Monday, March 7, 2011

டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார் ரஜினி!


இந்தியப் படங்களில் ஹை பட்ஜெட் படம் என்ற பெருமையை எந்திரன் படம் பெற்றது. படத்தின் பட்ஜெட் 165 கோடி. சன் பிக்சர்ஸ், ரஜினி, ஷங்கர், ரகுமான், ஐஸ்வர்யா ராய் என எல்லா அமசங்களுமே பிரம்மாண்டமாய் காட்சியளித்தது எந்திரன். எந்திரன் படத்தின் மொத்தக் கலெக்ஷன் 400கோடியை தாண்டியதாம். ( சன் டி.வியில் ஒளிபரப்பான இசை வெளியீடு, பிரபலங்களின் பேட்டிகள், எந்திரன் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான விளம்பர பணத்தை தவிர... ).


இதனால் எந்திரன் படத்தின் பார்ட் 2 எடுப்பதிலும் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. ரஜினியிடம் ஷங்கர் கதையம்சத்தை சொல்லிவிட்டாராம். கலாநிதிமாறனும் ரோபோ 2 விற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இருந்தாலும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிவரும் ராணா படம் முடியட்டும். அதற்கு பிறகு பார்க்கலாம் என்பது ரஜினியின் பதில்.


இதைப் பற்றி தெரிவித்த சன் பிக்சர்ஸின் சக்சேனா... சன் பிக்சர்ஸின் விளம்பரத்தால் தான் படங்கள் வெற்றிபெறுகின்றன என்று சொல்கிறார்கள். சமீபத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிடாத சில படங்கள் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. ஆடுகளத்துடன் வெளியான சிறுத்தை 35கோடி சம்பாதித்துள்ளது. ஆடுகளம் அவ்வளவு கலக்�ஷன் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. சன் பிக்சர்ஸ் வெளியீடு அல்லாத மதராசப்பட்டினம், மைனா, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்கள் எல்லாமே நல்ல ரிசட்டை கொடுத்திருக்கிறது. எங்கள் விளம்பரத்தால் மட்டுமே ஒரு படத்தை வெற்றிப்பெற செய்தோம் என்றால் அது எந்திரன் தான் என்றார்.

தொடர்ந்து சன் பிக்சர்ஸின் அடுத்தப் படங்களைப் பற்றி பேசிய அவர்... ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஜெயம் ரவி நடித்திருக்கும் எங்கேயும் காதல் படத்தையும் பார்த்தேன். அந்தப் படத்தையும் வெளியிட யோசனை உள்ளது. ஆனால் எந்திரனுக்கு பிறகு சன் பிக்சர்ஸின் நேரிடித் தயாரிப்பு ’எந்திரன் பார்ட் 2’ வாகத்தான் இருக்கும். அதைப் பற்றி ரஜினியிடம் பேசிவிட்டோம். ஷங்கரும் கதையுடன் ரெடியாக இருக்கிறார். கண்டிப்பாக எந்திரன் படத்தின் பட்ஜெட்டை எந்திரன் 2 தாண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு பிரம்மாண்டமான பட்ஜெட்டை தயார் செய்துவிட்டு எந்திரன் 2வின் அறிவிப்பு இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment