Friday, March 18, 2011

ஆசியாவை அதிரவைக்கும் குறுந்தகவல் : எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரிக்கை _


ஜப்பானின் அணுக் கசிவு தொடர்பில் போலியான செய்தியுடன் குறுந்தகவலொன்று பரவி வருவதாகவும் இது ஜப்பான் மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தேவையற்ற குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.பி.சி. ஊடக சேவையின் பெயரில் இக் குறுந்தகவல் செய்தி வெளியாகியுள்ளது.

அத் தகவல் வருமாறு :

BBC Flash news : Japan Government confirms radiation leak at Fukushima nuclear plants. Asian countries should take necessary precautions. If rain comes, remain indoors first 24 hours. Close doors and windows. Swab neck skin with betadine where thyroid area is, radiation hits thyroid first. Take extra precautions. Radiation may hit Philippine at around 4 pm today. If it rains today or in the next few days in Hong Kong. Do not go under the rain. If you get caught out, use an umbrella or raincoat, even if it is only a drizzle. Radioactive particles, which may cause burns, alopecia or even cancer, may be in the rain.

இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில்:

ஜப்பானில் அணுக் கசிவானது அந்நாட்டு அரசினால் உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கவனமாக இருக்கவும். மழை பெய்தால் முதல் 24 மணித்தியாலமும் வீட்டுக்குள்ளேயே இருக்கவும்.கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைத்திருக்கவும். கதிர்வீச்சானது தைரோயிட் பகுதியினையே முதலில் தாக்குவதாகவும் அதனால் கழுத்துப்பகுதியினை பாதுகாக்கவும் என அச் செய்தி தொடர்கின்றது.

எனினும் இது போலியான செய்தி எனவும் தாங்கள் இதனை அனுப்பவில்லையெனவும் பி.பி.சி தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இக் குறுந்தகவல் போலியாதென அறிவித்துள்ளது.

அத்துடன் விஷமிகள் இது போன்ற குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக இணையத்தாக்குதல் நடத்தலாம் எனவும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது
17 Mar 2011

No comments:

Post a Comment