Wednesday, March 16, 2011
ஒன்ராறியோ பெண்ணின் மேலாடை, பிரா கிழிக்கப்பட்டதாக ஒட்டாவா பொலிஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு! (காணொளி, பட இணைப்பு)
2008 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை பாலியல் ரீதியாகத் தாக்கினார் என்று ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் பெண்ணின் மேலாடை மற்றும் பிரா என்பன கிழிக்கப்பட்ட நிலையில் கண்கானிப்புக் கெமரா காட்சிகள் அமைந்துள்ளன.
ஒன்ராறியோவின் விஷேட விசாரணைப் பிரிவினர் கடந்தாண்டில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஸ்டாஸி பொன்ட் என்ற சம்பந்தப்பட்டப் பெண் 2008 செப்டம்பர் 6ம் திகதி மதுபாவனை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.
சமாதான அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகவும் இந்தப் பெண்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆனால் இவரை விசாரணைக்கு உட்படுத்திய போது பொலிஸார் முறைகேடாக நடந்துள்ளமை பாதுகாப்புக் கமராவின் படக் காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஒட்டாவா பொலிஸாருக்கு எதிராக இந்தப் பெண் 12லட்சம் டொலர் நட்டஈடு கோரி தனியான வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
தன்மீது நடத்தப்பட்ட விசாரணை கிட்டத்தட்ட சித்திரவதைக்கு சமனானது என்று ஸ்டாஸி பொன்ட் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண்ணின் கைது மற்றும் அவர் மீதான விசாரணை என்பனவற்றில் சட்டவிதிமுறைகள் மீற்ப்பட்டு உள்ளதாக விஷேட விசாரணைப் பிரிவும் கருதுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment