நடிகர் சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா. இவர் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி என்ஜினியர் கிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.
இந்த திருமணத்திற்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஸ்ரீஜா தமது தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது.
எனவே எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தரவேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் அப்போது ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது இவர்களுக்கு 2 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஸ்ரீஜா ஐதராபாத்தில் உள்ள பஷீர்பாக் போலீஸ் நிலையத்தில் கணவர் கிரிஷ் பரத்வாஜ், மாமனார், மாமியார் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார்.
அதில் எனது கணவர், மாமனார், மாமியார் 3 பேரும் திருமணம் முடிந்த 6 மாதங்களிலேயே என்னிடம் வரதட்சணை கேட்க தொடங்கி விட்டனர். இது வரை நான் பல கோடி ரூபாய் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்.
ஆனாலும் அவர்கள் திருப்தி அடையவில்லை. எனது கணவர் என்ஜீனியரிங் படித்திருந்தாலும் எந்த வேலைக்கும் போக வில்லை. அவர்கள் என்னிடம் உனது தந்தையின் சொத்துக்களில் உனக்கு சேரவேண்டிய சொத்தை பிரித்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர்.
ஆனால் நான் இதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் முதல் உன் தந்தையிடம் சென்று ரூ. 1 1/2 கோடி வாங்கி வா என்று கூறி 3 பேரும் என்னை சித்ரவதை செய்கின்றனர். எனது கணவர் தினமும் குடித்துதுவிட்டு அடித்து உதைத்தார்.
இந்த சித்ரவதையை பொறுத்துக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வந்து விட்டேன். வரதட்சணை கேட்டு என்னை சித்ரவதை செய்த 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பஷீர்பாக் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீஜாவின் கணவரிடம் நேற்று விசாரணை நடத்தினர். இன்று மாமனார்-மாமியாரிடம் விசாரித்தனர். ஸ்ரீஜாவின் வரதட்சணை புகார் பற்றி சிரஞ்சீவி குடும்பத்தினர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்
No comments:
Post a Comment