Thursday, March 17, 2011
நிர்வாண உடலின் மேல் வைத்து உணவு உண்ணும் யப்பானிய பாரம்பரியம்! (படங்கள் இணைப்பு)
Sushi என்பது யப்பானில் மிகவும் பிரபலமான உணவு.
வினாகிரி கலந்து தயாரிக்கப்பட்ட சோறு, மீன் கறிஆகியன இதில் முக்கியமாகப் பரிமாறப்படும்.
Sushi சாதாரணமாக கோப்பைகளில் பரிமாறப்படுகின்றது.
ஆனால் விசேட நாட்களில் உணவகங்களில் Sushi இரவுச் சாப்பாட்டுக்கு பரிமாறப்படுகின்றபோது ஒரு பெரிய வித்தியாசம்.
என்னவென்றால் நிர்வாண உடல்களின் மேல் இவ்வுணவு பரிமாறப்படுகின்றது.
இது பாரம்பரியமாக இடம்பெறுகின்றது.
பெண்களின் உடலின் மேல் பரிமாறப்படுகின்றபோது Nyotaimori or body sushi என்று இது அழைக்கப்படுகின்றது.
ஆண்களின் உடலின் மேல் பரிமாறப்படுகின்றபோது Nantaimori என்று அழைக்கப்படுகின்றது.
பெண்களின் உடலின் மேல் பரிமாறப்பட்டு இருக்கும் இவ்வுணவைச் சாப்பிடுகின்றமை ஒரு தனிக் கலையே ஆகும் என்று எப்போதும் யப்பானியர்கள் நம்புகின்றனர்.
ஆயினும் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் இம்முறைமையை வன்மையாக கண்டிக்கின்றார்கள்.அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி போன்ற மேலைத்தேய நாடுகள்கூட பெண்களின் உடலின் மேல் பரிமாறப்பட்டிருக்கும் உணவை உண்ணும் யப்பானிய பாரம்பரியத்தை உள்வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
நிர்வாண உடல் என்கிற பாத்திரத்தில் உணவை தாங்குகின்றமை மிகவும் கடினமான விடயம்தான்.
பெண்ணானாலும் சரி, ஆணானாலும் சரி இதற்கென பிரத்தியேக பயிற்சிகளைப் பெற வேண்டும்.
அசையாமல் பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் கிடக்கத் தெரிய வேண்டும்.
குளிரான, சூடான உணவுப் பதார்த்தங்களை தாங்கக் கூடிய அளவுக்கு உடலை பழக்கி இருக்க வேண்டும்.
உடலில் வளர்ந்து இருக்கக் கூடிய உரோமங்களை முழுமையாக சவரம் செய்து இருக்க வேண்டும்.
குறிப்பாக பிறப்புறுப்பு பகுதியில் வளர்ந்து இருக்கக் கூடிய உரோமங்களை
முற்றிலும் சவரம் செய்து இருக்க வேண்டும்.
பிறப்புறுப்பு பிரதேசத்தின் மேல் உணவு பரிமாறப்படுகின்றமை ஒரு வகையான பாலியல் தூண்டலாக இருக்க கூடும்.
அத்துடன் உடல் மேல் உணவு பரிமாறப்படுகின்றமைக்கு முன்னர் விசேட குளியல் ஒன்றை இவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இக்குளியலின்போது வாசனைச் சவர்க்காரத்தை உடல் முழுவதும் போடுவார்கள்.
உடலை குளிர்மைப் படுத்துகின்றமைக்காக குளியலின் நிறைவில் குளிர்த் தண்ணீரை உடல் முழுவதும் தெளித்துக் கொள்வார்கள்.உண்மையில் இப்பெண்கள் அல்லது ஆண்கள் கௌரவமாகவே நடத்தப்படுகின்றனர்.
உணவு உண்பவர்கள் இவர்களின் உடலை தொட்டு சேட்டை செய்கின்றமைக்கு அனுமதி இல்லை.
எது எப்படி இருந்தாலும் இலைகள், பிளாஸ்ரிக் பாத்திரங்கள் ஆகியவற்றை நிர்வாண உடலின் மேல் வைத்து அவற்றில் உணவை பரிமாறுகின்றமை சுகாதாரம் ஆனது என்றும் ஆரோக்கியமானதும் என்றும் அண்மைய நாட்களில் பல நிபுணர்களாலும் அறிவுறுத்தப்படுகின்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment