Thursday, March 17, 2011

நடிகை சிம்ரனுக்கு 2-வது ஆண் குழந்தை


சிம்ரனுக்கும் மும்பையை சேர்ந்த தீபக்கும் கடந்த 2003-ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு அதீப் என்ற ஐந்து வயது மகன் இருக்கிறான். சிம்ரன் குடும்பத்துடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் புதிதாக கட்டியுள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறா
அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். நேற்று சிம்ரனுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது பெற்றோர் அருகில் இருந்தனர்.

ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு கணவர் தீபக், மானேஜர் முனுசாமி ஆகியோர் இனிப்பு வழங்கினார்கள்

No comments:

Post a Comment