Sunday, March 13, 2011

கடாபியின் விமானக் குண்டு வீச்சிலிருந்து தப்பிய பரபர நிமிடங்கள்! விளக்குகிறார் பிரபல பத்திரிகையாளர் (படங்கள் இணைப்பு)

லிபியாவில் இடம்பெற்று வரும் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற சன் குழுவுக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை அவர்கள் விவரித்துள்ளனர்.
ராஸ் லானுப் என்ற பிரதான எண்ணெய் ஏற்றுமதித் துறைமுகத்துக்கு அருகில் தான் இந்தப் பயங்கர அனுபவம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஊடகவியலாளர்கள் குழு ராஸ் லானுப் துறைமுகத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் நின்ற போது அவர்களுக்கு மேலாக சீறிப்பறந்த கடாபியின் யுத்த விமானம் அதிலிருந்து ஏவுகணைகளை விசியது.
ஒலிவர் ஹாவி என்ற செய்தியாளர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் அன்று காலையில் சில போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேசியிருந்தோம்.
இந்தத் துறைமுகத்தின் மீது சரியாக இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டால் அதனைச் சுற்றி 15 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ள எல்லாமே பஸ்பமாகிவிடும் என்று ஒரு தொலைக்காட்சி நிபுணர் கூறியது எனது நினைவுக்கு வந்தது.

சூரிய ஒளியின் பின்னணியில் அந்த குண்டு வீச்சு விமானத்தை அண்ணாந்து பார்ப்பது கூட கஷ்டமாகத்தான் இருந்தது. உடனடியாக எனது முகத்தை மணலுக்குள் புதைத்துக் கொண்டேன். ஒரு சில நிமிடம் எனது உடம்பு மூளை எல்லாமே ஸ்தம்பித்துப் போய்விட்டன.

நான் இருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் வெறும் தூசு மண்டலம் தான் எனக்குத் தெரிந்தது. குண்டு போடப்பட்டது என்று சன் படப்பிடிப்பாளர் டேன் சரிட்டி கத்தியதும் எனது காதுகளில் விழுந்தது.

விசர்நாய் கடாபி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கும் குண்டு வீசிவிட்டானா என்று என் மனம் குமுறியது. ஆனால் அந்த இக்கட்டிலும் கிளர்ச்சிப் படையினர் துணிச்சலோடு செயற்பட்டனர். அவர்கள் எம்மை நொக்கி ஓடி வந்து எம்மைப் பற்றி அக்கறையோடு விசாரித்தனர்.

வீசப்பட்ட குண்டில் அதிர்ஷ்ட வசமாக வெடிக்கும் பொருள்கள் எதுவும் இருக்கவில்லை. ஒருவேளை அந்த விமானிக்கே தெரியாமல் அதை விமானத்தில் பொருத்திய தொழில்நுட்பவியலாளர் அதில் தேவையானவற்றை இணைக்காமல் விட்டிருக்கவும் கூடும்.

கிளர்ச்சிப் படையினர் மீது அனுதாபத்தில் இவ்வாறு செய்திருக்கலாம். எவ்வாறாயினும் இது ஒரு கடுமையான எச்சரிக்கை. வேண்டுமானால் அந்த எண்ணெய் களஞ்சிய இலக்கைத் தாக்கியிருக்கலாம்.

அவ்வாறு தாக்கியிருந்தால் அதன் விளைவுகளை நினைத்துப் பார்ப்பது கூட கஷ்டம்.எப்படியோ வீசப்பட்ட குண்டின் விளைவாக நகரின் பிரதான பாதை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் கடும் மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

No comments:

Post a Comment