இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஒரே மேடையில்


கடந்த சென்னை நேரு ஸ்டேடியம், இசையாலும் ரசிகர்களாலும் நிரம்பி வழிந்தது. திரை இசைக் கலைஞர்கள் சங்கம் துவங்கிய 50 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவும், வேலைவாய்ப்பு இல்லாத இசைக் கலைஞர்களுக்கு நல நிதி திரட்டவும் நடந்த இசை விழாவில், இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரே மேடையில் தோன்றியது நிகழ்ச்சியின் உச்சபட்ச மகிழ்ச்சி நிகழ்வு!

விழாவின் தொகுப்பாளர்கள் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பின்னணிப் பாடகி மதுமிதா. கூலியே கிடைக்காமல் திரை இசைக் கலைஞர்கள் கஷ்டப்பட்டதையும், 1960-ம் ஆண்டு ஜி.வி.கிருஷ்ணமூர்த்தியால் ஆரம்பிக்கப்பட்ட திரை இசைக்கலைஞர்கள் சங்கம் எப்படி படிப்படியாக சினிமாவில் வளர்ந்தது என்பதையும் தெளிவாக விளக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.
விழியே கதை எழுது�� என்று கே.ஜே.யேசுதாஸ் கண்கள் மூடிப் பாட ஆரம்பித்தபோது, ரசிகர்களிடம் உற்சாக ஆரவாரம். �எதை சம்பாதிச்சாலும் அது நிலைக்காது. சந்தோஷத்தைச் சம்பாதிங்க. அதுதான் கடைசி வரைக்கும் இருக்கும். அடுத்தவங்களுக்கு நல்லது பண்ணா� சந்தோஷம் தானா வரும்!� என்று நல்ல விஷயம் சொல்லி விடைபெற்றார் யேசுதாஸ்!

பாடகர்களில் சிலர் லேப்டாப்பில் பாடல் வரிகளைப் பார்த்துப் பாட, சிலர்மனப் பாடமாகப் பாடினார்கள். பி.சுசீலா மேடை ஏறியபோது, பழைய பச்சை டைரி ஒன்றைப் பார்த்து �அவளுக்கென்று ஓர் மனம்�� என்ற பாடலைப் பாடினார். �நான் இதுவரை இந்தப் பாட்டை மேடையில் பாடினதே இல்லை. என் குடும்ப உறுப்பினர்களுக்காகப் பாடினேன்� என்பது சுசீலாம்மாவின் பஞ்ச்!

�டெக்னாலஜி வளர்ந்த பின்னாடி திரை இசைக் கலைஞர்களுக்கு வேலையே இல்லாமப்போச்சு. அதை நினைச்சு நான் அப்பப்போ வருத்தப்படுவேன். பொன் விழா சமயத்தில் அவங்களை ஞாபகம்வெச்சு அவங்களுக்காக நிதி திரட்ட ஏற்பாடு பண்ணியிருக்கீங்க. ரொம்ப நல்ல விஷயம்� என்று விழா ஏற்பாட்டாளர்களைப் பாராட்டிவிட்டு, �சுந்தரி கண்ணால் ஒரு சேதி�� என்று பாடிச்சென்றார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

இதுவரை இல்லாத உணர்விது� என்று ஆரம்பித்து �பெண்ணை நம்பாதே� என்று நாலு வரி பாடியதோடு நிறுத்திக்கொண்டார் யுவன். �லேடீஸைக் காலி பண்ணிட்டீங்களே?� என்று மதுமிதா கேட்க, ரசிகர்கள் பக்கம் திரும்பிய யுவன், �இது சினிமாவுக்கு மட்டும்தான்!� என்று சமாதானம் சொல்லிக் கீழே இறங்கினார்!

�மைனா� படத்தின் �ஜிங்ஜிக்கா� பாடலை இமான் பாட, குடும்பப் பெண்களும், குழந்தைகளும் கூச்சம் மறந்து தோள் குலுக்கி ஆட்டம் போட்டது விசேஷ விஷவல்!

பியானோவும் டிரம்ஸும் மேடை ஏற� பின்னாலேயே வந்தார் ரஹ்மான். �தப்பா எடுத்துக்கா தீங்க� ஸோலோ பெர்ஃபார்மன்ஸ்தான் பண்ணப்போறேன்!� என்றவர், பியானோவை வாசிக்கத் துவங்கினார். அந்நேரம் பார்த்து மைக் மக்கர் பண்ண, சில நிமிடங்களில் சரிசெய்தார்கள். �ஒரு சின்னப் போட்டி. 10 வருஷத்தில் நான் இசையமைச்ச பாடல்களை வாசிக்கப் போறேன். உன்னி கிருஷ்ணன் அந்தப் பாடல்களை பாடுறதுக்கு முன்னாடி நீங்க கண்டுபிடிங்க பார்க்கலாம்� என்று இசை வாசித்தார். �சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது��, �என்னவளே என்னவளே�� என்று உன்னி மேனன் பாடிக்கொண்டு இருக்கும்போதே, ஆடியோ சிஸ்டம் சொதப்ப, ரஹ்மான் முகத்தில் கோபம் கலந்த இறுக்கம். சட்டென்று மைக் எடுத்தவர், �மன்னிப்பாயா� பாடலில் வரும் �கண்ணே தடுமாறி நடந்தேன்� நூலில் ஆடும் மழையாகிப் போனேன்!� என்ற வரிகளை உச் சஸ்தாயியில் பாடிவிட்டுக் கீழே இறங்கிவிட்டார். அந்த நேரம் சரியாக இளைய ராஜா அரங்கத்துக்குள் வர, அவருக்குக் கை கொடுத்துவிட்டு, ராஜா அருகிலேயே அமர்ந்தார் ரஹ்மான்!

மேடை ஏறிய இளையராஜா, �50 வருஷத்துக்கு முன் இந்த சங்கம் ஆரம்பிச்சப்போ, திரை இசைக் கலைஞர்களுக்கு நல்ல மரியாதை கிடைச்சது. �மர்ம யோகி� படத்தில் எம்.ஜி.ஆருக்கு சம்பளம் 30 ரூபா. இசையமைப்பாளர் விஸ்வநாதனுக்கு சம்பளம் 10 ரூபா. அப்போ ட்ரூப்பில் சித்தார் வாசிச்சுட்டு இருந்த ஜீனாலால் சேட்டுக்கு சம்பளம் 100 ரூபா. எம்.ஜி.ஆரைவிடவும் அதிகம் சம்பாதிச்ச வங்க திரை இசைக் கலைஞர்கள். ஆனா, அவங்க நிலைமை இப்போ ரொம்பப் பரிதாபமா இருக்கு. நான் ட்ரூப்புக்கு வந்தப்போ, எனக்கு கிடாரே வாசிக்கத் தெரியாது. அப்போ துரைபோகம்னு ஒரு டைரக்டர் என்னை கிடார் வாசிக்கச் சொன்னார். (ரஹ்மானைப் பார்த்து) �உனக்குத் தெரியாது ரஹ்மான். உன் அப்பா சேகர்தான் என்னை அப்போ கிடார் வாசிப்பதில் இருந்து காப்பாத்துவார்!� என்றபோது, ஆமோதிப்பாகத் தலையசைத்துக் கேட்டுக்கொண்டார் ரஹ்மான்!
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment