Monday, March 7, 2011

கணவன் கைவிட்டதால் தெருவில் கையேந்தும் தமிழ்ச்செல்வி!


ஆண்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி வாழ்க்கையினை தொலைத்த பெண்கள் பற்றி தினம் தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன.
ஆனாலும் ஏமாறும் பெண்கள் ஏமாந்து கொணடுதான் இருக்கிறார்கள். கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் என்றால் மிகப் பிரபலம்.

பிச்சைக்காரர்களும் இங்கு பிரபலம் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்று குழந்தைகளுடன் ஒரு பெண் பிச்சையெடுக்கிறார் சிங்களத்தில் தான் பேசுவார் பெயரோ தமிழ்செல்வி. அம்மா அப்பா கிடையாது.

தமிழ் பெண்ணாக பிறந்தாலும் இவர் வளர்ந்தது கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் சிங்கள குடும்பத்தில். தனது பெற்றோர் தன்னை ஒரு சிங்கள குடும்பத்திற்கு காசுக்காக விற்றுவிட்டதாக குறிப்பிடுகிறார் தமிழ்செல்வி.

காதலித்த கணவனை வீட்டின் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் முடித்து கொழும்பு வந்தார். எனினும் மணாளன் ஏற்கனவே திருமணம் முடித்தவன். என்ன செய்வதென்று தெரியாது சமாளித்துக் கொண்டு வாழ்ந்தார்.

தினமும் மது அருந்தும் கணவன், ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் கூலி வேலை செய்து குடும்ப வண்டி ஓடியது. இந் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்; இந்த குடிமகன் தனது முன்னைய குடும்பத்தோடு இணைந்து கொண்டார்.

குழந்தைகளோடு அனாதையான தமிழ்செல்வி கூலி வேலையில் வரும் வருமானத்தில் குடும்பத்தை சமாளிக்க முடியாது என முடிவுசெய்து பிச்சை எடுக்கிறார்.

வாழக்கையில் தான் எதை தொலைத்தாலும் தன்னம்பிக்கையை தொலைக்கவில்லை எனக் குறிப்பிடும் தமிழ் செல்வி தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே தான் வாழ்வதாகவும் குறிப்பிடுகிறார்

No comments:

Post a Comment