Thursday, February 24, 2011

தமிழக மீனவர் பிரச்சனையில் திமுகவின் அக்கறை ?- மெல்ல வெளிவந்த பூனைக்குட்டி


ஐநூறுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட போதிலெல்லாம், அமைதியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியும், கண்டனமும் தெரிவித்து வந்த தமிழக அரசின்

அமைதி கண்டு. அடிமட்டத் தொண்டனுக்கே சிலிர்பை விட சினம்தான் வந்தது. ஆனால் ஆளுந்தரப்பான திமுக; அன்மையில் யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் சுற்றி வளைக்கப்பட்ட போது, என்றுமில்லாதவாறு பொங்கி எழுந்ததைப் பார்த்த போது திமுகத் தொண்டனுக்கே சற்று ஆச்சரியமாகத்தான் போய்விட்டது. ஆனாலும் அவனும் ஆஹா.. தேர்தல் நேரம். தலைவர் முழிச்சுக்கிட்டார். நாம சும்மா இருக்கலாமா எனத் துள்ளி எழுந்தான் போராட்ட களத்துக்கு.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடப் புறப்பட்டார்கள். தலைவரின் மகள் போராட்டத்துக்குத் தலைமைதாங்க, ஆர்பரித்தனர் திமுகவினர். மறிந்தவின் கொடும்பாவியை யார் எரிந்தாலும் வெகுண்டெழுந்து பிடுங்கி எறியும் தமிழகக் காவல்துறை தலைகவிழ்ந்து நிற்க, திமுகவினர் எரித்தனர். ஏனென்றால் அவ்வளவு அராஜகம் நடக்கிறதாம் மஹிந்த ஆட்சியில். அது இப்போதுதான் தெரிந்ததாம் இவர்களுக்கு.

முற்றுகைப் போராட்டம் தொடங்கிய இடத்திலேயே காவல்துறையால் முடித்து வைக்கப்படுகிறது. தயாராக வந்திருந்த காவல்துறை வாகனங்களில், தலைவரின் மகள் உட்பட, அனைவரும் முண்டியடித்து ஏறிக்கொள்கின்றார்கள்.(கைதாகின்றார்களாம்..) அன்றைய காட்சி அத்துடன் முடிந்தது. அடுத்து வரும் இரு நாட்களில், மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தில், இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன.

வழமையான நாடகத்தில் இறுதிக்காட்சி மட்டும் இன்னமும் நடைபெறவில்லை... அதுதான் விடுதலைக்கு வித்திட்ட தலைவனுக்கு பாராட்டுவிழாவும், வாழ்த்துச் சுவரொட்டியும். தேர்தல் வருதுல்ல..தேவ இருக்கும்னு தொண்டனும் அமைதியாயிட்டான். ஆனால் இப்போ போராட்டத்தின் பின்னணிக் காரணம் முன்னணிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்திச் சேவை. அச் செய்தி உள்ளடக்கத்துடன் கூடிய விமர்சனத்தை, ஊடகவியலாளர் TSS மணி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

பிப்ரவரி மாதம் இருபத்தி மூன்றாம் நாள் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏடு ஒரு செய்தியை அம்பலப்படுத்தி உள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டை குலுக்கிய நிகழ்ச்சியான நூற்றாறு நாகப்பட்டினம் மீனவர்களை யாழ்ப்பாணத்தில் பிடித்துவைத்தது பற்றிய செய்தி அது. ஆனால் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி ஒவ்வொருவரும் ஏன் இப்படி ஈழத்தமிழ் மீனவர்கள் மத்தியிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் மத்தியிலும் புதிய முரண்பாடு தோன்றுகிறது என்று வியந்து கொண்டிருக்கும் போது, அதற்கான அடிப்படை எப்படி திட்டமிடப்பட்டது என்று அந்த ஆங்கில நாளேட்டு செய்தி விளக்குகிறது.

தடை செய்யப்ப்பட்ட மீன்பிடி வலைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் சிலர் பயன்படுத்துவதும், அதை ஈழ மீனவர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்ததும், அந்த முரண்பட்டு இந்த அளவுக்கு வெடித்ததா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. இழுவலை பயன்படுத்தி வரும் இந்திய மீனவர்களும், இழுவலையை பயன்படுத்தாத ஈழ மீனவர்களும், சந்திக்கும் முரண்பட்டு இவ்வளவு தூரம் கொண்டு சென்றதா என்றும் விவாதித்தோர் உண்டு.

ஆனால் அதற்குபிறகு, ஈழ மீனவர்களை வைத்து இந்திய தூதரக வாயிலில் போராட்டம் நடத்தியவர்கள் அரசியல் சூழ்ச்சிகள் செய்பவர்கள் என்று புரிய வேண்டி வந்தது. இதற்காகவே அங்கு அமைச்சராக இருக்கும் டக்லஸ் தேவானந்தா செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. அப்படியானால் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை பயன்படுத்தி டக்லஸ் நுழைந்துவிட்டார் என்றும், அதுவே அவர் ராஜபக்சேவிற்கு செய்யும் விசுவாச வேலை என்றும் ம்ட்டுமே எண்ண வேண்டியிருந்தது.

இப்போது அதையும் தாண்டி கதை செல்கிறது. அதாவது அங்கே யாழ் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்க இழுவளைகளுடன் கூடிய படகுகளை அனுப்பியது, அந்த படகுகளின் முதலாளி தி.மு.க.எம்.பி. டி.ஆர்.பாலு என்று தெரிய வந்துள்ளது. இது பயங்கர அதிர்ச்சி செய்தியாகும்.. ஏன் என்றால் தற்செயலாகவோ, அல்லது இயற்கையில் இருக்கின்ற முரண்பாட்டு காரணமாகவோ எழுந்த ஒரு தகராறை சிங்கள அரசும், அமைச்சரான டக்ளசும் சேர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களுக்கும், ஈழத்து மீனவர்களுக்கும் உள்ள பகையாக ஆக பார்க்கிறார்கள் என்பதே நமது புரிதலாக இருந்த நேரத்தில், அந்த நாடகத்தில் தி.மு.க.தலைமையின் விசுவாச எம்.பி உள்ளே நுழைந்திருப்பது என்பது பெரும் அதிர்ச்சிதானே
இந்த நாடகம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று இப்போது தெரிந்துவிட்டது. அதுமாத்திரம் இன்றி இந்த நாடகத்தில் இந்திய அரசும், தமிழக அரசியல்வாதிகளும் ஈடுபட்டிருப்பதும் இப்போது வெளியே வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக இதுவரை கவலைப்படாமல் வெறும் கடிதம் எழுதுவதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் கொலைகளுக்கு வருத்தம் தெரிவித்து வந்த ஒரு முதுபெரும் அரசியல்வாதியான கலைஞர் கருணாநிதி இப்போது மட்டும் ஏன் தெருவுக்கு வந்து போராட தன் மகள் உட்பட பல்லாயிரக்கணக்கான கட்சி தொண்டர்களை இறக்கிவிட்டார் என்ற கேள்வி பதில் கிடைக்காமலேயே இருந்துவந்தது. இப்போது அதற்கும் பதில் கிடைத்திவுட்டது. அவரே எழுதி, அவரே நடித்த நாடகத்தில் கதாபாத்திரங்களாக பாலுவும், கனிமொழியும், நடித்திருக்கிறார்கள் என்பதும், இலங்கைத் தீவிலிருந்து அந்த நாடகத்தில் நடித்தவர் இலங்கை அமைச்சர் எனபதும் புரிந்துவிட்டது.

ராஜபக்சே என்ற அரச தலைவரின் பதவியை காப்பாற்ற டக்லஸ் என்ற அவரது நண்பரும், கருணாநிதி என்ற இன்னொரு நண்பரும் ஏற்பாடு செய்த நாடகமா என்று கேள்வி எழுந்துள்ளது. என்னதான் ராஜபக்சேவிடம் பல வெகுமதிகளை பெற்றாலும், டக்ளசும், கருணாநிதியும் அப்படி தங்களை இழந்து அல்லது தாங்கள் அமபலப்பட்டு நண்பே ராஜபக்செவிர்க்காக இத்தகைய இழி செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஏன் என்றால் இருவருமே அரசியலில் பழம் தின்று கோட்டையை போட்டவர்கள்.தங்களுக்கு லாபம் இல்லாமல், தங்காளின் நலன் முதன்மையாக இல்லாமல் இந்த இருவருமே எந்த தொழிலிலும், அல்லது நாடகத்திலும் ஈடுபட மாட்டார்கள். அப்படி இருக்கும் போது டக்ளசுக்கு இதில் என்ன பலன்? அவர் மீது தமிழ்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள பிடி வாரண்டு ரத்து செய்யப்படவேண்டும். அதற்கு முதல்வர் கருணாநிதியின் தயவு வேண்டும். அதற்காக அவர் கருணாவின் எந்த நாடகத்திற்கும் ஒத்துழைப்பு கொடுக்க தயார் என்பது புரிகிறது.

அப்படியானால் தமிழக முதல்வர்தான் நாடகத்தின் கதை-வசன கர்த்தாவா? எதற்க்காக அப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இரு நாட்டு தமிழ் மீனவர்கள் மத்தியில் முதல்வர் விளையாட வேண்டும்? சமீபத்தில் தமிழக கரையோரம் கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதும், அதை ஒட்டி தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோபம் கூடிவருவதும் முதல்வர் கருணாவிற்கு தெரியவந்தது. அதற்கு எண்ண வழி என்று டில்லியை அவர் கேட்டால் அவர்கள் கீறல் விழுந்த இசைத்தட்டு போல, கடலிலே எல்லையை கடக்க கூடாது என்று மட்டுமே கூறிவருகின்றனர். கடலிலே எல்லை கிடையாது என்பதும், குறிப்பாக மீன்வர்களுக்கு கடலில் மீன் பிடிக்க எல்லை கிடையாது என்பதும் பகிரங்கமாக மீனவர்கள் அமைப்புகளால் முன்வைக்கப்படுவதும் அந்த உண்மை தெரிந்தால் இந்திய அரசின் வாதம் அம்பலமாகும் என்பதால் அந்த உண்மையை உடைக்க வேண்டும் என்றும் மத்திய-மாநில உளவுத்துறைகள் எண்ணின.

அதற்கு அவர்கள் இருநாட்டு மீனவர்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளை பயன்படுத்த திட்டமிட்டனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் இருநாட்டு மீனவர்களும் இணைந்து, கடலில் இருநாட்டு மீனவரும் இருநாட்டு எல்லைகளிலும் மீன் பிடிக்க உரிமை உண்டு என்று அறிவித்தனர். இன்றுவரை அறிவித்துக்கொண்டும் இருக்கின்றனர். அவர்களுக்குள் சமாதானமாக போய்விட்டால் இரு நாட்டு அரசுகளுக்கும் தலைமை ஆதிக்கம் இல்லாமல் போய்விடும். அதனால்தான் அந்த வேறுபாடுகளை பயன்படுத்த அவர்களுக்குள் உள்ள ஒப்பந்தமான இழுவலையுடன் யாழ் கரைக்கு வரவேண்டாம் எனபதை மீற ஒரு திட்டம் போடப்பட்டது. அதை நிறைவேற்ற டி.ஆர்.பாலுவின் படகுகள் முதலாளியின் கட்டளையுடன் பயன்படுத்தப்பட்டன என்பதே இப்போது வடக்கு இலங்கையின் பாதிரியார் வெளியிட்டிருக்கும் தகவல்.

டி.ஆர்.பாலு என்பவர் சிறிய கப்பல்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடித்து அதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு ஏற்கனவே துரோகம் இழைத்து வருபவர். அந்த மனிதரின் படகுகள் சில நாகப்பட்டினம் பகுதியில் இந்த வேலையில் ஈடுபட்டது இப்போது அம்பலமாகி உள்ளது. அதனால்தான் தி.மு.க.தலைமை திடீரென அந்த பிரச்சனையில், பதினாலு மணி நேரத்திற்குள் பல்லாயிரம் மக்களை வாகனங்கள் ஏற்பாடு செய்து அழைத்துவந்து, இலங்கை எதிர்ப்பு என்பதாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது என்பதும் இப்போது தெரிந்துவிட்டது.

தமிழக மீனவர் பிரச்சனையில் திமுகவின் ஆர்வம் என்பதன் பின்னுள்ள பூனைக்குட்டி இப்படியாக வெளியே வர..அசந்து போயிருக்கிறான், போராட்டத்துக்குப் போன திமுகவின் அடிமட்டத் தொண்டன். என்னப்பா.. என்றால், ஏன் தலைவர் எழுதிற படங்கள்ல மட்டும் இப்புடி ஒன்னும் இல்ல..என அங்கலாய்கின்றான் பாவம்...

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏட்டின் செய்தி

DMK behind abduction of TN fishermen: Priest

P K Balachandran

Express News Service

COLOMBO: The recent rounding up of 136 Tamil Nadu fishermen in Sri Lankan waters off Point Pedro and Maadakal had not served as a deterrent to intrusions, according to Rev Fr Ananda Kumar, the parish priest of Maadakal, who is working closely with the fishing community there."On Monday, for example, 50 trawlers were sighted off Maadakal itself," he pointed out. The priest said he did not approve of Jaffna fishermen taking the law into their hands and abducting TN fishermen. "When they came to me saying that they had forced the TNfishers to come ashore, I castigated and asked them to promptly hand the captured men over to the police," he said. Abductions politically instigated Asked if the Lankan navy had instigated or aided the Jaffna fishermen in their adventure, Fr Ananda Kumar said the navy had no part in it, but a powerful Jaffna political leader and the DMK had been behind the moves. He declined to name the Jaffna leader."On the TN side, the incidents helped the DMK beat its political rivals and emerge as the champion of fishermen ahead of the State Assembly elections, and on the Jaffna side, they helped the political leader cosy up to the DMK government.""This leader needs the help of the DMK government to face a long pending criminal case against him in TN." "The fishermen on both sides had become pawns in the hands of politicians," Fr Ananda Kumar said.


நன்றி
courtesy: http://expressbuzz.com
நன்றி
http://ww5.4tamilmedia.com/index.php/special/news-review/3057-2011-02-24-09-25-45

No comments:

Post a Comment