Tuesday, December 20, 2011

சரியாக நடிக்காத படியால் கன்னத்தில் அடிவாங்கியும் தளராத அபிஷேக் பச்சன்

இந்நிலையில் இந்தியாவின் பத்திரிக்கையான இந்தியா டுடே நடத்தும் இளைஞர் மாநாடு 2011(Youth summit) நிகழ்ச்சிக்காக இன்று(10.12.2011) பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சென்னை வந்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன் பேசுகையில், தனுஷ் நடித்த திரைப்படங்கள் முழுவதையும் பார்த்தேன். அபார நடிப்புத்திறமை கொண்டவராக செயற்படுகிறார்.

நான் தனுஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்போது சொல்கிறேன் தனுஷ் சம்மதித்தால் அவர் இயக்கத்தில் நடிக்கத் தாயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, நான் நடித்த 17 திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன. ஆனாலும் இன்று இத்துறையில் கம்பீரமாக வலம் வருகிறேன். பெரிய நடிகன் என்ற நினைப்பு எனக்குக் கிடையாது. என்னை நானே சுய விமர்சனம் செய்து கொள்வதால் இதைத் தெரிவிக்கிறேன்.

என் வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை நினைவு கூற விரும்புகிறேன். நான் நடித்த திரைப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு சென்றேன். திரைப்படம் முடிந்து வெளியில் வந்த பொழுது ஒரு பெண் என் கன்னத்தில் அறைந்து விட்டு உன் தந்தைக்கு இருக்கும் பெயரை அசிங்கப்படுத்தாதே என்று திட்டினார்.

அன்று தான் உண்மையாகவே நான் எவ்வளவு கேவலமாக நடிக்கிறேன் என்று தெரிந்தது. தூக்கம் வராமல் நடு இரவில் என் தந்தையை எழுப்பி, எனக்கு என் மீதே வெறுப்பாக இருக்கிறது. பேசாமல் வேறு வேலை செய்யட்டுமா? என்று கேட்டேன் அதற்கு அவர், உன்னை நீயே விமர்சித்துக் கொள். அதை செய்யாமல் எந்த முடிவையும் எடுக்காதே என்று கூறினார். அந்த பதில் என் தவறுகளை அறியத் தூண்டியது.

உடனடியாக எனது அனைத்து திரைப்படங்களையும் பார்த்து கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட நோட்டுகளில் என் தவறுகளைக் குறித்துக் கொண்டேன். இளைஞர்களுக்கு இதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன்.

உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள் தவறை அறிந்து கொள்ளாமல் மற்ற வேலைகளை நாடாதீர்கள் அதுவும் தவறாகவே நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment