
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பூலரேவு கிராமத்தில் ஒரிசாவைச் சேர்ந்த மீனவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குல வழக் கப்படி திருமணத்தின்போது பெண்களுக்கு ஆண்கள் தாலி கட்டுவதுபோல பெண்களும் ஆண்களுக்கு தாலி கட்டி 3 முடிச்சுப் போடுகிறார்கள்.
திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்கும் பழக்கம் இல்லை.மணமக னுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்கிறார்கள்.மேலும் திருமணத்தை தனித்தனியாக நடத்த மாட்டார்கள்.
3 ஆண்டுக்கு ஒரு முறை ஊரில் பிரமாண்ட பந்தல் அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்
கள். கடந்த முறை 2008-ம் ஆண்டு நடந்த திருமண விழாவில் 102 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இந்த ஆண்டு 110 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. இவ்விழா நாளை இரவு நடக்கிறது. இதனால் பூலரேவு கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
No comments:
Post a Comment