பெண்களைத் தகாத முறையில் படம் எடுத்துச் சேமிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களின் மறைவான பகுதிகளை தனது துல்லியமான டிஜிடல் கமெராவினால் புகைப்படம் எடுப்பது அவரது நீண்ட கால வழக்கமாக இருந்துள்ளது. அவரது வீட்டில் இருந்த கணனியில் அவ்வாறான ஆயிரம் புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன.
அதற்கு மேலதிகமாக அவுஸ்திரேலியப் பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது அவரது கணனியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் வீடியோ காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் நன்கு கல்வி கற்ற ஒருவர் என்றும், அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகமொன்றில் அவர் பணியாற்றி வருவதும் பொலிஸ் விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயினும் அவர் எதற்காக இவ்வாறான செயல்களில் ஈடுபட்டார் என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், அது குறித்து அவர் வாயே திறக்கவில்லையாம்.
No comments:
Post a Comment