
தெலுங்கில் சார்மியின் கவர்ச்சிக்கு பேய்த்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரே பேயாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
படத்தின் பெயர் மங்கலா. சார்மி பேயாக நடித்தாலும் கவர்ச்சிப் பேயாகதானே நடிப்பார்? இந்த படத்திலும் அப்படிதானாம். போயும் போயும் இப்படியா என்று ஹீரோ அலுத்துக் கொள்கிற மாதிரி, பேயோடு டேட்டிங் செய்கிறாராம் இவர்.இந்த படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டால், தமிழகத்தையும், இங்குள்ள இயக்குனர்களையும் ஒரு கலக்கு கலக்கலாம் என்று நினைத்தார் போலிருக்கிறது. படத்தை தானே டப்பிங் செய்து வெளியிடலாம் என்று நினைத்திருக்கிறாராம் சார்மி.
நடிச்சோம், போனோம்னு இல்லாமல் இப்படி வியாபாரத்திலும் இறங்கியிருப்பதை கண்டு நம்ம ஊர் விநியோகஸ்தர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள்.
சார்மியின் கவர்ச்சியை மற்றவர்கள் நம்பலாம். சார்மியே நம்புவது வியப்பாகதான் இருக்கிறது.
No comments:
Post a Comment