Tuesday, March 15, 2011

அணுக் கதிர்வீச்சுத் தாக்கம் தொடர்பில் இலங்கை வான்பரப்பிலும் கண்காணிப்பு


ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து இடம்பெற்ற அணுஉலை வெடிப்புகள் காரணமாக வெளியாகும் கதிர்வீச்சு இலங்கை வான்பரப்பிலும் தாக்கமேற்படுத்தலாம் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன் ஒரு கட்டமாக நாளை முதல் இலங்கை வான்பரப்பில் அணுக்கதிர்வீச்சு குறித்த கண்காணிப்புகளை மேற்கொள்ள இலங்கை அணு சக்தி முகவரகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கின்றது.

இலங்கையின் வான் பரப்பில் கதிர்வீச்சுப் பொருட்கள் ஏதும் தென்படுகின்றதா என்று கண்காணிப்பதே அதன் நோக்கம் என்று மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானிய அணு உலைக் கசிவு காரணமாக இலங்கைக்குப் பாதிப்புகள் இல்லையென்ற போதிலும் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்று இலங்கை அணுசக்தி முகவரகத்தின் தலைவர் கலாநிதி விமலதர்ம அபேவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment