January 22nd, 2016 அன்று பிரசுரிக்கப்பட்டது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சுதந்திரமாகச் செயற்பட விடுமாறு வலியுறுத்தி கொடிகாமம் வரணிப் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் துசாந் என்ற தனிநபர் தந்தை செல்வா சதுக்கத்துக்கு முன்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
வடக்கு முதலமைச்சரை குறை கூறி விமர்சிப்பதற்காக செலவளிக்கும் நேரத்தை விடுத்து, மக்களுக்கு சேவை செய்வதற்காகச் செலவளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்ற வேண்டாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு முதலமைச்சர் வேண்டுகோள்
யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாகேந்திரன் துசாந்த் என்பவரை வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன் சென்று சந்தித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கோரியதாக முதலமைச்சரின் செயலாளர் துஷாந்துக்கு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment