Wednesday, December 7, 2011

சிங்களவர்கள் கோழைகல்ல! அவர்களை சோதிக்க வேண்டாம்!! - எச்சரிக்கிறார் சம்பிக்க


சிங்களவர்களின் பொறுமையை அவர்களின் கோழைத்தனமாக கருதிவிடக் கூடாது என்று சிங்கள எதிர்ப்பு சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

ஜாதிக ஹெல உறுமயவினால், ஏற்பாடு செய்யப்பட்ட கங்கொடவில சோம தேரரின் 8வது நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எத்தகைய எதிர்ப்புகள் இருந்தாலும் வடக்கில் சிங்களவர்கள் மீளவும் குடியேற்றப்பட வேண்டும்.

1981இல் யாழ்ப்பாணத்தில் 21,000 சிங்களவர்கள் வசித்ததுடன் புத்த மதமும் அங்கிருந்தது.

சிறிலங்கா பாதுகாப்புப் படையில் சிங்கள இளைஞர்களால் தான், விடுதலைப் புலிகளிடம் இருந்து உயிர் தப்பி ஆனந்தசங்கரியால் உயிர்வாழ முடிகிறது என்பதை அவர் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

சம்பந்தனுக்கு கொழும்பில் வாழும் உரிமை உள்ளது. அதுபொலவே சிங்களவர்கள் வடக்கில் வாழ்வதற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எமது நாட்டில் வாழ்வதற்கான எமது உரிமை மறுக்கப்படுகிறது.

எமது மக்களை கொன்ற தீவிரவாத சந்தேகநபர்கள் 11 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். இவர்களை விடுதலை செய்வதற்கு எந்தவொரு சிங்களவராவது எதிர்ப்புத் தெரிவித்தாரா?

பழி கூறுவதற்கு சிங்களவர்கள் எவரும் வெளிநாடு சென்றதில்லை. ஆனால் சம்பந்தன் அதையே செய்கிறார்“ என்றும் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

2 comments:

  1. யா,யா,யா...
    அதிகளவில் இனப்பெருக்கம் செய்து-பெரும்பான்மையராயிருந்துகொண்டு எம் முன்னவர்களை அடிமைப்படுத்தியது "வீரம்".

    அடிமைத்தனமுடைக்க துணிந்தவரை வானத்திலிருந்தும் தூரத்திலிருந்தும் குண்டுவீசிக்கொன்றது வீரம்.

    உரிமை கேட்டவரைப் பயங்கரவாதியாக்கி,பல வல்லரசுகளின் துணைகொண்டு விதிமுறை மீறி அழித்தது வீரம்.

    பத்துவயது சிறுமிகளைக்கூட விட்டுவிடாமல் பல எருமைகள் சேர்ந்து கற்பழித்தது மகா வீரம்.

    நேரடியாக தனித்துநின்று மோத துணிவின்றி,நச்சுக்குண்டுகளுக்காக நாட்டை அடைமானம் வைத்து,வாங்கிய நச்சுக்குண்டுகளால் கருவிலிருந்த சிசுக்களைக்கூட கொன்றொழித்தது வீர சாகசம்.

    இவ்வளவு காலமும் பொந்துக்குள் கிடந்துவிட்டு,கேட்க நாதியற்றவர்களாகிவிட்டனர் என்ற எண்ணத்தில் இப்பொழுது புதிதாக அறிக்கை விட்டு வெருட்டுவது அனைத்தையும் விட பெரிய வீரதீரம்.

    (பழி கூற சிங்களவர் யாரும் வெளிநாடு போகவில்லைத்தான்.போராட்டத்தை பயங்கரவாதமாக்கி,தடைசெய்வித்து,ஆயுதம் வாங்கி,படை வாங்கி,காசு வாங்கி,..... எல்லாமே வெளிநாடு போகாமல் நடந்த விசயம்தானே.)

    -நீ சொன்னதை நாம் திரும்ப உனக்கே சொல்கின்றோம்."தமிழனுக்குள் துரோகிகள் இருக்கலாம்.ஆனால் கோழைகள் கிடையாது.வித்து முழைப்பதற்கு சில காரணிகள் தேவை.அவை கிடைத்தால் விருட்சமாகி விளுது விடுவதை யெவனும் தடுக்க முடியாது."

    ReplyDelete
  2. உங்கள் தளத்தின் "comments" பகுதியில் "verify" ஐ இல்லாமல் செய்வது நல்லதென நான் நினைக்கிறேன்.
    அத்துடன்,"Page" க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் "marquee" இனது வேகத்தையும் நிறத்தையும்,படிக்க வசதியான முறையில் மாற்றியமைத்தால் நல்லது.

    இது என் கருத்து.அவ்வளவுதான்.

    ReplyDelete