறிப்பாக லண்டனில் 2001 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி இடம்பெற்று இருந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்று இருந்தனர் என்றும் இலங்கை அறிந்து வைத்திருந்தது. மேற்சொன்ன லண்டன் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்களில் ஒன்று அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களிடம் இருந்து பாதுகாப்புக் கொடுக்கின்ற கவச ஆடைகள் பற்றியது என இலங்கை அறிந்து இருந்தது. அத்துடன் அணு, உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட ஏராளமான புத்தகங்களை யுத்த நிறுத்த காலத்தில் இருந்து புலிகள் கொள்வனவு செய்திருந்தனர் என்றும் இலங்கை அரசு தெரிந்து வைத்திருந்தது. இந்நிலையில் புலிகளிடம் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய நாசகார ஆயுதங்கள் இருக்கக் கூடும் என்று அமெரிக்காவுக்கு 2006 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி முறையிட்டு இருக்கின்றது.

Monday, January 30, 2012

என்னைப்பற்றி அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது! - அமலா பால்

திரைப்பட விழாக்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக வந்த வதந்திகளுக்கு நடிகை அமலா பால் பதிலளித்துள்ளார். நடிகை அமலாபால், சித்தார்த் ஜோடியாக நடித்த காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடந்தது. நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இவ்விழாவில் அமலாபால் கலந்து கொள்ளவில்லை. திட்டமிட்டு இவ்விழாவை புறக்கணித்ததாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து அமலாபால் கூறியதாவது, என் மீது அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளும், வதந்திகளும் பரப்பப்படுகின்றன. காதலில் சொதப்புவது எப்படி? பட விழாவை புறக்கணித்ததாக குறை சொல்கிறார்கள். கடந்த சில வருடங்களாக எவ்வளவோ பட விழாக்களில் பங்கேற்றிருக்கிறேன். நான் நடித்த படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டுள்ளேன். எந்த கதாநாயகியும் என்னைப் போல் விழாக்களில் கலந்து கொண்டிருக்கமாட்டார்கள். தெய்வத்திருமகள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்தேன் என்றாலும் அப்படத்தை விளம்பரப்படுத்த பல ஊர்களுக்கு சென்றுள்ளேன். வேட்டை படத்தை விளம்பரம் செய்வதிலும் எனது பங்களிப்பு அதிகமாக இருந்ததுள்ளது. பல மாநிலங்கள் சென்று எனது படங்களை விளம்பரப்படுத்தியுள்ளேன். அதனால் என்னைப்பற்றி இதுபோல் அவதூறாக வதந்திகள் பரப்புவது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

அதிசயமான உண்மை: காதலியின் முன்னால் பத்து தலைகளுடன் தோன்றும் இராவணன்!!

பகவான் கிருஷ்ணரை எத்தனையோ பெண்கள் காதலித்தனர் என்று நாம் அறிகின்றோம். புராணங்கள், இதிகாஷங்கள் உட்பட இந்து சமய நூல்கள் பலவும் இதை சொல்லி நிற்கின்றன. ஆனால் இன்றைய கலியுகத்தில் அதுவும் இருபதாம் நூற்றாண்டில் இராவணனை காதலிக்கின்ற பெண் ஒருவரை அறிய முடிகின்றது. இது கட்டுக் கதையோ, கற்பனையோ அல்ல. உளவியல் அறிஞர்கள் பலரையும் திக்குமுக்காட வைத்திருக்கின்ற அதிசயமான உண்மை. இராவணன் மீது காதல் வசப்பட்டு உள்ளார் வங்காளப் பெண் ஒருவர். இவரது கனவில் காலை, மாலை எப்பொழுதும் இராவணன் பத்துத் தலைகளுடன் தோன்றுகின்றார் என்று காதல் மயக்கத்தோடு கூறுகின்றார். இராவணனைப் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தால் போதும் இராவணன் அழகிய பத்துத் தலைகளுடன் கண் முன் தோன்றி விடுகின்றார் என்கிறார். இவரது கண்களுக்கு ரோமியோவாக இராவணன் தெரிகின்றான். உளவியல் அறிஞர்கள் குழம்பிப் போய் உள்ளார்கள். மனிதர்கள் புரிந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.

தலைமைத்துவப் பயிற்சி என்று தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் படையினர்!!

கிளிநொச்சியில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி என்ற போர்வையில், தமிழ் மாணவர்களின் கல்வியை சிதைக்கும் செயற்பாட்டை படைத்தரப்பு மேற்கொண்டு வருகிறது, படித்த அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்க நடத்தப்படும், இராணுவச் சிப்பாயையும், காதலித்து அவருடன் ஓடிய பெண்ணையும் விருந்தினர்களாக அழைத்து மாணவர்கள் அவர்களை கௌரவிக்க வேண்டும் என படையினர் நிர்ப்பந்திப்பது, அநாகரிகமான செயல். இதனை தட்டிக் கேட்டால், வேலை பறிபோகும், அச்சுறுத்தப்படுவோம் என்பதனாலேயே பல கல்வி அதிகாரிகள் அங்கு நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களை பார்த்தும் பார்க்காதவர்கள் போல் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள, பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கிளி.மத்திய கல்லூரியில் இராணுவத்தினரின் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரின் பயற்சி வகுப்புக்கள் கடந்த 26ம் திகதி தொடக்கம் நடத்தப்பட்டு வருகின்றது. 5 நாட்கள் கொண்ட இந்த பயிற்சியில் 150 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பயற்சிகளின்போது மாணவர்கள் தவறாக வழி நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக மத்திய கல்லூரி இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்தப்பட்டபோது, அங்கிருந்த பெண்ணொருவர், இராணுவச் சிப்பாயுடன் ஓடி திருமணம் முடித்துக் கொண்டார், இந்த இருவரையுமே பயிற்சி நெறியின் ஆரம்ப நாளுக்கு விருந்தினர்களாக அழைத்ததுடன், இவர்கள் ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவுக்குமாறும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆண், மாணவர்களையும், பெண் மாணவிகளையும் ஒன்றாக சேர்ந்து ஆடுமாறும், கேட்கப்பட்டுள்ளனர். இதேபோல் முல்லைத்தீவில் இடம்பெறும் களியாட்ட நிகழ்வொன்றுக்கு இவர்களை அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இது எமது தமிழ் கலாச்சாரத்திற்கு பொருந்தாது என்பதுடன், இந்த செயற்பாடு மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும், எனவே இந்த விடயத்தில் பெற்றோர் அக்கறை காட்டவேண்டும் என்பதுடன், கல்வி அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாகவும், அது தொடர்பாக அறிந்தும், அறியாதவர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர். என அவர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில், இந்த செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், இந்த பயிற்சிப் பட்டறை இராணுவத்தினரின் முழுமையான ஏற்பாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியை இராணுவத்தினர் வழங்கவேண்டிய தேவை கிடையாது. மேலும் மாணவர்களிடத்தில் கலாச்சார சீரழிவுகளையும், இளவயதில் தேவையற்ற விடயங்களில் ஈடுபாடு காட்டும் தன்மையினையுமே அதிகரிக்கும், படைச்சிப்பாயுடன், ஒரு இளம் பெண் திருமணம் செய்து கொள்வது ஒரு முன்னுதாரணமாக செயலாக இருக்க முடியாது. இந்த நிலையில் பெற்றோர் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறி போட்டிருக்கின்றீர்கள். இனிமேலாவது பெற்றோர் இந்த விடயத்தில் அக்கறை கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், மேலும் இந்த விடயத்தில் கல்வி அதிகாரிகள் பேச முடியாதவர்களாக இருப்பது வேதனையளிக்கின்றது. என்றார்.

பேரனால் கற்பழிக்கப்பட்ட பேத்தி! அதிர்ச்சியில் உறைந்தது யாழ்.மீசாலை!!

மீசாலைப் பகுதியில் பதின்ம வயதுடைய தனது பேர்த்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 65 வயதுடைய முதியவர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பதின்ம வயது மாணவியை சம்பவ தினத்தன்று மதுபோதையில் வந்த தாத்தா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், மறுநாள் இச் சம்பவம் தொடர்பில் மாணவி தனது ஆசிரியை ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில் அம் மாணவியின் சிறியதாயர் ஒருவரைப் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதுடன், இதனை அறிந்த சந்தேக நபரான தாத்தா நஞ்சருந்திய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே இவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் இந்த 65 வயதுத் தாத்தாவைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, முல்லைத்தீவில் தாயை இழந்த இந்த மாணவியின் தந்தை வேறு திருமணம் செய்ததால் இவர் 65 வயதுடைய பேரனுடன் தங்கிப் படித்து வருகிறார் என்றும் இந்த நிலையிலேயே பேரன் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆபாசப் படங்களைக் காட்டி வன்புணர்வு புரிந்தார் என்றும் கூறப்படுகின்றது

நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் நெருக்கமாக இருக்கும் பிரபுதேவா!!

விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும்-நயன்தாராவும் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர். நயன்தாரா மீதுள்ள காதலால் தனது முதல்மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு எல்லாம் மாறினார். கடைசியாக தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் மனகசப்பு ஏற்பட்டு விட்டதாகவும், இதனால் இருவரும் பிரிய முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபுதேவா-நயன்தாராவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில், முதல் மனைவி ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தாலும், அவரது குழந்தைகளை விட்டு பிரிய மனமில்லையாம். சமீபத்தில் கூட இதுதொடர்பாக நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே பிரச்னை உருவானது. மேலும் நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் பிரபுதேவா நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நயன்தாராவுக்கு, பிரபுதேவாவின் மீதான கோபம் அதிகரித்துள்ளதாகவும், இதுவே இவர்களது காதலில் விரிசல் ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது இருவரும் அமைதியாக பிரிவது என்று முடிவு எடுத்து, பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நயன்தாராவும், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அவர் இப்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, January 29, 2012

நடுவீதியில் பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல்!! கிளி நொச்சி பரந்தன் சந்தியில் அராஜகம்!

பஸ் நடத்துனருக்கும் சிவல் உடையில் பயணித்த படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் பயணிகளும் படையினரால் தாக்கப்பட்டனர். இதையடுத்து பஸ் சாரதி, நடத்துனர், படையினர் நால்வர் என 6 பேரைக் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பஸ்ஸில் பயணித்த பயணிகள் வீதியில் இறக்கப்பட்டு பஸ்ஸூம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டது. இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் கிளி நொச்சி பரந்தன் சந்தியில் நடைபெற்றது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி தனியார் பஸ் வந்துகொண் டிருந்தது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நகரப் போக்கு வரத்துப் பொலிஸாரால் பஸ் மறிக்கப்பட்டது. மிதி பலகையில் பயணிகளை ஏற்றிய மைக்காக பஸ் நடத்துனரிடம் குற்றப் பணம் அறவிடப்பட்டது. பின்னர் பஸ் புறப்பட ஆயத்தமாகியதும் மிதி பலகையில் நின்ற பயணிகளை உள்ளே செல்லுமாறு பணித்தார் நடத்துனர். இதன் போது மிதி பலகையில் சிவில் உடையில் நின்ற படையினருக்கும் நடத்துனருக்கும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அது முற்றி கைகலப்பாக மாறியது. சம்பவத்தை அறிந்து அருகில் நின்ற இராணுவத்தினர் சிலரும் வந்து சேர்ந்தனர். நடத்துனரும் பயணிகள் சிலரும் படையினரால் தாக்கப்பட்டனர். பயணிகள் தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி, நடத்துனரையும் இராணுவத்தினர் நால்வரையும் கைது செய்து கொண்டு சென்றனர். பயணித்த பயணிகள் இறக்கப்பட்டு பஸ்ஸூம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் நடு வீதியில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் வேறு பஸ்களில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தனர். இரவு வேளையில் திடீரெனப் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ்களில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வீடு வந்து சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. படையினரும் பொது மக்களும் மோதிக்கொள்ளும் இத் தகைய சம்பவங்கள் வன்னியில் அதிகம் நிகழ ஆரம்பித்துள்ளன. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கும் பஸ் நடத்துனர் ஒருவருக்கும் இடையே கைகலப்பு இடம் பெற்றது. வேறு அசம்பாவிதங்கள் எவையும் நடை பெறவில்லை. இதனை அடுத்து அவர்களைக் கைது செய்து தாம் விசாரித்து வருவதாகவும் நேற்றிரவு கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் தெரிவித்தார்.

தன் ஒல்லியான உடழழகின் ரகசியத்தைக் கூறுகிறார் அமலா பால்!

தமிழ் திரை உலகின் அழகு நிலா அமலா பால். ஒல்லியான தேகம், வசீகரிக்கும் தோற்றம். இன்றைய இளைய தலைமுறை நடிகைகளிலேயே இளைஞர்கள் மட்டுமல்லாது கல்லூரி மாணவிகளிடமும் அதிக மதிப்பெண் பெற்று அழகு நிலாவாக திகழ்கிறார் அமலா பால். மைனாவில் பாவடை தாவணியில் ஆகட்டும், சமீபத்திய வேட்டையில் மாடர்ன் உடையில் கலக்கியது ஆகட்டும் அவரது உடலமைப்பிற்கு அனைத்துமே கச்சிதாமாக பொருந்தியது. அவரது உடல் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. அது குறித்து அவரே பகிர்ந்து கொண்டது. ஜங்க் புட் கூடாது பசிக்கிறது என்பதற்காக ஜங்க் புட் வகைகளை எந்த சூழ்நிலையிலும் தொடவே கூடாது. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும், சத்தான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் இதுதான் என்னுடைய முதல் அட்வைஸ். குண்டான பெண்கள் கண்ட கண்ட ரசாயணங்கள் அடங்கிய மருந்துகளை உட்கொள்வதை விட ஆயுர்வேதா மருந்துகளை உட்கொள்ளவது அவசியம். நீச்சல் பயிற்சி மனதையும், உடலையும் லேசாக்குவது நீச்சல்தான். எத்தனை வேலை இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு மணிநேரமாவது நீந்துவது மிகவும் பிடித்தமானது. நோ டென்சன், கூல் சில வருடங்களுக்கு முன்வரை சரியான டென்சன் பார்ட்டி நான். அது முகத்தில் பிரதிபலித்து சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். இப்பொழுது இடியே விழுந்தாலும் டென்சன் பற்றி கவலைப்படாமல் கூலாக சுற்றிக்கொண்டிருப்பேன். அது அழகில் அப்படியே பிரதிபலிக்கிறது. அழகும் ஆரோக்கியமும் எப்பவுமே சிரிச்ச முகமா இருக்கணும். அழகும் ஆரோக்கியமும் மனசு சம்பந்தப்பட்டது. நல்ல சாப்பாடு, தீவிரப் பயிற்சின்னு இருந்தாலும், மனசுல மகிழ்ச்சி இல்லைன்னா, உடம்பு கன்ட்ரோலை இழந்துடும். எனவே எப்பவுமே மகிழ்ச்சியோட இருந்தா உடலும், மனசும் ஆரோக்கியமாகும். இதுவே என்னோட அழகு ரகசியம் என்று கூறிவிட்டு புன்னகை சிந்தினார் அமலாபால்.

ஜோடிக்கிளிகள் பிரிஞ்சு போச்சு! வரிசையில் அடுத்துவருவது யாரு?

காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறந்து கொண்டிருக்கிறார்கள் நயன்தாராவும் பிரபுதேவாவும். ஆனால் இங்கே என்னடா என்றால், ரெண்டு பேருக்கும் புட்டுகிச்சு என்று கிசுகிசு பரப்புகிறார்கள். அதுவே செய்தியாகவும் கசிவதால் அதையெல்லாம் படித்துவிட்டு, இந்த பசங்களுக்கு இதே வேலையாப் போச்சு என்று நமுட்டு சிரிப்பு சிரிக்கிறதாம் ஜோடி. நயன்தாரா மீண்டும் நடிக்கப் போகிறார் என்று வெளிவரும் செய்திகளிலும் அவ்வளவு உண்மை இல்லையாம். அவரை தேடிச் சென்று அழைக்கிற சில இயக்குனர்களிடம், யோசிக்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். நேரில் வருகிறவர்களிடம் முகத்தில் அடித்த மாதிரி பதில் சொல்ல முடியாதல்லவா? அதனால்தான் இப்படி ஒரு பதில். எப்படி இருக்கிறது இப்போதைய நிலவரம்? பிரபுதேவா இந்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் ரவுடி ரத்தோர் படப்பிடிப்பு பதாமியில் நடந்து வருகிறது. அவ்வப்போது கிளம்பி பதாமிக்கு சென்றுவிடுகிறார் நயன்தாரா. சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் கேரளாவுக்கு திரும்பிவிடுகிறார். இந்த சந்திப்பும் மிக மிக சுமூகமாகவே இருக்கிறதாம். அதுமட்டுமல்ல, இவர்கள் இருவருமே சென்னையின் காஸ்ட்லி பகுதியான போர்ட் கிளப்பில் வீடு வாங்கியிருப்பதாகவும் தகவல். உண்மை இப்படியிருக்கும் போது எதற்காக திரும்ப திரும்ப இவர்களின் காதலை டெட்டால் ஊற்றி கழுவிக் கொண்டேயிருக்கிறது மீடியா என்பதுதான் புரியவே இல்லை!