
கேள்வி: என் கம்ப்யூட்டரில் டாஸ்க் பார் திடீரென மேலாகச் சென்று விட்டது. கர்சரைக் கொண்டு சென்று இழுத்தும் நகர மறுக்கிறது. என்ன செய்யலாம்?
பதில்: கம்ப்யூட்டர் மானிட்டரில் வழக்கமாக டாஸ்க் பார் அடிப்பாகத்தில் தான் தெரியும். ஆனால் சில வேளைகளில் இது மேலாக அல்லது இடது வலது பக்கங்களில் சென்று அமர்ந்து விடும்.
நாம் எப்போதாவது விளைவு என்ன என்று தெரியாமல் மவுஸின் முனையைப் பிடித்தவாறு இந்த டாஸ்க் பாரில் செயல்பட்டிருப்போம். இதனை மீண்டும் அடிப்பாகத்தில் வைத்திட மீண்டும் மவுஸ் கர்சரை வைத்து கீழாக இழுத்து அமைக்கவும்.
நகராமல் இருந்தால் டாஸ்க் பாரில் வலது பக்கமாகக் கிளிக் செய்திடவும். அதில் வரும் மெனுவில் Lock the Taskbar என்ற இடத்தில் டிக் அடையாளம் உள்ளதா என்று பாருங்கள்.
இருந்தால் அதனைக் கிளிக் செய்து எடுத்து விடுங்கள். இனி டாஸ்க் பாரை நகர்த்தலாம்.
அடிப்பாகத்திற்கு வந்தவுடன் மீண்டும் மெனுவில் Lock the Taskbar என்ற இடத்தில் கிளிக் செய்து லாக் செய்துவிடுங்கள். இனி நகராது
சும்மா போனா எப்படி ???ஒரு ஓட்டு பொட்டுட்டு போங்க.................
No comments:
Post a Comment