Thursday, October 6, 2011

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பு! ஊடகவியலாளர்களுக்கு கதவடைப்பு!!


யாழ்.பல்கலைக் கழகத்தின் வரலாற்றில் பென் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுக் கடமையை பேராசிரியரும் செல்வியுமான வசந்தி அரசரெட்ணம் செய்துள்ளார்.

அந்த வரலாற்றுக் கடமையானது இன்று வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தின் 27வது பொதுப்பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவைப் பதிவு செய்வதற்கும் நிகழ்வுகளை பற்றிய குறிப்புகளை எடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்க முடியாது என அறிவித்தல் விடுத்துள்ளார்.

யாழ்.கல்விச் சமூகத்தின் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு ஏன் அனுமதி வழங்க வில்லை என அவரிடம் வினாவியபோது தொடர்புகளைத் துண்டித்துள்ளார்.

பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் யாழ்.பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இன்னமும் ஒரு வருடம் கூட ஆகவில்லை ஆனால் அவர் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் மதித்து நடப்பதாக தெரியவில்லை.

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் பதிவு செய்வதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதி மறுப்புக்கு என்ன காரணம் என்பதை ஊடக நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களுக்கு இருக்கிறது என்பதை அவர் நினைவில் கொள்ளவேண்டும்.

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த கத்துரு சிங்காவுடனும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியுடனும் நின்று புகைப்பட ஊடகவியலளர்களுக்கு போஸ் கொடுக்கும் நீங்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வியைக் கற்று அதன் முக்கிய நிகழ்வுகளை மாணவர்கள் பதிவு செய்வதற்கும் ஊடகவியலாளர்கள் பதிவு செய்வதற்கும் அனுமதி மறுத்திருப்பது எந்த வகையில் நியாயமானது.

எந்த அரசியல் பின்னணியில் நீங்கள் கடமையாற்றுகின்றீர்கள் என்பது நீங்கள் உபவேந்தராக யாழ்.பல்கலைக் கழகத்திற்கு தெரிவானது முதல் இன்று வரை யாழ்.கல்விச் சமூகத்திற்கு தெளிவாக தெரிகிறது.

எதிர்காலத்தில் அரசியல் பாதையில் பயணிப்பதற்கு இப்பவே தயார் செய்கின்றீர்கள் போல தமிழ் மக்களுக்கு தென்படுகிறது உண்மைகள் எப்பவும் மூடுமந்திரங்களாக இருக்கமுடியாது என்ற உண்மையைக் கூறிவைக்க விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment