Tuesday, March 15, 2011

சென்னையில் அமிலமழை பெய்யும்: எஸ்எம்எஸ் தகவலால் பீதி


ஜப்பான் நாட்டில் பூகம்பம், சுனாமி ஏற்பட்டதை தொடர்ந்து அணு உலைகள் வெடித்து கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கதிர்வீச்சு அபாயம் அதிகரித்து வரும் நிலையில்

அதை தொடர்புபடுத்தி சென்னையில் நேற்று எஸ்.எம்.எஸ்.-ல் பல்வேறு வதந்தி பரவியது. ஜப்பானில் கதிர்வீச்சு பரவி உள்ளதால் அது மழை மேகங்கள் வரை சென்றுள்ளது. எனவே சென்னையில் அமில மழை பெய்யும். அந்த மழையில் நனைந்து விடாதீர்கள். மழையில் நனைந்தால் உடல் வெந்து கொப்பளங்களாகி விடும்.

கதிர்வீச்சு பாதித்த மழையால், தோல் நோய் வரலாம். புற்றுநோய் கூட தாக்கும் என்று எஸ்.எம்.எஸ். தகவலில் பீதி கிளப்பப்பட்டுள்ளது. ஆனால் கதிர்வீச்சுக்கும், மழைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். எஸ்.எம்.எஸ்.சில் பரவும் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment