Tuesday, August 30, 2011

மிக அழகான மேனியை பெறுவதற்கு


மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது அரிது. தங்களது தோலை பாதுகாக்க என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.

தங்களது தோலில் சிறிய சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அய்யோபோச்சே என கவலை கொள்கின்றனர். அவர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி.

தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய அதிகமாக தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல்சுருக்கம் மறைந்து விடுவதோடு தோலுக்கு தேவையான ஈரப்பதமும் கிடைக்கின்றது. எனவே இளமையாக தோன்றலாம்.

இதற்காக ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் கலந்துகொண்ட பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.

வில்லோ நீர் என்பது-இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் மினரல் வாட்டராகும்.

தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான ஸ்கின் கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத் தான் பயன்படுத்துகின்றனர். அதாவது செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தபடும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாகவே நாம் பெறுவதால் தான் தோல்சுருக்கம் காணமல் போகிறது.

இதில் கலந்துகொண்ட பெண்களை ஆராய்ச்சிக்கு முன்பும், பிறகும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு பிறகு எடுக்கபட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர். சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

எது எப்படியோ ஆக மொத்தத்தில் தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் தோல் சுருக்கம் மறையும்.

No comments:

Post a Comment