
7 கூன் மாஃப்... ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் படம். ப்ரியங்காவைவிட இதன் இயக்குனர் முக்கியமானவர், விஷால் பரத்வாஜ், மெக்பூல், ஓம்காரா போன்ற அற்புதப் படங்களை இயக்கியவர்.
இந்தப் படத்தில் ஏழு பேரை திருமணம் செய்து கொண்டவராக வருகிறார் ப்ரியங்கா. அதனால் படத்தின் முழுக் கதையும் இவரைச் சுற்றியே வருகிறது. ப்ரியங்காவின் முதல் கணவராக நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். ஹீரோயின் ஓரியண்ட் கதையில் ஏழில் ஒருவராக நடிக்க எப்படி நீல் நிதின் ஒத்துக் கொண்டார்?
இப்படம் ப்ரியங்காவை மையமாக வைத்து உருவானது என்பது உண்மைதான். ஆனாலும் நாங்கள் ஏழு பேரும் இல்லாமல் இந்தப் படம் முழுமையடையாது. அதனால் கணவர்களாக வரும் எங்கள் ஏழு பேருக்குமே முக்கியத்துவம் உள்ளது.
படத்தின் புரமோஷனுக்கு ஏழு கணவர்களும் இடம் பெற வேண்டும் என விரும்பினாராம் விஷால் பரத்வாஜ். ஆனால் அது இயலாமல் போனது. ஏழு பேரை ஒன்று சேர்ப்பது கடினம்தான் என்றார் வருத்தத்துடன்.
ப்ரியங்கா எப்படி சமாளித்தாரோ?
No comments:
Post a Comment