Saturday, March 5, 2011

நேரம் பார்த்து கல்லெறிந்த சிங்கமுத்து



நேரம் பார்த்து கல்லெறிவது என்பது இதுதான் போலிருக்கிறது. சிங்கமுத்துவுக்கும் வடிவேலுவுக்கும் சண்டை பற்றிக் கொண்டு கோடம்பாக்கமே பொறி பறந்தது.

இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வது கலையுலகத்திற்கு நல்லதல்ல என்று நினைத்த நல்லவர்கள் சிலர், இருவருக்கும் இடையில் சமாதானம் செய்ய முயன்றார்கள்.
இனிமேல் என்னை பற்றி அவரும் பேசக்கூடாது.



நானும் பேச மாட்டேன் என்று பெரியவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து அமைதியாகிவிட்டார்கள் இருவரும். இப்போது அந்த அமைதியை முதலில் கிழித்திருக்கிறார் சிங்கமுத்து.

தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் சிலரிடம், தேர்தல் நேரத்தில் விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிடுவேன்னு சொன்னாரே, இப்போ அதை பற்றி யாரும் கேட்க மாட்டீங்களா? என்று கிளறிவிட்டாராம்.

மறந்து போன ஒரு விஷயத்தை நினைவுபடுத்திய சிங்கமுத்துவுக்கு நன்றி சொல்லிவிட்டு உடனே வடிவேலுவை தொடர்பு கொண்டார்கள் நிருபர்கள். நல்லாதானே போயிட்டு இருந்திச்சு. எதுக்கு புழுதிய கிளப்பிவிடுறாய்ங்க என்று அதிர்ந்து போய்விட்டாராம் வடிவேலு.

No comments:

Post a Comment