Wednesday, March 16, 2011

ஸ்கூட்டர் ஓட்டும் அதிசய நாய்க் குட்டி! (வீடியோ இணைப்பு)


அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் கன்ரொன் நகரத்தில் பெண் ஒருவரால் வீட்டில் வளர்க்கப்படுகின்ற நாய்க் குட்டி ஒன்று ஸ்கூட்டர் வாகனத்தை ஓட்டுகின்றது.

இந்நாய்க் குட்டி Briard என்கிற நாய் இனத்தைச் சேர்ந்தது. வயது 20 மாதங்கள்.

சிறுவயதில் இருந்தே ஸ்கூட்டர் வாகனம் மீது இக்குட்டிக்கு அலாதிப் பிரியமும் ஒரு வகை ஈடுபாடும்.

ஸ்கூட்டர் வாகனம் மீது நாய்க் குட்டி வைத்திருக்கும் அலாதிப் பிரியம், ஈடுபாடு ஆகியவற்றை உணர்ந்து கொண்ட எஜமானர் ஸ்கூட்டி வாகனத்தை ஓட்ட இக்குட்டிக்கு கற்றுக் கொடுத்தார்.

தனியாக, சுயமாக இவ்வாகனத்தை ஓட்ட குட்டி கற்றுக் கொண்டது. தனியாக, சுயமாக இவ்வாகனத்தை ஓட்டுகின்றது. Briard இன நாய்கள் மிகவும் புத்திசாலித்தனம் மிக்கவை.

No comments:

Post a Comment