

டிகை அசின் பல படங்களில் கவர்ச்சிக்கு மறுப்பு சொல்லி வந்தார்.
தமிழில் குடும்ப பாங்கான கேரக்டர்களிலும், மாடர்ன் டிரெஸ்களிலும் மட்டுமே நடித்தார். இந்தியிலும் அதே கட்டுப்பாட்டுக்குள்ளே இருந்தார்.
'கஜினி', 'லண்டன் டிரீம்ஸ்' படங்களில் கவர்ச்சி காட்டவில்லை. நிறைய படங்களில் கவர்ச்சியாக நடிக்க கேட்டு வந்தனர்.
அவைகளை மறுத்து விட்டார். இப்படிப்பட்ட அசின் தற்போது திடீரென கவர்ச்சிக்கு மாறி உள்ளார். அவர் நடிக்க உள்ள 'ஹவுஸ்புல்' இந்தி படத்தில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்துள்ளார்.

சக நடிகைகள் ஆடை குறைப்பு செய்து ஆபாசமாக நடிப்பதால் போட்டிகளை சமாளிக்க கவர்ச்சிக்கு குதித்துள்ளார்.
அசின் நீச்சல் உடையில் நடிப்பதை ஒப்புக்கொண்டதும் படத்தின் தயாரிப்பாளர் சஜீத் நடியட் வாலாவும் உறுதிபடுத்தினார்.
அவர் கூறும்போது படபிடிப்பு இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகளில் நடக்கிறது. கதைக்கு தேவை என்பதால் நீச்சல் உடையில் நடிக்க அசின் சம்மதித்தார் என்றார்.
No comments:
Post a Comment