Sunday, January 29, 2012

சமாதான தூதர் சொல்ஹெய்ம் மீது கொலையாளியை ஏவிய சிங்களவர்!

இலங்கை அரசு – தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் விசேட சமாதான தூதுவராக செயல்பட்டு வந்தபோது நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்முக்கு சிங்கள கடும்போக்காளர்களால் பாரிய உயிராபத்து ஏற்பட்டு இருக்கின்றது. நோர்வேயின் பிரதான புலனாய்வு அமைப்பு இந்நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வந்து உள்ளது. எரிக் சொல்ஹெய்முக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்து வந்திருக்கின்றார் விமர்சகர் Falk Rune Rovik. இவர் ஒரு நோர்வே பிரஜை. படுகொலைக் குற்றத்துக்காக 1997 இல் சிறையில் போடப்பட்டவர். மன நல வள நிலையம் ஒன்றில் 10 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டார். இவர் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துகின்ற நோர்வேயின் முயற்சிக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வந்திருக்கின்றார். இந்நிலையில் இவரை மிகவும் ஒரு ஆபத்தான பேர்வழியாக நோர்வே அதிகாரிகள் கண்டு வந்திருக்கின்றனர். இலங்கையில் பயங்கரவாதத்தை நிலைநாட்ட நோர்வே முயல்கின்றது என்று குற்றம் சாட்டி வந்திருக்கின்றார். கனடாவின் தலைநகர் ரோரன்ரோவுக்கு சென்று இக்குற்றச்சாட்டை முன்வைத்து சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்களுடன் பேசி இருக்கின்றார். சிங்கள கடும் போக்காளர்களிடம் இருந்து இவருக்கு பணம் கிடைக்கப் பெற்று வந்திருக்கின்றது என நோர்வேயின் பிரதான புலனாய்வு அமைப்பு நம்புகின்றது. அத்துடன் இவரை இலங்கை அரசு ஆதரித்து வந்திருக்கின்றது எனவும் விசுவாசிக்கின்றது. Falk Rune Rovik இன் விமர்சனங்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் வெளியாகி வந்திருப்பது இப்புலனாய்வு அமைப்பை உஷார்ப்படுத்தி இருந்தது. மொத்த்த்தில் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துகின்ற நோர்வேயின் முயற்சிக்கும், எரிக் சொல்ஹெய்மின் உயிருக்கும் Falk Rune Rovik ஆல் உயிராபத்து காணப்படுகின்றது என புலனாய்வு அமைப்பு முடிவெடுத்து இருந்தது.

No comments:

Post a Comment