Breaking News

தலைமைத்துவப் பயிற்சி என்று தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் படையினர்!!

கிளிநொச்சியில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி என்ற போர்வையில், தமிழ் மாணவர்களின் கல்வியை சிதைக்கும் செயற்பாட்டை படைத்தரப்பு மேற்கொண்டு வருகிறது, படித்த அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்க நடத்தப்படும், இராணுவச் சிப்பாயையும், காதலித்து அவருடன் ஓடிய பெண்ணையும் விருந்தினர்களாக அழைத்து மாணவர்கள் அவர்களை கௌரவிக்க வேண்டும் என படையினர் நிர்ப்பந்திப்பது, அநாகரிகமான செயல். இதனை தட்டிக் கேட்டால், வேலை பறிபோகும், அச்சுறுத்தப்படுவோம் என்பதனாலேயே பல கல்வி அதிகாரிகள் அங்கு நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களை பார்த்தும் பார்க்காதவர்கள் போல் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள, பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கிளி.மத்திய கல்லூரியில் இராணுவத்தினரின் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரின் பயற்சி வகுப்புக்கள் கடந்த 26ம் திகதி தொடக்கம் நடத்தப்பட்டு வருகின்றது. 5 நாட்கள் கொண்ட இந்த பயிற்சியில் 150 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பயற்சிகளின்போது மாணவர்கள் தவறாக வழி நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றது. குறிப்பாக மத்திய கல்லூரி இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்தப்பட்டபோது, அங்கிருந்த பெண்ணொருவர், இராணுவச் சிப்பாயுடன் ஓடி திருமணம் முடித்துக் கொண்டார், இந்த இருவரையுமே பயிற்சி நெறியின் ஆரம்ப நாளுக்கு விருந்தினர்களாக அழைத்ததுடன், இவர்கள் ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவுக்குமாறும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆண், மாணவர்களையும், பெண் மாணவிகளையும் ஒன்றாக சேர்ந்து ஆடுமாறும், கேட்கப்பட்டுள்ளனர். இதேபோல் முல்லைத்தீவில் இடம்பெறும் களியாட்ட நிகழ்வொன்றுக்கு இவர்களை அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இது எமது தமிழ் கலாச்சாரத்திற்கு பொருந்தாது என்பதுடன், இந்த செயற்பாடு மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும், எனவே இந்த விடயத்தில் பெற்றோர் அக்கறை காட்டவேண்டும் என்பதுடன், கல்வி அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாகவும், அது தொடர்பாக அறிந்தும், அறியாதவர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர். என அவர்கள் மேலும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில், இந்த செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், இந்த பயிற்சிப் பட்டறை இராணுவத்தினரின் முழுமையான ஏற்பாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியை இராணுவத்தினர் வழங்கவேண்டிய தேவை கிடையாது. மேலும் மாணவர்களிடத்தில் கலாச்சார சீரழிவுகளையும், இளவயதில் தேவையற்ற விடயங்களில் ஈடுபாடு காட்டும் தன்மையினையுமே அதிகரிக்கும், படைச்சிப்பாயுடன், ஒரு இளம் பெண் திருமணம் செய்து கொள்வது ஒரு முன்னுதாரணமாக செயலாக இருக்க முடியாது. இந்த நிலையில் பெற்றோர் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறி போட்டிருக்கின்றீர்கள். இனிமேலாவது பெற்றோர் இந்த விடயத்தில் அக்கறை கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், மேலும் இந்த விடயத்தில் கல்வி அதிகாரிகள் பேச முடியாதவர்களாக இருப்பது வேதனையளிக்கின்றது. என்றார்.

1 comment:

  1. கல்லறைப்பூக்கள்February 1, 2012 at 1:09 AM

    இது தமிழ்தேசிய எதிரிகளின் அப்பழுக்கற்ற மனோதத்துவப்போராகும். முதலில் தலைப்பே தவறானது.தமிழ்மாணவர்களின் எதிர்காலத்தையல்ல;தமிழ்தேசியத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் படையினர் என்று தான் இருக்கவேண்டும். மொழி,கலாச்சாரம்,பண்பாடு தழைக்க அவற்றிற்க்கான பிரதேசங்கள் வேண்டும்,ஆனால் இங்கு சிங்களப்பேரினவாதிகள் தமிழீழப்பிரதேசங்களை சிதைத்து சிங்களக்குடியேற்றங்களை உருவாக்க, அங்கு வாழும் தமிழீழ மக்களின் சிந்திக்கும் திறன்,போராட்டகுணத்தை[உணர்வை] மழுங்கடித்து தமிழ்,சிங்களக்கலப்பினத்தை உருவாக்குவதின் முதல் அத்தியாயம் தான் இந்த நடவடிக்கை; மேலும் இனி தமிழ் பிரதேசங்களில் இரவு நேர கேளிக்கை [நடன] விடுதிகள்,மதுபானக்கடைகள்,சூதாட்டவிடுதிகள்,போன்ற கலாச்சார முரண்பாடான செயல்கள், அதிகம் நடைபெறவைப்பார்கள்;இவை சிங்களப்பேரினவாதிகளின் எதிர் புரட்சி தந்திரங்கள் தான்; இதன் முதல் நோக்கம் தமிழீழ இளைஞர்கள்,மற்றும் மாணவர்களின் சிந்திக்கும் திறனை காதல்களியாட்டங்களில் திசைதிருப்பி,சிந்திக்கும் திறனை மழுக்கடித்து தமிழ்தேசிய விடுதலைப்போராட்டத்தை[உணர்வை] சிதைப்பது, துரோகிகள் பின்[கதாநாயகர்கள் போல் சித்தரித்து] அணிவகுக்கச்செய்து தமிழ்,சிங்களக்கலப்பினத்தை உருவாக்குவது; இது தமிழீழமக்கள் [குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்] மீது தொடுக்கப்பட்ட மனோதத்துவப்போராகும். இப்போரில் எதிரிகளின் இழிச்செயலை தமிழீழ மக்கள்[குறிப்பாக இளைஞர்கள்,மற்றும்மாணவர்கள்] இனம்கண்டு எதிரிகளின் நோக்கத்தை வேரறுக்க வேண்டும். உரிமை இழந்தோம்; உடைமை இழந்தோம்; உயிர்களை இழந்தோம்; உணர்வை இழங்கலாமா???

    ReplyDelete