Saturday, November 26, 2011

‘ராஜீவ் காந்தி ஒரு துரோகி’ - தயாரிப்பாளர் புகழேந்தி


இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக சர்வதேசத்திற்கு பொய் கூறிவரும் சிங்கள தலைவர்களின் முகத்திரையை கிழிப்பதற்கான கருவியே உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் என்கிறார் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி மேலும் தெரிவிக்கையில்,

புனிதவதி என்ற அந்தச் சிறுமி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரிகளின் அடையாளம் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், இந்தியாவிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்,

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த வேளையில் பிரபாகரனிடமிருந்து ஆயதங்களை வாங்கிவிட்டு பிரபாகரனையும் தமிழர்களையும் கொல்வதற்கு எதிரிகளுக்கு ஆயுதங்களை கொடுக்கவில்லையா? என கேள்வியெழுப்பியுள்ளார்

“நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம் என்ற கேள்விக்கே இடமில்லை. எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரினதும் முழுப்பாதுகாப்பை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” என்று மிகவும் தெளிவாக ஒரு குழந்தைக்கு புரிகிற மொழியில் பிரபாகரன் பேசியதாக உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகழேந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கூறிய பிரபாகரனை முதுகில் குத்தி ரஜீவ்காந்தி துரோகம் செய்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்ட போது, தமிழ்மக்களை இந்தியா போய் காப்பாற்றியதா? தாக்குதல்களைத்தான் நிறுத்தினார்களா? அவர்களது நோக்கம் என்னவாக இருந்தது?

பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைத்து 20ஆவது நாள் பிரபாகரனை தீர்த்துக் கட்ட எதிரிகளுக்கு சொல்லியது யார்?

இந்தத்துரோகத்திற்கு யார் பதில் சொல்வது? இந்த துரோகத்திற்கு யார் பின்னணியில் இருந்தது. எல்லாம் ராஜீவ் காந்தியின் வழிகாட்டலிலே என தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் புகழேந்தி.

இலங்கையின் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கொல்லப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் எடுத்தார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment