Thursday, December 22, 2011

துமிந்த மீதான துப்பாக்கி வேட்டுகள்: வெளியானது எக்ரே படங்கள்

முல்லேரியா சூட்டுச் சம்பவத்தில் போது தலையில் சூடுபட்டு பாரிய காயங்களுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவிற்கு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சத்திர சிகிச்சைகளை காட்டும் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினரது தலையில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், தலையில் பட்ட துப்பாக்கி சூட்டின் காரணமாக ரவைகள் நுள்நுழைவது மற்றும் வெளிவருவதாக எக்ரே படங்களும் இதில் அடங்கும். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வாவிற்கு துப்பாகி வெடி விழுந்தது எவ்வாறு? மற்றும் அவருக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது யார் என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதி நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமாந்த வர்ணகுலசூரிய, ஆர் துமிந்த சில்வாவிற்கு ஏற்பட்ட காயங்களை காட்டும் 19 ஸ்கேன் படங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்தார். இவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவினது மண்டை ஓட்டில் துப்பாக்கி ரவை உள்நுழைந்திருப்பது மற்றும் வெளியேறியிருப்பது தொடர்பில் அந்த படங்களில் காட்டப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கி பிரயோகமானது 10 லிருந்து 30 சென்ரி மீட்டர் தூரத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment