இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய இந்த கொலைக்கு முதல் சந்தேக நபர் யோஷித்த ராஜபக்ச என உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான யேபஷித்த ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக தகவல் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
இது தொடர்பில் அரசாங்கத்தினால் விசாரணை அறிக்கை பல வருடங்களின் பின்னர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வழங்கப்பட்டாலும், நிலைமைக்கமைய உறுதியான தகவல்களை வெளியிட முடியவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தன. எனினும் கடந்த காலங்களில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டாலும், இது தொடர்பில் எவ்வித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் இந்த கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை தொடர்பில் சட்ட வைத்தியரினால் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், காபன் மொனக்சைட் தாஜுடீனின் உடலில் சேர்ந்தமையினாலே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டன.
எனினும் இந்த கொலையுடன் தொடர்புடைய யோஷித்த ராஜபக்ச உட்பட பலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012 மே மாதம் 17ஆம் திகதி வசீம் தாஜுடீன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment