
Tuesday, March 15, 2011
ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிர்ந்து போன அமெரிக்க மீன்கள்
இது ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் விளைவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். வடஅமெரிக்க நாடான மெக்சிகோவின் கெரரோ மாநிலத்தில் உள்ள கடலோர நகரம் அகாபல்கோ.
மீன் பிடி தொழில், சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகளவில் நடக்கும் இடம். மீனவர்கள் கடலுக்குள் சிறிது தூரம் சென்று மீன் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் படகுகளுடன் புறப்பட்ட அவர்களுக்கு அதிர்ச்சி. கடலோரத்தை ஒட்டியே ஏராளமான மீன்கள் கூட்டம் கூட்டமாக சுற்றின.
பல்லாயிரக்கணக்கான மீன்கள் சேர்ந்து ஒரு தொகுப்பாக நகர்ந்துகொண்டிருந்தன. தகவல் பரவியதில் மக்கள் பலர் வேடிக்கை பார்த்தனர். கொத்துக் கொத்தாய் பலரும் மீன்களை அள்ளிச் சென்றனர்.
இது ஜப்பான் பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியின் விளைவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஜப்பானுக்கும், அகாபல்கோவுக்கும் இடையே 11 ஆயிரம் கி.மீ தூரம் உள்ளது. விமான பயணம் 14 மணி நேரத்துக்கும் மேல்.
ஆனால் ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே கடல் வழியாக இந்த அதிர்வு பரவியுள்ளது. மெலிதான அதிர்வால் அச்சமடைந்தே மீன்கள் கூட்டமாக சுற்றியிருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
முதலை கழுத்தில் சிப் இதற்கிடையில் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடு, இயற்கை பேரிடர், நன்செய் நிலங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய அமெரிக்க விஞ்ஞானிகள் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு முதலைகள் முக்கிய கருவிகளாக பயன்படுத்தப்பட்டன. ஒரே ஆராய்ச்சியில் பல்வேறு கண்காணிப்புகள் என்பது ஆய்வின் நோக்கம்.
இந்த ஆய்வில் முதலைகள் குறித்த ஆய்வும் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முக்கியக் குறிக்கோள் நன்செய் நிலங்கள் பாதுகாப்பு என்பதும் ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இதில் முதலையின் கழுத்துப் பகுதியில் ஒரு சிறிய சிப் பொருத்தப்படும். இந்த மைக்ரோ சிப் சாடிலைட் மூலம் கண்காணிக்கப்படும். முதலைகள் நகரும் இடங்களில் ஏற்படும் வானிலை மாறுபாடுகள், இயற்கை பேரிடர்கள் குறித்து சாடிலைட் மூலம் கண்காணிக்கப்பட்டு தெரியவரும் விவரங்கள் அந்தந்த பகுதிகளுக்கு தெரிவிக்கப்படும்.
இதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பெரும் சேதம் தவிர்க்கப்படும். முதலைகள் மூலம் இத்தகைய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவது உலகில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment