Saturday, February 19, 2011

5000 புலிகள் காடுகளில் உள்ள முகாம்களில் உள்ளனர்.


விடுதலைப் புலிகளோடு யுத்தம் நிறைவடைந்து 21 மாதங்கள் ஆகியுள்ளபோதும், சுமார் 5000 விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தொடர்ந்தும் கைதிகளாக உள்ளதாக ஜ.நாவுக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புரூனே தெரிவித்துள்ளார்.

வட கிழக்கில் உள்ள சில அடந்த காடுகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் இவர்கள் ரகசியமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விடங்களைச் சென்று பார்வையிட ஜ.நா முதற்கொண்டு பல தொண்டர் அமைப்புகளுக்கு இலங்கை தடைவிதித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 5000 விடுதலைப் புலிகளும், அவ்வியக்கத்தின் கடும் விசுவாசிகள் என இலங்கை குற்றஞ்சாட்டியுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகள் வன்னியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவேளை எவ்வாறு காடுகளில் தமது முகாம்களை அமைத்து வைத்திருந்தார்களோ அதேபோல இலங்கை இராணுவமும் அந்த அடர்ந்த காடுகளில் தமது முகாம்களை அமைத்துள்ளதாக சமீபத்தில் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் யுக்திகளைக் கையாண்டு இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

பொதுமக்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்ட இடங்களில் இந்த முகாம்கள் இருப்பதாகவும் இங்கே புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் விடுதலை தொடர்பாக சர்வதேச சமூகம் தொடர்ந்தும் மௌனம் சாதித்துவருகின்றது.

No comments:

Post a Comment