Thursday, March 17, 2011

முகமாலையில் நிர்வாணமான பெண் பேய் – சிங்கள வாகனச் சாரதியின் அனுபவம்


முகமாலைப் பகுதியில் தான் நிர்வாணமான பெண் பேய் ஒன்றைக் கண்டதாக சிங்கள வாகன சாரதி அப்பகுதிக்கு அருகில் காவலில் இருந்த இராணுவத்தினருக்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் தனது வர்த்தக நடவடிக்கைகளை முடித்துவிட்டு நேற்று இரவு தென்பகுதிக்கு சென்ற வர்த்தகர் தனது சாரதியுடன் ஹயஸ் வாகனத்தில் முகமாலை ஊடாகச் சென்று கொண்டிருந்தனர். இவ் வேளை வாகன சாரதி அலறியபடி வீதியை விட்டு வாகனத்தை புதர்கள் அடங்கிய பகுதிக்குள் திடீரெனச் செலுத்தியுள்ளார். தூக்கத்தில் இருந்த வர்த்தகரும் திடுக்குற்று விழித்து என்ன நடந்தது என வினாவியுள்ளார்.
புதர்ப் பகுதியில் இருந்து ஓடி வந்த பெண் ஒருவர் நிர்வாணமாக நடுவீதியில் நின்று தனது வாகனத்தை மறித்தார் என தெரிவித்துள்ளர். உடனடியாக வாகனம் அப் பகுதியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் இருந்த இராணுவக் காவலரன் அருகில் நிறுத்தப்பட்டு அங்கு கடமையில் நின்ற இராணுவத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் குறிப்பிட்ட பிரதேசத்திலும் அப்பகுதியில் சென்ற வாகனங்களையும் நிறுத்தி தேடுதல் நடாத்தி அவ்வாறான பெண் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். பின்னர் இராணுவத்தினர் சாரதி மற்றும் வர்த்தகர் ஆகியோரை கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மது போதையில் இவ்வாறு செய்துள்ளார்கள் என இராணுவத்தினர் ஏனைய வாகன சாரதிகளுக்கு தெரிவித்துள்ளர். ஆனால் முறிகண்டியில் குறித்த வாகனச்சாரதி ஏனைய சாரதிகளுக்கு தான் இவ்வாறு கண்டதை அச்சத்துடன் தெரிவித்துள்ளா

No comments:

Post a Comment