
பார்ப்பவர்களை வசீகரிக்கும் இந்த அழகிய பெண் உண்மையிலேயே ஒரு பிறவிப் பெண்ணல்ல.
இவர் 1984ம் ஆண்டு பிறந்தவர். பிறக்கும்போது இவர் ஒரு ஆண். 17 வயது முதல் பால் மாற்றம் செய்து பெண்ணாக மாறியவர்.
பெயர் நொங்பே. உயரம் 171 செ.மீ. உடல் அளவு 33-24-36, எடை 48 கிலோ. ஆரம்பப் பாடசாலையில் இருக்கும் போதே இவரின் பெண்மைத் தன்மைகள் வெளிப்பட ஆரம்பித்து விட்டன.
அத்தோடு பெண்ணாக மாற வேண்டும் என்ற கனவும், ஆசையும் இவருக்குள் துளிர்விட ஆரம்பித்து விட்டன. பெற்றோர் எவ்வளவோ முயன்றும் அதை தடுக்க முடியவில்லை.
காலப் போக்கில் பல டாக்டர்களைச் சந்தித்துப்பேசி அவர்களின் ஆலோசனைக்கமைய 17 வயதில் பால் மாற்ற சத்திர சிகிச்சை செய்து கொண்டார்.
இந்த பால்மாற்ற சத்திர சிகிச்சை வேதனை மிக்கது இருந்தாலும் பெண்ணாக மாற வேண்டும் என்ற கனவை நனவாக்க அவற்றைப் பொறுத்துக் கொண்டதாகக் கூறுகின்றார்

No comments:
Post a Comment