
உலக வரலாற்றில் தனிச் சிறப்பு வாய்ந்த இத் திரைப்படம் முழுமையாக எமது தளத்தில் பிரசுரிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. எல்லாளன் முழுமயான காணொளி
இலங்கையின் அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அந்த இயக்கத்தின் கலைஞர்களின் நடிப்பில் வெளியான எல்லாளன் திரைப்படம் எதிர்வரும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் படங்களில் ஒன்றாக திரையிடப்பட உள்ளது.

இவ்வாண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா அடுத்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் இடம்பெற உள்ளது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வரும் பாடல் ஆசிரியர் சிவலிங்கம் வசீகரனின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெறுகின்றது. விழாவில் திரையிடப்படுகின்றமைக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் 17 திரைப் படங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன. 1. எந்திரன்
2. அங்காடித் தெரு
3. களவாணி
4. மதராசபட்டினம்
5. ஆடுகளம்
6. மைனா
7. பாஸ் என்கிற பாஸ்கரன்
8. விண்ணைத்தாண்டி வருவாயா
9. யுத்தம் செய்
10. தா
11. பயணம்
12. தென்மேற்கு பருவக்காற்று
13. என் சுவாசம்
14. எங்க வீட்டுப் பிள்ளை
15. கப்பல் ஓட்டிய தமிழன்
16. செங்கடல்
17. எல்லாளன்
இவற்றில் எல்லாளன், செங்கடல் ஆகிய திரைப் படங்கள் சிறப்புப் பிரிவில் காண்பிக்கப்படுகின்றன.
எல்லாளன் படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆவர்
இவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் விமானப் படைத் தாக்குதல் தத்ரூபமாக காண்பிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட நிஜ ஆயுதங்கள் திரைப் படத்தில் காண்பிக்கப்படுகின்றன. தாக்குதலுக்கு முன்னர் இயக்க உறுப்பினர்கள் பெற்றுக் கொண்ட நிஜப் பயிற்சிகளும் படக் காட்சிகளில் இடம்பெறுகின்றன.
திரைப்படத்துக்கான ஒளிப் பதிவை இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த கலைஞர் சந்தோஷ் மேற்கொண்டு இருக்கின்றார்
No comments:
Post a Comment