
நகை, பணம் திருடிய வீட்டிலேயே திருடர்கள் கறிக்குழம்பு, பாயாசம் சமைத்து சாப்பிட்டனர். மேலும் தங்களது பேண்ட்களை கழற்றி போட்டு விட்டு புதிய பேண்ட்களை அணிந்து சென்றனர்.
இந்த ருசிகர சம்பவம் இந்தியாவின் பெங்களூர் பிரதேசத்தின் மங்களூர் அருகே நடந்துள்ளது. வீட்டின் ஓட்டை பிரித்து... தட்சிண கன்னடா மாவட்டம் பரங்கிபேட்டையில் பன்ட்வால் பழைய மெயின் ரோட்டில் வசிப்பவர் முசிராபானு.
நேற்று முன்தினம் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் வெளிïரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது இரவில் யாரோ மர்மநபர்கள் இவரது வீட்டின் ஓட்டை பிரிந்து உள்ளே புகுந்து உள்ளனர்.
பின்னர் அங்கு பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், தங்க நகைகளை திருடி உள்ளனர். கறிக்குழம்பு சமைத்தனர் குளிர்சாதன பெட்டியில் ஆட்டுக்கறி இருந்துள்ளது.
பசியாக இருந்த திருடர்கள், அந்த ஆட்டுக்கறியை எடுத்து சமைத்து சாப்பிட்டு உள்ளனர். மேலும், முந்திரி பருப்பை எடுத்து பாயாசம் தயார் செய்து குடித்து இருக்கிறார்கள். அதன்பிறகு பீரோவில் இருந்த புதிய ஆடைகளை பார்த்து உள்ளனர்.
அதில், தங்களுக்கு பிடித்தமான பேண்ட்களை எடுத்த திருடர்கள், தங்களது பேண்டை கழற்றி அங்கேயே போட்டு விட்டு, புதிய பேண்ட்களை அணிந்து உள்ளனர்.
மேலும் 2 வீடுகளில்... பின்னர் அவர்கள் அருகில் உள்ள மம்தாஜ் என்பவரது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து, பீரோவை திறந்து பார்த்து உள்ளனர்.
ஆனால், அங்கு நகை, பணம் எதுவும் இல்லை. எனவே பீரோவில் இருந்த துணிகளை எல்லாம் வெளியில் தூக்கி எறிந்து உள்ளனர். அதன்பிறகு இன்னொரு வீட்டிலும் திருட முயன்று, அங்கும் ஒன்றும் கிடைக்காததால் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து பன்ட்வால் கிராமப்புற போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நகை, பணத்தை திருடிய வீட்டிலேயே திருடர்கள் கறிக்குழம்பு, பாயாசம் சமைத்து சாப்பிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
Share0
No comments:
Post a Comment