Saturday, March 5, 2011

மினி பின்லேடன்!(வீடியோ இணைப்பு)

இந்தப் படங்களில் காணப்படும் குள்ள மனிதரும் ஒரு பயங்கரவாதியாம். இணையத்தளங்கள் வாயிலாக இவர் தற்போது ஆயிரக்கணக்கானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

யூடியுப் உட்பட சில சமூக இணையத்தளங்களில் இவர் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏனைய சகாக்களுடன் நிற்கும் போது அவர்களின் இடுப்பளவை விட இவரின் உயரம் குறைவு. ஏகே47 துப்பாக்கியை நேராக வைத்தால் அது இவரின் தோளுக்கு மேலாக தலைக்கு அருகில் நிற்கும்.



ஆப்கானிஸ்தானின் ஒரு பாலைவனப் பிரதேசத்தில் உள்ள பயங்கரவாதிகளோடுதான் இவரும் காணப்படுகின்றார். முகச் சாயல் கிட்டத்தட்ட ஒஸாமா பின் லேடன் போலவே உள்ளது.
மினி பின்லேடன் “ என்று தான் இவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பயங்கரவாதியாக இருப்பதற்கு உயரம் ஒரு முக்கிய விடயம் அல்ல. ஒரு துப்பாக்கியின் விசையை அழுத்த உயரம் ஒரு பிரச்சினையல்ல என்று இவர் பற்றி பயங்கரவாத நிபுணர் ஒருவரும் எச்சரித்துள்ளார்.

தற்கொலைப் போராளிகளாக சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் காட்சிகளும், அவர்களுள் ஒரு சிறுவன் தன்னை ஒரு சோதனைச் சாவடியில் வெடிக்க வைக்கும் காட்சிகளும் இதனோடு சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன

No comments:

Post a Comment