Monday, August 5, 2013

டைரக்டர் சேரன் ‘விரட்டி விரட்டி’ அடித்த சந்துரு யார்? : இதுவரை வெளியில் வராத ‘அதிர்ச்சி’ தரும் விரிவான உண்மைத் தகவல்கள்!

டைரக்டர் சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் தான் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் விறுவிறுப்பான பேச்சாக இருக்கிறது. அவர் காதலித்து வரும் சந்துரு என்பவர் தமிழ்சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டர் என்றும், டான்ஸர் என்றும், எம்.பி.ஏ பட்டதாரி என்றும் ஆளாளுக்கு ஒவ்வொரு தகவல்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர் யார்..? அவரின் குடும்பப் பின்னணி என்ன..? என்பது பற்றிய கேள்விகளுக்கு பதில் தேட நாம் விசாரித்தபோது அதிர்ச்சி தரும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இதோ அவரை பற்றிய விரிவான தகவல்கள் : சந்துரு என்கின்ற சந்திரசேகரன் தமிழ்சினிமாவில் எந்த டைரக்டரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை, அவருடைய அப்பா சினிமாவில் சில காலம் வேலை பார்த்தவர். இவரது அம்மா பத்மா ஆந்திராவை சேர்ந்தவர். சந்துருவின் அப்பாவும், அம்மாவும் சினிமாத்துறையிலேயே இருந்ததால் அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் இருவருமே கலப்பு திருமணம் செய்துகொண்டனர். தற்போது சந்துருவின் அம்மா ஒரு இருதய நோயாளியாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். சந்துருவின் அக்கா கெளரிக்கு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க பிரமுகர் சீனிக்கட்டியின் மச்சானான முகம்மது இலியாஸ் என்பவரோடு 8 வருடங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு, இலியாஸை ரகசிய திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி இருந்திருக்கிறார். ஆனால் ஏன் ரகசிய திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டால் இலியாஸுக்கு கெளரி முதல் மனைவி அல்ல. முதல் மனைவி உயிரோடு இருந்தபோதே அவருக்கு இரண்டாவதாக வாக்கப்பட்டவர் தான் சந்துருவின் அக்கா கெளரி. சந்துருவும், அவருடைய அக்கா கெளரியும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அன்பு நகரில் 7 வருடங்கள் இருந்திருக்கின்றனர். இலியாஸுக்கு சொந்தமான பொன்னி ஃபில்லிங் ஸ்டேஷன் என்ற பெட்ரோல் பங்க்கை இவர்கள் தான் நடத்தி வந்துள்ளனர். ஒருநிலையில் இலியாஸின் முதல் மனைவி, சந்துருவின் அக்கா கெளரி செய்து கொண்ட சட்டவிரோத திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கெளரி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் சந்துரு, அவருடைய அக்கா கெளரி, தாய் பத்மா உள்ளிட்ட அனைவரும் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்கள். இந்நிலையில் கெளரிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அதன்பிறகு, சொத்தை பிரித்து தரச்சொல்லி இலியாஸை கெளரி கட்டாயப்படுத்த, கெளரியின் குணம் அறிந்த இலியாஸ், தர மறுத்திருக்கிறார். இதனால் டென்ஷனான கெளரி, இலியாஸ் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், தன்னிடம் இருந்த ஏராளமான நகைகளை பிடுங்கிக் கொண்டதாகவும் இலியாஸ் மீது போலீஸில் போலியாக புகார் கொடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த இலியாஸின் உறவினர்கள் கெளரி குடும்பத்தினரை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு சிங்கப்பூர் சென்ற இலியாஸ் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். உடனே, தன்னையும் இலியாஸின் சொத்துக்கு வாரிசாக ஏற்க வேண்டும் என்று உச்சிப்புளி முஸ்லிம் ஜமாத்தில் கெளரி புகார் செய்தார். ஜமாத் பிரமுகர்கள் விஷயத்தை ஆராய்ந்து, இஸ்லாமியர்கள் பின்பற்றும் தொழுகை, இஸ்லாத்தை தழுவிய பெண்கள் செய்ய வேண்டிய மத விஷயங்கள் உட்பட எந்த காரியங்களையும் கெளரி செய்யாமல் இருந்ததைக் கண்டித்தும், கெளரி இலியாஸை இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்யவில்லை என்பதை கூறியும் கெளரியின் புகாரை புறக்கணித்துள்ளனர். வேறுவழியில்லாத நிலையில் கெளரி, தன் தம்பி சந்துருவுடன் மீண்டும் சென்னையில் குடியேறினார். அதன்பின், சென்னையில் கெளரி மீண்டும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சந்துரு, தன்னுடைய 18 வயதில் அண்ணாமலை நகரில் இருந்த ஒரு முஸ்லிம் பெண்ணில் பின்னால் சுற்றியிருக்கிறார். இது தெரிந்து, அங்குள்ள கன்னார் தெரு முஸ்லிம் ஜமாத்தார்கள் சந்துருவை எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் நடன குழுக்களில் ஆடி வந்திருக்கிறார் சந்துரு. அப்படித்தான் கலைஞர் டிவியில் கலா மாஸ்டர் நடத்திய ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியிலும் பங்குபெறும் வாய்ப்பை பெற்று நடனம் ஆடி பரிசு வாங்கியிருக்கிறார். மேலும் சந்துரு 10-ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாராம். மற்றபடி மீடியாக்களில் வருவதுபோல அவர் எம்.பி.ஏ. பட்டதாரி என்பதற்கான ஆதாரமோ, சினிமாவில் அவர் உதவி இயக்குனராக வேலை செய்தார் என்பதற்கான ஆதாரமோ இல்லவே இல்லை. மானாட மயிலாட நிகழ்ச்சியில் கிடைத்த பெயரை வைத்து பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்திருக்கிறார் சந்துரு. அப்படித்தான் ஒரு கலைநிகழ்ச்சியில் தாமினியை சந்தித்து உண்மையாக காதலிப்பது போல நடித்து அந்தப்பெண்ணை மடக்கியிருக்கிறார். இப்படித்தான் இந்த சந்துரு என்பவரின் வாழ்க்கைப் பின்னணி இருந்து வந்திருக்கிறது. இந்த விசயங்களை முன்னிறுத்தி தான் தன் மகள் சந்துருவை காதலிப்பதை எதிர்த்து வருவதாய் இயக்குநர் சேரன் தெரிவிக்கிறார். - See more at: http://cinemaulakam.com/view-id-TXprME1R.html#sthash.J0amdSy9.dpuf

No comments:

Post a Comment