கொழும்பில் தடையை மீறி பொது இடத்தில் முத்தம் கொடுத்துக் கொண்ட 200க்கும் மேற்பட்ட காதலர்களை காவல்துறையினர் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தரை, குருநாகல் ஆகிய பகுதிகளில் காவலர்கள் முத்தமிடுவோரைப் பிடிக்கும் வேட்டையில் அதிகமாக இறங்கினர். பூங்கா மற்றும் பேருந்துநிலையங்களில் முத்தமிட்டு கொண்டிருந்த காதல் ஜோடிகளை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
மொத்தம் 200 ஜோடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பள்ளி மாணவ- மாணவிகள் என்று தெரிவித்துள்ளனர். இவர்களில் 15 வயதுக்கு குறைவானவர்கள் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து ஒப்படைத்தனர். மற்றவர்கள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதுஇவ்வாறிருக்க, சவுதி அரேபியாவில் மத்திய பொது அங்காடியில் முத்தமிட்ட இளைஞர் ஒருவருக்கு நான்கு மாதச் சிறையும், 90 கசையடியும் தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அங்காடியில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிப்பு கமராவில் பார்த்துக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர், 2 இளம்பெண்களுடன் நின்றிருந்த இளைஞர் ஒருவர், மற்றவர்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை கட்டி அணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக, அவர் காவல்துறையினருக்கு அறிவிக்க, காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து இளைஞனைக் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இளைஞன் மீது ‘பொது இட அநாகரீக’ வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இளைஞனுக்கு 4 மாத சிறையும் 90 சவுக்கடியும் தண்டனை விதித்து நீதிபதி கடந்த வாரம் தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment