Monday, March 7, 2011

திருமணம் செய்யப்போகும் பெண்களின் முக்கிய கட்டங்கள்....


பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை திருமணம். பெண்களுக்கு 18,19 வயதிலேயே திருமண ஆசை தலை தூக்கலாம். ஆனாலும் 20 முதல் 24 வயதுவரையிலான கால கட்டமே திருமணத்திற்குச் சரியான பருவம். திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே இத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.
ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதளவிலும் தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் நிலைமையே சரியான திருமணம். ஆனாலும் பொதுவாக இருவருக்கும் ஐந்து முதல் எட்டு வயது வரை வித்தியாசம் இருந்தால் நல்லது.
திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் கீழ்க்கண்ட விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உறவு விட்டுப் போகக் கூடாதே என்றோ, சொத்துக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ சொந்தத்தில் திருமணம் செய்து வைப்பது நம் நாட்டில் சகஜமான விஷயம். இரத்த உறவினர்களைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் தாய்க்கோ, தந்தைக்கோ உள்ள வேண்டப்படாத மரபணு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். சில சமயம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சியின்றி பிறக்கவோ, குறைப் பிரசவம் நிகழவோ கூடும். பெற்றோருக்கு இதை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட பெண்ணின் கடமை.
எக்காரணம் கொண்டும் திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவுகளில் ஈடுபடக் கூடாது. செக்ஸைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் காலத்துப் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்த்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ள நினைக்கவே கூடாது. அதனால் கருத்தரிக்கும் நிலை ஏற்பட்டாலோ, அதை கலைத்து விட்டாலோ அவை மூலம் ஏற்படும் மன அதிர்ச்சி, அவளது வாழ்க்கை முழுவதும் தொடரும்.
எப்படி எவ்வளவு ஜாக்கிரதையாகப் பழகினாலும், இந்த விஷயத்திற்குத் தன்னை விட்டுக் கொடுக்கும் பெண்,பிறகு அந்த வாலிபனையே மணந்து கொண்டாலும்,அவனிடம் சுய மதிப்பை இழந்து விடுவாள். காரணம் திருமணத்துக்கு முன்பே இவள் நம்மோடு படுக்கையை பகிர்ந்து கொண்டவள் தானே என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்பட்டிருக்கும்.
திருமண வாழ்க்கை என்பது பெண்களைப் பொறுத்த வரை முற்றிலும் மாறுபட்ட புதியதோர் உலகம். எனவே இந்த வாழ்க்கையின் மூலம், தான் இழக்கப் போகிறவற்றையும் பெறப்போகிறவற்றையும் உணர்ந்து உடலளவிலும்,உள்ளத்தளவிலும் பக்குவமடைய வேண்டும் அவள்.

No comments:

Post a Comment