Tuesday, March 8, 2011

உலகக்கோப்பையால் ஷகிலாவுக்கு வந்த மவுசு!!!


உலககோப்பை கிரிக்கெட் மற்றும் பொதுத்தேர்வுகளால் புதுப்படங்கள் ரிலீசாகவில்லை வந்த சில படங்களும் தியேட்டரை விட்டு ஓடி விட்டன. இதனால் புறநகர் பகுதிகளில் ஷகிலாவின் படங்களையும் வயது வந்தோருக்கான படங்களையும் தூசு தட்டி ஓட விடு கின்றனர். ஓரளவு கல்லா நிரம்புகிறதாம்.
உலகக் கோப்பை கிரிக்கெட், தேர்வுகள் மற்றும் தொடர்ந்து வெளியாகும் அடாசு படங்கள் காரணமாக, மீண்டும் பழைய பிட்டு படங்களை தூசி தட்டி, புதிய தலைப்புக்களுடன் புது போஸ்டர்கள் அடித்து ஒட்ட ஆரம்பித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இப்போதும் சி கிரேடு செக்ஸ் படங்கள் தயாராகின்றன.
இவற்றில் வேண்டிய இடத்தில் பிட்டை சொருகி ஓட்டிக் கொள்வார்கள். இப்போது அந்தப் படங்களை அதிகமாக தேடிப் பிடித்து வாங்குகின்றன திரையரங்குகள். இப்போது தப்பு, தேவதாசியின் காதல் உள்ளிட்ட சில படங்கள் ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளன.
இவை தவிர, மலையாளப் படம் என்ற பெயரில் அம்முகுட்டி, காதல் ரகசியங்கள் என்றெல்லாம் தலைப்பிடப்பட்டு பல படங்கள் புரநகர்ப் பகுதிகளில் வெளியாகியுள்ளன.புதிய படங்களைப் போட்டாலும் பார்க்க ஆளில்லை.
ஆட்களை இழுக்கும் அளவுக்கு சரக்கோடு படமெடுப்பதும் இல்லை. தினமும் 80 சதவீத காலி இருக்கைகளுடன் ஷோ ஓட்ட முடியாத நிலை. எங்களுக்கு இப்போது இந்தப் படங்கள்தான் கை கொடுக்கின்றன. முதலீடும் குறைவு. தியேட்டரைக் காப்பாற்றுமளவு வருவாய் வருகிறது," என்கிறார் ஒரு தியேட்டர்காரர்.

No comments:

Post a Comment