Tuesday, March 15, 2011
உடலுறவுக்கு இரவில் தூங்கிவிட்டு அதிகாலையில் அசத்தும் ஆண்கள்.....!!
இரவுகளை விட, அதிகாலை நேரத்தில்தான் இல்லறத்தில் ஆண்கள் அசத்துவார்கள் என்று அடித்துச் சொல்கின்றனர் செக்ஸ் நிபுணர்கள். இல்லறத்தில் ஈடுபட இரவு நேரமே உகந்தது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் இது பாரம்பரிய வழக்கமாகவும் இருந்து வருகிறது. இதனால்தான் மாலை நேரத்தில் பெண்கள் சீவி முடித்து சிங்காரித்து, வீடு திரும்பும் கணவனை வரவேற்க உற்சாகமக இருப்பார்கள்.
ஆனால் வேலையை முடித்துவிட்டு வரும் பல ஆண்கள் ஒருவித மனசோர்வோடுதான் வீடு திரும்புகின்றனர். காரணம் வேலைப் பளு. இவ்வாறு களைப்புடன் வரும் ஆண்கள், சாப்பிட்டபின் படுக்கைக்கு சென்று தூங்கி விடுகின்றனர்.
இது அவர்களின் மனைவிகளுக்கு ஒருவித ஏமாற்றத்தை அளிக்கிறது. அரைகுறை தூக்கத்தில் இருக்கும் கணவனை எழுப்பி, இல்லறத்தை நாடுவதால் அதில் சுவாரஸ்யம் இருப்பதில்லை.
ஆனால், காலை நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் ஆண்களுக்கு மனம் உற்சாகமாக இருக்கும். இரவில் பார்த்த அதே மனைவி, ஏனோ இப்போது அழகாய் தெரிவார். நெருக்கம் தேடி மனம் அலைபாயும்.
இதுகுறித்து டெல்லியை சேர்ந்த டாக்டர் கமல் குரானா கூறுகையில்,
செக்ஸ் என்பது உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். நம் ரிலாக்ஸாக இருக்கும்போதுதான், அதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட முடியும். ஆண்கள் அதிகாலையில்தான் மிகவும் ரிலாக்ஸாகவும், உற்சகத்துடனும் இருக்கிறார்கள்.
அப்போது அவர்களின் செக்ஸ் உணர்வு அதிகமாக தூண்டப்படும். ஆனால், இதற்கு நேர்மாறாக பெண்கள் இருப்பார்கள்’’ என்றார். ‘‘காலையில் எழுந்திருக்கும் பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன.
வாசல் பெருக்கி கோலம் போடுவதில் தொடங்கும் பரபரப்பு அடுத்தடுத்து ரிலே ரேஸ் போல நீண்டு கொண்டே இருக்கும். இதனால் சதா டென்ஷனில் இருப்பர். அந்த நேரத்தில் எங்கிருந்து வரும் ரெமான்ஸ்?’’ என்கிறார் டாக்டர் பாவனா பர்மி.
இந்த முரண்பாடுதான் இல்லறம் இனிக்காமல் போவதற்கு முக்கிய காரணம். எனவே ஆண், பெண் இருபாலாரும் இதை புரிந்து கெண்டு அதிகாலையில் நேரம் ஒதுக்கினால் எல்லாமே அசத்தலாக இருக்கும் என்கிறார். மும்பை ஐ.ஐ.டி ஆஸ்பத்திரியின் சைக்காலஜி நிபுணர் டாக்டர் ராஜேந்திர பர்வே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment