
இன்றைய திகதிக்கு 24 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் அநேகமாக பிரகாஷ் ராஜாகத்தான் இருப்பார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என முன்னணி மொழிப் படங்களில் நல்லவராக, வில்லனாக, நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து இந்திப் படம் ஒன்றில் அஜய் தேவ்கனுக்கு வில்லனாக நடிக்கிறார்.

ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தப் படம் தமிழில் வெளியான சிங்கம் படத்தின் ரீமேக். ஆனால் இந்திக்கேற்ப க்ளைமாக்ஸ் உள்பட பல விஷயங்களை மாற்றியுள்ளார்களாம்.

தமிழ்ப் படத்திலும் இந்த வேடத்தை பிரகாஷ் ராஜ்தான் செய்திருந்தார். அதில் இவர் பெயர் மயில்வாகனன். இந்தியில் இந்தப் பெயரை மயில்பாய் என்று மாற்றியுள்ளார்களாம். கோவாவில் கட்டப் பஞ்சாயத்து செய்பவராக வருகிறாராம்.
காஜல் அகர்வால் இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார். இதுதவிர இன்னும் இரண்டு இந்திப் படங்களிலும் நடிக்க அட்வான்ஸ் வாங்கியுள்ளாராம் பிரகாஷ் ராஜ்.
No comments:
Post a Comment